உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீர் தேர்தலை சீர்குலைக்க சதி; குகையில் பதுக்கிய ஆயுதங்கள்: பறிமுதல் செய்தது ராணுவம்

காஷ்மீர் தேர்தலை சீர்குலைக்க சதி; குகையில் பதுக்கிய ஆயுதங்கள்: பறிமுதல் செய்தது ராணுவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, எல்லையில் 10 அடி நீள குகையில் பதுக்கப்பட்டிருந்த ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் மீட்டனர். ஜம்மு - காஷ்மீரில், மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு, வரும் 18, 25 மற்றும் அக்., 1ல் மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அக்., 8ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதனால் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=s3oxjbv9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எல்லையில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். எல்லையில் பயங்கரவாதிகள் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக, சிறப்புத் தேர்தல் பார்வையாளர் மற்றும் புலனாய்வுக் குழுக்கள் மூலம் இந்த உளவுத் தகவல் கிடைத்தது.

இவ்வளவு ஆயுதங்களா?

குப்வாரா மாவட்டம், கெரான் செக்டாரில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளின் மறைவிடத்தை முறியடித்து, மிகப்பெரிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை மீட்டனர். தேர்தலுக்கு முன்பு அச்சத்தையும் பீதியையும் உருவாக்கும் நோக்கில் பரபரப்பான தாக்குதல்களை நடத்த இந்த ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரிந்தது. இதனால் தேர்தலை சீர்குலைக்க பயங்கரவாதிகள் தீட்டிய சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது என பாதுகாப்பு படை உயர்அதிகாரி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

SIVAN
செப் 12, 2024 14:12

தேர்தல் சரியாக மஹாளய பக்ஷத்தில் நடக்கிறது. எவனும் ஒன்னும் செய்ய முடியாது


rsudarsan lic
செப் 12, 2024 13:14

This is the chance to annexe Pakistan occupied Kashmir


Srinivasan Krishnamoorthi
செப் 12, 2024 12:01

ஆயத்தங்கள் எந்த நாடு தயாரிப்பு அதில் உள்ள நம்பர் எந்த நாட்டுக்கு விற்க பட்டது அந்த நாட்டின் மீது இந்தியா ராணுவ நடவடிக்கை என்பதல்லாம் நடக்காதா ?


seshadri
செப் 12, 2024 11:20

இதில் உமர் அப்துல்லா, பாரூக் அப்துல்லா மற்றும் ராகுல் காந்தி இவர்களுக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று தீவிர விசாரணை தேவை.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 12, 2024 11:14

பாரதத்துக்கு எதிராக மாபெரும் நெட்வொர்க் செயல்படுகிறது ........ நாம் நினைப்பதைவிட அது ஆபத்தானது ......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை