உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூகுள் மேப் பார்த்து ஓட்டியதால் மார்க்கெட்டுக்குள் புகுந்த லாரி

கூகுள் மேப் பார்த்து ஓட்டியதால் மார்க்கெட்டுக்குள் புகுந்த லாரி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து டவுசாவுக்கு, 10 சக்கரங்களை கொண்ட பெரிய லாரியை ஓட்டிச் சென்ற டிரைவர், வழி தெரியாததால் கூகுள் மேப் உதவியுடன் சென்றார்.ஆழ்வார் பகுதியில் சென்றபோது, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வேறு பாதையை கூகுள் மேப் காட்டியதால், அங்குள்ள மிகவும் பரபரப்பான துங்கா மார்க்கெட்டுக்குள் லாரி புகுந்தது.மிக குறுகலான பாதையில் சிக்கியதோடு, லாரி மோதியதால் அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட கடைகள், வாகனங்கள் சேதமடைந்தன. கூகுள் மேப்பை நம்பி, தவறான ரூட்டில் வந்ததை அறிந்த லாரி டிரைவர், அங்கிருந்து ஓடி விட்டார்.மார்க்கெட்டில் புகுந்த லாரியால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.வியாபாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில், அதிகாரிகளும், போலீசாரும் வந்து, கிரேன் வாயிலாக லாரியை அப்புறப்படுத்தினர் ஏழு மணி நேரம் நீடித்த களேபரத்துக்கு பின், துங்கா மார்க்கெட் பகுதி சகஜ நிலைக்கு திரும்பியது.கூகுள் மேப் பார்த்து, லாரியை ஓட்டிச் சென்ற டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Karthik
பிப் 09, 2025 17:28

கூகுள் ஆண்டவரே.. அப்பாவி மக்களை காப்பாற்றுவீராக..


VENKATASUBRAMANIAN
பிப் 09, 2025 07:50

இப்போதெல்லாம் கூகுள் மேப் மூலம் கவனமாக செயல்படவேண்டும். சரியில்லை


கபில்சிங்
பிப் 09, 2025 07:45

அந்த டிரைவரையும் கூகுள் மேப்பை வெச்சே தேடறாங்களாம்.


அப்பாவி
பிப் 09, 2025 07:44

போனதுதான் பொனீங்க. ஒரு லோடு காய்கறி ஏத்திக்கிட்டு வதுடுங்க. இந்தியாவில் எல்லாமே குறைஞ்ச விலைக்கு குடுக்கிறோம்.


KRISHNAN R
பிப் 09, 2025 07:35

தேசிய சாலைக்கு மட்டுமே பயன்..அதிலிருந்து..மாறினால்... நாம் விசாரிக்க வேண்டும்


Kasimani Baskaran
பிப் 09, 2025 06:14

சாலை முகப்பில் குறுகலான சாலை என்று எச்சரிக்கை இல்லை - அதற்கும் கூகுள்தான் பொறுப்பு.


Balasubramanian
பிப் 09, 2025 06:00

ஏறக்குறைய இதே நிலை எங்களுக்கு திருப்பதியில் இருந்து பெங்களூர் திரும்பிய போது ஏற்பட்டது! காளஹஸ்தி கோயிலில் அருகே வலம் இடமாக திரும்பி ஒரு காய்கறி மார்க்கெட் உள்ளே நுழைந்து வெளியே வருமாறு காட்ட மார்க்கெட்டின் உள்ளே நுழைந்து வெளியே வருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை