உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பகவான் ஸ்ரீசத்யசாய்பாபாவின் பெருமையை சொல்லும் லேசர் ஒளிக்காட்சி: புட்டபர்த்தியில் சிறப்பு ஏற்பாடு

பகவான் ஸ்ரீசத்யசாய்பாபாவின் பெருமையை சொல்லும் லேசர் ஒளிக்காட்சி: புட்டபர்த்தியில் சிறப்பு ஏற்பாடு

புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீசத்யசாய்பாபாவின் வாழ்க்கை, அவரின் செய்தி மற்றும் அவரின் பெருமையை கொண்டாடும் வகையில் புனித சித்ராவதி நதியில் லேசர் ஒளிக்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று (நவ.,13) தொடங்கிய இந்த ஒளிக்காட்சி நவ., 23 வரை நடக்கிறது.புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில், பகவான் ஸ்ரீ சத்யசாய்பாபாவின் நுாற்றாண்டு விழா தொடங்கியுள்ளது. வரும் 24ம் தேதி வரை, 12 நாட்கள் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kbcalhjm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதில் ஒன்றாக, புனித சித்ராவதி நதியில் லேசர் ஒளிக்காட்சி நடைபெற உள்ளது.இந்த சித்ராவதி நதிக்கரையில் தான், ஸ்ரீசத்ய சாய்பாபா பிறந்த புட்டபர்த்தி நகரம் அமைந்துள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே இந்த நதி பாய்கிறது.லேசர் ஒளிக்காட்சி இன்று ( நவ.13) தொடங்கியது. பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபா பிறந்த நாளான நவ.,23 வரை, தினமும் இரவு 7:30 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்க உள்ளது. ஸ்ரீசத்யசாய்பாபாவின் வாழ்க்கை, அவரின் செய்தி மற்றும் அவரின் பெருமையை கொண்டாடும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.ஸ்ரீசத்யசாய் மத்திய அறக்கட்டளையின் ஒரு அங்கமான ஸ்ரீசத்யசாய் மீடியா மையம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.இந்நிகழ்ச்சியை காண கிளிக் செய்யவும்:https://youtube.com/shorts/Ij4NF3re7Ck?feature=share


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை