உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்; காலணி வீசிய வழக்கறிஞர் திட்டவட்டம்

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்; காலணி வீசிய வழக்கறிஞர் திட்டவட்டம்

புதுடில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், அந்த செயலுக்காக வருந்தவில்லை என்றும், இதற்காக தலைமை நீதிபதியிடம் மன்னிப்பும் கேட்கப் போவதில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் கூடியது.

சஸ்பெண்ட்

அப்போது, 71 வயதான ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர், திடீரென காலில் அணிந்திருந்த காலணியை கழற்றி, தலைமை நீதிபதி நோக்கி வீச முயன்றார்.அதற்குள் உஷாரடைந்த நீதி மன்ற காவலர்கள், உடனடியாக பாய்ந்து சென்று வழக்கறிஞரை தடுத்து நிறுத்தினர். இதனால், அவர் வீச முயன்ற காலணி தலைமை நீதிபதி மீது படாமல் கீழே விழுந்தது.உச்ச நீதிமன்ற அறையில் நிகழ்ந்த இந்த இடையூறுகளை பொருட்படுத்தாத தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், 'இது போன்ற சம்பவங்கள் என்னை ஒருபோதும் பாதிக்காது. விசாரணையை தொடருங்கள்' என, கூறி, நீதிமன்ற பணியில் மூழ்கினார். கா லணியை வீசிய உடனே, கிஷோரை கைது செய்த காவலர்கள், அவரை வெளியே அழைத்து சென்று விசாரித்தனர். ஆனால், தலைமை நீதிபதி, 'அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்' என, பதிவாளருக்கு உத்தரவிட்டார். இதனால், கிஷோரை காவலர்கள் விடுவித்தனர். எனினும், இந்திய பார் கவுன்சில் சஸ்பெண்ட் செய்து அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், தலைமை நீதிபதி மீது காலணி வீசியது குறித்து வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் நேற்று கூறியதாவது:

தலைமை நீதிபதி மீது காலணி வீசியது நானல்ல; கடவுள் தான் அதை செய்தார். இது கடவுளின் கட்டளை, ஒரு செயலுக்கான எதிர்வினை. தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் சனாதன தர்மத்தை அவமதித்து விட்டார். இதன் காரணமாகவே அவர் மீது காலணியை வீசினேன். நடவடிக்கை இதற்காக நான் வருந்தவில்லை. அவரிடம் மன்னிப்பு கேட்கப் போவதும் இல்லை. இந்திய பார் கவுன்சில் அனைத்து எல்லைகளையும் மீறி விட்டது. இந்த விவகாரம் குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு பரிந்துரைக்காமலேயே, என் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. என்னிடமும் இது பற்றி பார் கவுன்சில் விளக்கம் கேட்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னணி

மத்திய பிரதேசத்தின் கஜூராஹோவில் 7 அடி உயர முள்ள விஷ்ணு சிலையை சமூக விரோதிகள் சிலர் சேதப்படுத்தினர்.இது தொடர்பாக தாக்கல் செய்யப் பட்ட பொதுநல மனுவை விசாரிக்க தலை மை நீதிபதி பி.ஆர்.கவாய் மறுத்துவிட்டார். அத்துடன், ''எதையாவது செய்யும்படி அந்த கடவுளிடமே சென்று கேளுங்கள்,'' என கருத்து கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.அவரது இந்த கருத்து, ஹிந்துக்களின் நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் இருப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.இதைத் தொடர்ந்து, தன் கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும், தான் அனைத்து மதங்களையும் மதிப்பவன் என்றும், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் விளக்கம் அளித்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

Sampath
அக் 28, 2025 08:17

சரியான செயலுக்கு மன்னிப்பு தேவையில்லை


baala
அக் 09, 2025 10:48

அமைதியை விரும்புபவர்கள் கருத்து எழுதுவதில்லை.


Madras Madra
அக் 09, 2025 10:38

அவுரு சாமி கிட்ட போயி நீதி கேள்ன்னாரு இவுரு சாமி சொல்லி செருப்பு வீசினேன் அப்டிங்குறாரு பாவம் சாமி


சூர்யா
அக் 08, 2025 13:03

போய் அந்த கடவுள்கிட்டேயே கேட்க வேண்டியதுதானே? கடவுள்தான் சொன்னாரு நான் செஞ்சேன்! தப்பா இருந்தாலும் சரி மாதிரிதானே தெரியுது?


திகழ் ஓவியன்
அக் 08, 2025 11:22

ஜெய் ஶ்ரீராம்...


lana
அக் 08, 2025 11:08

சிலை சேதம் குறித்து கடவுளிடம் தான் முறையிட வேண்டும் என்றால் கோர்ட் எதுக்கு. கலைத்து விடுங்கள். வெட்டி சம்பளம் மிச்சம். இதே போல சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் கோவில் குறித்து முறை இட்ட போதே ஒரு நீதிபதி அடிக்கடி கோவில் குறித்து வழக்கு வருகிறது என்றார். கோவில் ஐ இந்த அறம் கெட்ட துறை ஒழுங்காக பராமரித்தால் ஏன் வழக்கு வர போகிறது. மக்கள் புரிந்து கொள்ளும் வரை இது நடக்கும்


M S RAGHUNATHAN
அக் 08, 2025 10:52

உச்ச நீதி மன்ற நீதிபதிகள் கவனத்திற்கு: நூபுர் சர்மா என்ற பெண் பிஜேபியை சார்ந்தவர் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் இசுலாமிய கருத்துக்களை விமர்சித்து அதற்கு ஆதாரமாக குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றில் இருந்து மேற்கோள் காட்டியதை மூலத்தில் இருந்ததையே எதிர்த்து அவர் மேல் நிறைய காவல் நிலையங்களில் புகார் அளிக்கப் பட்டது. அவர் உச்சநீதிமன்றத்தில் அனைத்து புகார்களையும் ஒருங்கிணைத்து ஒரு நீதிமன்றத்தில் முடிந்தால் டெல்லியில் விசாரிக்க மனு போட்டார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வானத்திற்கும் பூமிக்கும் குதித்து இவர பேச்சால் தான் நாட்டில் மத கலவரம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என்று சொன்னார்கள். அப்படி என்றால் தலைமை நீதிபதி போகிற போக்கில் ஹிந்துக்கள் மனம் புண்படும் படி பேசியது பற்றி ஏன் மௌனமாய் இருக்கிறார்கள். தலைமை நீதிபதியின் "நீங்கள் ஒரு சிறந்த விஷ்ணு பக்தர். ஆகவே நீங்கள் கடவுள் விஷ்ணுவிடம் உங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டிக் கொள்ளுங்கள்," என்று சொல்லியது சரியா என்று உங்கள் ஞானத்தை, அறிவை வைத்து சொல்லுங்கள்.


Indian
அக் 08, 2025 10:38

கடும் நடவடிக்கை தேவை ..


V Venkatachalam
அக் 08, 2025 12:30

பி ஆர் காவாய் மேல் தானே? ஆம் கடும் நடவடிக்கை அல்லது சாதா நடவடிக்கை தேவைதான். அவர் மீது நடவடிக்கை எடுக்க யாருக்கு அதிகாரம் இருக்கிறது? அவர் சிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு. பார்லிமென்ட் ல் நடவடிக்கை எடுக்க முடியும். இவர் பதவி இன்னும் 45 நாள். ஏற்கனவே வர்மா பெண்டிங். அப்போ நடவடிக்கை அம்புட்டுதேன்.


SVR
அக் 08, 2025 09:57

இந்த வக்கீல் அப்படி என்ன தவறு செய்து விட்டார்? எதையோ கழட்டும்போது எஸ்கேப் வேலாஸிட்டி கூட ஆகிவிட்டது. அவ்வளவுதான். இது ஒரு ஆக்சிடென்ட் என்று தான் கொள்ள வேண்டும். அப்படியே இது தவறு என்று எடுத்துக் கொண்டாலும் சிஜிஐ தான் வக்கீலை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று கூறி விட்டாரே. அவர் ஏன் அப்படி சொன்னார்? தான் ஒரு கேச பற்றி விசாரிக்கும்போது பேசியது அதிக பிரசங்கம் என்று தெரிந்ததினால். சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்தது இவர் தான். சனாதனத்தை எப்ப பாரு விமர்சனம் பண்ணினால் இப்படித்தான் நடக்கும் நடக்கணும். யாரும் கோபம் கொள்ள வேண்டாம். மற்ற மதத்தை பற்றி இவர்கள் ஒரு சொல் கூட சொல்வதில்லை. சனாதனம் இந்த மத சார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்களுக்கு கிள்ளு கீரையாக போய் விட்டது. ஒவ்வொரு தடவையும் இவர்களை தலையில் குட்டி கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் சரியாக இருக்கும்.


vbs manian
அக் 08, 2025 09:52

எடக்கு முடக்க சொன்னதுக்கு எடக்கு முடக்கான பதில்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை