உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதி தேவதை சிலை மாற்றம் வழக்கறிஞர் சங்கம் எதிர்ப்பு

நீதி தேவதை சிலை மாற்றம் வழக்கறிஞர் சங்கம் எதிர்ப்பு

புதுடில்லி :உச்ச நீதிமன்றத்தின் சின்னம் மற்றும் நீதி தேவதையின் சிலையில் மாற்றம் செய்யப்பட்டதற்கு, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் நுாலகத்தில், 6 அடி உயர புதிய நீதி தேவதை சிலை வைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக நீதி தேவதை சிலையின் இடது கையில் கத்தி இருக்கும். ஆனால், புதிய சிலையில், அரசியலமைப்பு சாசனம் இடம்பெற்றுள்ளது. மேலும், தலையில் கிரீடம் காணப்படுகிறது. இதைத் தவிர, இதுவரை கண்கள் கருப்பு துணியால் மூடப்பட்டிருக்கும். புதிய சிலையில், அது நீக்கப்பட்டுள்ளது.இந்த புதிய சிலை மற்றும் உச்ச நீதிமன்றத்தின் சின்னத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தங்களுடன் எவ்வித ஆலோசனையும் நடத்தாமல், இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக, அதன் தலைவர் கபில் சிபல் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதைத் தவிர, முன்பு இருந்த நீதிபதிகள் நுாலகத்தை அருங்காட்சியகமாக மாற்றுவதற்கும் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த இடத்தில், வழக்கறிஞர்களுக்காக நுாலகம் மற்றும் சிற்றுண்டி விற்பனை மையம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரி வருவதாகவும், தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Selvaraj
அக் 25, 2024 14:14

வழக்கறிஞர்கள் இதனால் என்னென்ன பாதிப்படைந்தார்கள் என்று வழக்கறிஞர்கள் கூறுவார்களா. சுதந்திர இந்தியாவில் எதற்கெடுத்தாலும் யாராவது போராடுகிறார்கள்..


Rpalnivelu
அக் 25, 2024 12:55

... ஓகேயா?


kulandai kannan
அக் 25, 2024 12:51

கபில் சிபல் எதிர்த்தால் அது கண்டிப்பாக நல்ல விஷயமாகத்தான் இருக்கும்.


Selvaraj
அக் 25, 2024 14:19

இன்னும் குழந்தை தாமாகவே இருப்பதாகத் தோன்றுகிறது. நீதி தேவதை சிலையின் கண்ணைக் கட்டி இருந்தாலும் கட்டாமல் இருந்தாலும் வழக்கு தாக்கல் செய்த மக்களுக்கு என்ன பயன் அல்லது பாதிப்பு..?


V RAMASWAMY
அக் 25, 2024 09:32

எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் பாரதத்தில் இருக்கிறார்களா, அல்லது அயல்நாட்டிலா? அவர்கள் மறைமுகமாக சொல்வது அவர்கள் எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் என்பது போல் ஆகிறதல்லவா?


GMM
அக் 25, 2024 07:26

நீதி தேவதை சிலை மாற்றம் செய்ய வழக்கறிஞர் சங்கத்தை ஆலோசிக்க வில்லை என்றால், தற்போது ஆலோசனை கூறுங்கள். கபில் ஏன் எதிர்ப்பு, தீர்மானம்.


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 25, 2024 06:44

கண்ணைமூடிட்டு இனிமே கையூட்டு வாங்கிவிட்டு வாதாடமுடியாது என கபில் குப்பன் நினைத்தாரோ என்னவோ. இவரின் டிராக் ரெகார்ட் ஊழல் பெருச்சாளிகளிக்குள் கிலி வந்திருக்கும் ..


Kasimani Baskaran
அக் 25, 2024 05:12

நீதி தேவதைக்கு கண்ணை முடியதே ஒரு அபத்தம். கூடுதலாக கபில் சிபல் போன்றவர்கள் நீதிக்கு எதிரானவர்கள்.


J.V. Iyer
அக் 25, 2024 04:32

எல்லாத்துக்கும் எதிர்ப்பு இந்த ஹிந்துஸ்தான் தேசத்தில். முதலில் சனாதனத்தை எதிர்க்கும் மூடர்களை எதிர்த்து குரல் கொடுங்கப்பா.


Nandakumar Naidu.
அக் 25, 2024 01:11

தேச, சமூக மற்றும் மத வெறி பிடித்த ஹிந்து விரோதிகளும் துணை போகும் வக்கீல்கள் கண்களை கட்டிய சிலையை தானே விரும்புவார்கள். அதான் வெள்ளை நிறம் நீதி தேவதை அவர்களுக்கு பிடிக்கவில்லை. இவர்கள் மனம் கருப்புதான். இவர்களின் சங்கத்தயே கலைக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை