உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எதிர்க்கட்சி தலைவர் பதவி : ராகுலிடம் காங்., வலியுறுத்தல்

எதிர்க்கட்சி தலைவர் பதவி : ராகுலிடம் காங்., வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்க ராகுலை காங்கிரஸ் செயற்குழு வலியுறுத்தி உள்ளது.காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று( ஜூன்8) டில்லியில், கார்கே தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் சோனியா, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.இந்த கூட்டம் முடிந்த பிறகு அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நிருபர்களிடம் கூறியதாவது: லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என ராகுலை காங்கிரஸ் செயற்குழு ஒரு மனதாக கேட்டுக் கொண்டுள்ளது. பார்லிக்குள்ளும் கட்சியை வழிநடத்த அவர் தான் சிறந்த நபர். இந்த விவகாரத்தில் விரைவில் முடிவு எடுப்பதாக ராகுல் கூறியுள்ளார்.வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் ராகுல் வெற்றி பெற்றுள்ளார். அதில் ஏதாவது ஒரு தொகுதியை ராஜினாமா செய்வது குறித்து 17 க்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும். 3 அல்லது 4 நாட்களில் அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

RAJ
ஜூன் 11, 2024 07:58

சொப்பனம் வேணும்னா காணலாம். சிம்ம என்ற வார்த்தைக்கும் ... நம்ப ஆளுக்கும் ரொம்ப தூரம் .. ராசா..வேணும்னா கண் அடிச்கிட்டு கட்டிபுடிச்சுக்கிட்டு ... காண்டீன்ஸ் பப்ஸு சாப்டுகிட்டு இருக்கலாம்... ரொம்ப ஆசைப்படாத ராசா.


Syed ghouse basha
ஜூன் 08, 2024 21:50

ராகுல் ஜி நீங்க எதிர்கட்சி தலைவர் ஆனா சிலருக்கு சிம்மசொப்பனம்


Rajarajan
ஜூன் 08, 2024 19:59

ராகுலின் மைண்ட் வாய்ஸ் நாங்க வேண்டாம் வேண்டாம்னு தான் சொல்லுவோம். அப்பறம் கடைசியா, தொண்டர்களின், இரண்டாம்கட்ட தலைவர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, இந்த முள் மகுடத்தை ஏற்றுக்கொள்கிறேன்னு நாங்க சொல்வோம். தமிழ்நாடு திராவிட கட்சிகள் கிட்ட பார்த்து கத்துக்கோங்கப்பா. அவங்க அப்படிதான் பதவியை ராஜினாமா செய்கிறேன்னு சொல்வாங்க. தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவு தங்கள் வாரிசுக்கு இருக்குன்னு சொல்வாங்க. அட இதை எல்லாம் யாரு அவங்ககிட்ட கேக்க போறாங்க.


RAAJ68
ஜூன் 08, 2024 19:53

இவர் அடிக்கடி லண்டன் இத்தாலி மற்றும் பிற நாடுகளுக்கு உல்லாச பயணம் போய்விடுவார் எதற்காக இவரை எதிர்க்கட்சித் தலைவராக ஆக்க வேண்டும்:ஜெயராம் ரமேஷ் நன்றாக பேசக்கூடியவர் அவரை இந்தப் பதவிக்கு போடுவது பொருத்தமாக இருக்கும்.


GANESUN
ஜூன் 08, 2024 19:52

அடுத்த ஆர்எஸ்பி தலைப்பு: "ராவுலின் கேள்விக்கு பதிலளிக்காமல் மோடி சபையிலிருந்து ஓட்டம்". "ராவுளுக்கு பயந்து அமித்ஷா கூட்டத்தொடர்க்கு டிமிக்கி"... ஹி..ஹி


HoneyBee
ஜூன் 08, 2024 19:47

கண்ணடிக்க டிரெய்னிங் தரப்படும்...


பேசும் தமிழன்
ஜூன் 08, 2024 18:49

ஆக்குங்கள்..... மக்களுக்கு நன்றாக பொழுது போகும்.... உள்ளே கழுவி கழுவி ஊத்துவார்கள்.


M S RAGHUNATHAN
ஜூன் 08, 2024 18:46

இவரால் முடிந்தது பாராளுமன்றத்தில் ரகளை செய்வது. கூட்டம் நடத்தவிடாமல் தடுப்பது மீறி ஏதாவது உளறி மாட்டிக்கொள்ள வேண்டியது. மற்ற உறுப்பினர்கள் இவனுக்காக மாரடிக்க வேண்டியது. சோப்ளாங்கி


Balasubramanian
ஜூன் 08, 2024 18:31

ராஜபார்ட் வேடம் போட நினைத்தவருக்கு கள்ளபார்ட் !நல்லாவா இருக்கு?


M S RAGHUNATHAN
ஜூன் 08, 2024 18:02

பாராளுமன்றத்தில் சரியான புள்ளி விவரத்தோடு பேசத் தெரிய வேண்டும்.பிஜேபிவிற்கு ரொம்ப சௌகரியம். விவாதங்களில் சொதப்புவார். இவர் பேச்சை சமாளிப்பதே மற்ற உறுப்பினர்களுக்கு வேலை ஆகி போய்விடும்.


மேலும் செய்திகள்