உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாரிசுகளுக்கு சீட் கேட்கும் தலைவர்கள் சித்தராமையா, சிவகுமாருக்கு நெருக்கடி

வாரிசுகளுக்கு சீட் கேட்கும் தலைவர்கள் சித்தராமையா, சிவகுமாருக்கு நெருக்கடி

லோக்சபா தேர்தலில் நாடு முழுதும் பிரசாரம் செய்ய வேண்டி உள்ளதால், இம்முறை கலபுரகியில் போட்டியிட விரும்பவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முடிவு செய்துள்ளார். மாநில அமைச்சராக உள்ள அவரது மகன் பிரியங்க் கார்கேவோ, தனக்கு சீட் வேண்டாம் என்று கூறி விட்டார். எனவே, அவரது மருமகன் ராதாகிருஷ்ண தொட்டமணி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட காங்கிரஸ் தலைவர்களை, கார்கே மருமகன் சந்தித்து பேசி வருகிறார்.இதனால் எரிச்சல் அடைந்த சில தலைவர்கள், தங்கள் உறவினர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் படி, கட்சி தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதனால் கலபுரகி தொகுதி வேட்பாளர் பெயர் அறிவிப்பதில், தாமதமாகலாம்.இது போன்று, கோலாரில் உணவுத் துறை அமைச்சர் முனியப்பா, தனது மருமகன் சிக்க பெத்தண்ணாவுக்கு சீட் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு, அம்மாவட்ட காங்கிரசின் ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.சித்ரதுர்காவில் முன்னாள் எம்.பி., சந்திரப்பாவுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள, கலால் துறை அமைச்சர் திம்மாப்பூர் ஆதரவாளர்கள், முதல்வர் சித்தராமையாவை சந்தித்து, சந்திரப்பாவுக்கு சீட் கொடுக்கக்கூடாது என தெரிவித்துள்ளனர். சாம்ராஜ் நகரில் சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா போட்டியிட விரும்பவில்லை என பல முறை கூறி விட்டார்.காங்கிரசின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வரும் 14ம் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஒன்று, தங்களுக்கு சீட் கொடுக்க வேண்டும்; இல்லாவிடில் தங்கள் வாரிசுகளுக்கு கொடுக்க வேண்டும் என்று தலைவர்கள் பலரும் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாருக்கு தினமும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.தலைவர்களுக்கு எவ்வளவு பெரிய விசுவாசியாக இருந்தாலும் தங்கள் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் ஆர்வமாக உள்ள தலைவர்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ