உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடியிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்; ஐரோப்பிய தலைவர்களை விளாசிய நெதர்லாந்து நிறுவனம்

பிரதமர் மோடியிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்; ஐரோப்பிய தலைவர்களை விளாசிய நெதர்லாந்து நிறுவனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வணிக நிறுவனங்களிடம் எப்படி அணுக வேண்டும் என்பதை பிரதமர் மோடியிடம் இருந்து ஐரோப்பிய தலைவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரபல செமிகண்டக்டர் நிறுவனமான ஏஎஸ்எம்எல் (ASML) நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். நெதர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஏஎஸ்எம்எல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டோப் பவுகெட், சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்து இரண்டு மணிநேரம் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, ஏஎஸ்எம்எல் நிறுவனத்தின் செயல் அதிகாரி பிராங்க் ஹீம்ஸ்கெர்க், பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களுடனான சந்திப்பின் போது, பிரதமர் மோடியை பாராட்டி பேசியுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l4q3k5f7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் கூறியதாவது; பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது, நாங்கள் சொல்வதை மட்டுமே அவர் கேட்டிருக்கவில்லை. 'நீங்கள் மிகவும் நட்பாக பழகுகிறீர்கள். நாம் எப்படி இணைந்து மேம்படுவது என்பதை பற்றி சொல்லுங்கள்,' என்று பிரதமர் மோடி எங்களிடம் கேட்டார். வர்த்தக நிறுவனங்களுடனான அணுகுமுறையை பிரதமர் மோடியிடம் இருந்து ஐரோப்பிய தலைவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அரசியல் தலைவர்கள் முதலீடு செய்யும் நிறுவனங்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், இவ்வாறு அவர் கூறினார். கடந்த 2021ம் ஆண்டு ரூ.76,000 கோடி நிதியுடன் இந்திய செமிகண்டக்டர் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. அதன்படி, இஸ்ரோவின் செமிகண்டக்டர் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட விக்ரம் என்ற முதல் இந்திய சிப், கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப்கள், இந்தாண்டு இறுதிக்குள் சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்று கடந்த சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்நிலையில், உலகளவில் பிரபலமான செமிகண்டக்டர் நிறுவனம் பிரதமர் மோடியை பாராட்டியிருப்பது உலக நாடுகளின் கவனத்தை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Iyer
அக் 04, 2025 03:18

எப்படி - ஒவ்வொரு PURCHASE, PROJECT லும் - கமிஷன் தொகையை பேரம் பேசி வாங்கவேண்டும் என்று ராகுல் மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்


Ramesh Sargam
அக் 04, 2025 02:11

பிரதமர் மோடிஜியை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள். ஸ்டாலின் அவர்களை பார்த்து எதுவும் கற்றுக்கொள்ளாதீர்கள். ராகுல் காந்தியை பார்த்து எதுவும் கற்றுக்கொள்ளாதீர்கள்.


RAMESH KUMAR R V
அக் 03, 2025 22:20

எங்கும் எதிலும் இந்தியா இந்தியா மோடி மோடி....


ராமகிருஷ்ணன்
அக் 03, 2025 22:02

தமிழக மக்களை ஓட்டு பிச்சைகாரர்களா மாற்றிய பெருமை திமுகவிற்கு உண்டு இனியாவது நீண்ட காலம் பயன் தரும் திட்டங்களை இனி வரும் அரசுகள் செய்ய வேண்டும். திமுக செய்யவே செய்யாது. மக்கள் நலனை விட குடும்ப நலனே திமுகவினருக்கு பெரிது.


Barakat Ali
அக் 03, 2025 20:40

ஐயோ எரியுதே மாலா ...... ஃபேனை பத்துல வையி ..... திமுக கொத்தடிமைகளின் நிலை ....


சுபாஷ்
அக் 03, 2025 20:32

இப்பிடித்தான் அமெரிக்கா கிட்டே அப்கே பார் நு சொல்லப்.போய், அவுரு இங்கே வந்த போது சுவரெடுத்து நம்மளை பணக்காரங்களா காட்டி, இன்னிக்கி 100,000 டாலர்ல வந்து நிக்கிது. நெதத்லாந்துக்கு ஒரு லட்சம் ஹெச் 1 ஆளுங்க பார்சல்..


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
அக் 03, 2025 21:21

பாஸ் நாம துபாய் போயி தெருவுக்கு தெரு லூலூ மால் கொண்டு வந்தோம் , அது போல வருமா ?


Modisha
அக் 03, 2025 21:27

நீங்க கிணத்து தவளை.


Raman
அக் 03, 2025 21:57

200s immediately jump the gun


lana
அக் 03, 2025 20:29

காசு கொடுத்து கூவ சொன்னால் கூட எங்க சுடலை அன் கோ வை பற்றி யாரும் நல்லது கூற முடியாது


spr
அக் 03, 2025 20:27

பாராட்டுவோம் ஆனால் இந்திய மயமாக்கல் என்ற வகையில் அனைத்தையுமே உடனடியாகச் செய்ய முடியாது . முதலில் இந்தியாவின் கருத்துக் பரிமாற்றச் செயலிகளை இனம் கண்டு, அவற்றை பாதுகாப்பானதொன்றாக மாற்றிய பின்னர் அரபு நாடுகளை போல அதனை அரசுடைமையாக்கி, அனைத்து அரசு கருத்துப் பரிமாற்றங்களும் அவற்றின் மூலமே நடக்க வேண்டுமெனச் சொல்ல வேண்டும் இதெல்லாம் நடக்குமா இந்திய கருத்துக் பரிமாற்றச் செயலி வடிமைப்பாளர்தான் ஏற்றுக் கொள்வார்களா? அரசும் மக்களும் சிந்திக்கவேண்டும்


duruvasar
அக் 03, 2025 19:21

நீங்க அங்கேயே இருங்கள். வாழும் வள்ளுவரின் அடுத்த பயணம் பெல்ஜியத்திற்கு தான். அப்படியே மொத்தமாக ஈர்த்துவிடுவார்.


Rathna
அக் 03, 2025 19:20

நாட்டிற்காக எதையும் தியாகம் செய்யும் தலைமை பண்பு, நேர்மை மற்றும் பணிவு...


சமீபத்திய செய்தி