உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிர்ச்சியில் உயிர்விட்ட அரிய வகை மான் கூட்டம்!

அதிர்ச்சியில் உயிர்விட்ட அரிய வகை மான் கூட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: குஜராத்தில், சக மான் ஒன்றை சிறுத்தை தாக்கிக் கொன்றதை நேரில் கண்ட பிளாக்பக் வகையைச் சேர்ந்த ஏழு மான்கள் அதிர்ச்சியில் உயிர்விட்ட சம்பவம், வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலை அருகே ஜங்கிள் சபாரி வனவிலங்கு பூங்கா உள்ளது. இங்கு ஏராளான மான்கள், பறவைகள் உள்ளன. இந்த பூங்கா மிக முக்கியமான சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகின்றது.இங்கு, கடந்த ஜனவரி 1ம் தேதி, சக மான் ஒன்றை சிறுத்தை தாக்கிக் கொன்றதை நேரில் கண்ட பிளாக்பக் வகையைச் சேர்ந்த ஏழு மான்கள் அதிர்ச்சியில் உயிரிழந்தன. இது போன்று சம்பவம் நடப்பது முதல் முறை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து காடுகளின் துணைப் பாதுகாவலர் அக்னீஸ்வர் வியாஸ் கூறியதாவது: கெவாடியாவைச் சுற்றியுள்ள அடர்ந்த காடுகள் சிறுத்தைகளின் இருப்பிடமாக உள்ளன. பெரும்பாலும் இரவு நேரத்தில் அதிகமாக நடமாடுகின்றன. ஆனால் இதுவரை வேலியைத் தாண்டி பூங்காவிற்குள் சிறுத்தைகள் வந்தது இல்லை. தற்போது முதல்முறையாக பூங்காவிற்குள் நுழைந்து பீதியை ஏற்படுத்தி உள்ளது. பணியில் இருந்த பாதுகாவலர்கள் விரட்ட முயற்சித்தனர். ஆனாலும், சிறுத்தை ஒரு பிளாக்பக் வகை மானை கொன்றது. இந்த அதிர்ச்சியில் மேலும் ஏழு மான்கள் உயிரிழந்துள்ளன. பூங்கா 24 மணி நேரமும் சி.சி.டிவி., கேமரா உதவி உடன் கண்காணிக்கப்படுகிறது. சிறுத்தை எங்கே பதுங்கி இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இந்த சம்பவம் குறித்து முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் அரசிற்கு தகவல் தெரிவித்தோம். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sankare Eswar
ஜன 06, 2025 15:08

இதற்கு அறிவியல் பூர்வ காரணாமாக, இந்த மான்கள் மிகவும் பாதுகாப்பாக எந்த ஆபத்து இல்லாமல் பூங்காவில் வளர்க்கப்பட்டு அதன் சுயத்தை பாதுகாப்பற்ற சூழலில் எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்வது என்ற மரபை SURVIVAL OF THE FITTEST - தகுதி உள்ளவை தப்பி பிழைக்கும் இந்த உலகில் தன் இனத்தை சந்ததியை தக்க வைக்க இழந்துவிட்டதாக இருக்கலாம். இதே வகை மான்கள் இயற்கை காட்டு பகுதியில் போராட்ட சூழல்நிலையி உணவு உறைவிடம் தேடி வாழ்ழ்ந்திருக்குமேயானால் அவை ஓடி தப்பித்திருக்கும். சிறுத்தை தாக்கிய இயல்பான சூழல் அதற்கு புதிய முன்னர் அறிந்திராத அபாயமாக திடீரென சந்திக்க நேர்ந்தது அவைகள் மரணத்திற்கு காரணாமாக அமைந்துவிட்டது என்று கருதுகிறேன்.


Ganapathy Subramanian
ஜன 06, 2025 12:07

சரியா பார்த்து சொல்லுங்க, சல்மான் கான் அந்தப்பக்கமா ஏதாவது ஷூட்டிங்க்கு வந்தாரான்னு ..............


N.Purushothaman
ஜன 06, 2025 09:02

மான் ஒரு பயந்த சுபாவம் கொண்ட பலவீனமான பிராணி ....அது வேட்டையாட கூடிய உயிரினம் அல்ல ...ஆனால் வேட்டையாடும் விலங்குகளுக்கு அது தான் எளிதான இலக்கு ....ஆண்டவன் படைப்பில் இப்படியும் ஒரு உயிரினம் ...


Barakat Ali
ஜன 06, 2025 08:42

ஞானசேகரன் விவகாரம் இதற்கும் பொருந்துகிறதே ?? சிறுத்தை எப்படி உள்ளே வந்தது ?? ஏன் பாதுகாப்பு சரியில்லை ??


theruvasagan
ஜன 06, 2025 22:11

சிறுத்தை எப்படி பாதுகாப்பை மீறி உள்ளே வந்ததுன்னு வெள்ளந்தியா கேக்கறீங்களே. மாடல் நிர்வாகததில் குற்றம் புரிபவர்களுக்குத்தான் பாதுகாப்பு. பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்ல.


Laddoo
ஜன 06, 2025 08:37

கவரி மானை விட ப்ளாக் பக் மான் சிறந்ததா? மிகவும் சோககரமானது.


Barakat Ali
ஜன 06, 2025 10:16

உங்க பேரு நல்லா இருக்கு .... நீங்க ஈரோடு கிழக்குத் தொகுதியைச் சேர்ந்த ஏரியாக்காரரா ????


முக்கிய வீடியோ