உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முறியடிப்போம்!

முறியடிப்போம்!

நம் நாட்டின் மீது ஏராளமான சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளன. மின் துறையை பொறுத்தவரை, 2 லட்சம் சைபர் தாக்குதல்கள் முயற்சிக்கப்பட்டன. அனைத்து தாக்குதல்களையும் நாம் வெற்றிகரமாக முறியடித்து உள்ளோம். இதனால் நமக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. எதிர் காலத்திலும், இது போன்ற தாக்குதல்களை முறியடிப்போம்.மனோகர் லால் கட்டார், மத்திய அமைச்சர், பா.ஜ.,

இதில் என்ன தவறு?

உ.பி.,யின் பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவில், நெரிசலில் உயிரிழப்புகள் ஏற்பட்ட பின், முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என, காங்., கோரியது. அதே போல், பெங்களூரு மைதான விவகாரத்திலும் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய கோருவதில் என்ன தவறு?ராம்தாஸ் அத்வாலே, மத்திய இணை அமைச்சர், இந்திய குடியரசு கட்சி

கொள்கை முடிவு!

அசாமில், குறுக்கு வழிகளை பயன்படுத்தி தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பலர் பெயர்களை சேர்த்துள்ளனர். அதில் பெயர் இடம் பெற்றிருந்தாலும், வெளிநாட்டினர் என்பது கண்டறியப்பட்டால், நிச்சயம் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவோம். இது தான் எங்கள் கொள்கை முடிவு. இதில் சமரசத்துக்கு இடமில்லை.ஹிமந்த பிஸ்வ சர்மா, அசாம் முதல்வர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி