உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய பொருட்களை வாங்குவோம்; பயன்படுத்துவோம்: ஜனாதிபதி அழைப்பு

இந்திய பொருட்களை வாங்குவோம்; பயன்படுத்துவோம்: ஜனாதிபதி அழைப்பு

புதுடில்லி: '' இந்தியா பொருட்களையே வாங்குவோம். பயன்படுத்துவோம் என அனைவரும் உறுதி ஏற்போம்,'' என ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது: தன்னிறைவு பெற்ற நாடு என்ற பாதையில் இந்தியா பெரும் தன்னம்பிக்கையுடன் பயணிக்கிறது. அனைத்து மனிதர்களும் சமம். அனைவரையும் கவுரவத்துடன் நடத்த வேண்டும். சுகாதாரம் மற்றும் கல்வியை அனைவரும் சமமாக அணுக வேண்டும். சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும். பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. ஏற்றுமதி அதிகரிக்கிறது. அனைத்தும் இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதை காட்டுகிறது.6.5 சதவீத ஜிடிபி உடன் நாடு வேகமாக வளர்ச்சி பெறுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=aal86x8w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாடு வேகமாக நகர்ப்புறமாகி வருகிறது. எனவே நகரங்களின் நிலைமையை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. நகர்ப்புற போக்குவரத்தை மேம்படுத்த அரசு மெட்ரோ ரயில் வசதிகளை மேம்படுத்துகிறது. மெட்ரோ ரயில் சேவை கிடைக்கும் நகரங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏராளமானோர் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வசதியை பெற்றுள்ளனர்.

முன்மாதிரி

2047 ல் வளர்ச்சியடைந்த நாடு என்ற பாதையில் இந்தியா பயணித்து வருகிறது. சிறந்த நிர்வாகம் மற்றும் ஊழலை சகித்து கொள்ள முடியாது என்ற கொள்கையுடன் அரசு பயணித்து வருகிறது. சுதேஷி என்ற கொள்கை மேக் இன் இந்தியா மற்றும் தன்னிறைவு பெற்ற பாரதம் என்ற கொள்கைக்கு முன்மாதிரியாக உள்ளது. இந்திய பொருட்களை வாங்குவோம். பயன்படுத்துவோம் என உறுதி ஏற்போம். அனைத்து கிராமங்களிலும் 4ஜி சேவை கிடைத்துள்ளது. பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக உறுதியுடன் ஆக்கப்பூர்வமாக இந்தியா பதிலடி கொடுத்தது. நாட்டை பாதுகாக்க எந்த சவாலையும் சந்திக்க நமது ஆயுதப்படைகள் தயார் நிலையில் இருப்பதை காட்டுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திர தினத்தையும், குடியரசு தினத்தையும் முழு உற்சாகத்துடன் நாம் கொண்டாடுவது பெருமை அளிக்கிறது. இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்வதை இந்த நாள் நினைவுபடுத்துகிறது.சுதந்திரம் பெற்ற பிறகு, வயது வந்தவர்கள் ஓட்டளிக்கும் உரிமை பெற்ற ஜனநாயக பாதையில் நாம் முன்னேறி செல்கிறோம். மற்ற வார்த்தைகளில் நாம் சொல்வது என்றால், நமது சொந்த விதியை தீர்மானிக்கும் உரிமையை நமக்கு நாமே வழங்கிக் கொண்டோம். சவால்களுக்கு மத்தியில், இந்திய மக்கள் ஜனநாயகத்தை ஏற்று கொண்டனர். நம்மை பொறுத்தவரை நமது அரசியலமைப்பு, ஜனநாயகம் அனைத்தையும் விட உயர்ந்தது.

அஞ்சலி

வரலாற்றை திருப்பி பார்க்கும் போது நாடு பிரிவினையின் போது ஏற்பட்ட வேதனையை நாம் மறக்கக்கூடாது. பிரிவினை காரணமாக மோசமான வன்முறைகள் ஏற்பட்டன. லட்சக்கணக்கான மக்கள் இடம் மாற வேண்டிய நிலை ஏற்பட்டது. வரலாற்றின் இந்த தவறுகளுக்காக பலியானவர்களுக்கு இன்று நாம் அஞ்சலி செலுத்துகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

venugopal s
ஆக 15, 2025 15:20

நாங்கள் இன்னும் ஒரு படி மேலே போய் தமிழ்நாட்டில் தயாராகும் பொருட்களை மட்டுமே வாங்குகிறோம்!


அப்பாவி
ஆக 15, 2025 10:59

உங்க ஃபோன் ஆப்பிளா ஆண்டிராய்டா? உங்க சொகுசு விமானம் HAL தயாரிப்பா மேடம் ப்ரெசிடெண்ட்?


vivek
ஆக 15, 2025 12:24

உன் டிசைன் வேற மாதிரி இருக்கே....


Padmasridharan
ஆக 15, 2025 08:39

குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வசதி உள்ளதென்றால் இன்னும் ஏன் 30-40௹ கொடுத்து பாட்டில் தண்ணீர் வாங்குகின்ன்றனர் சாமி.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 15, 2025 09:59

ஜல் ஜீவன் திட்டம் மூலம் மத்திய அரசு உங்கள் மொழியில் சொல்வது என்றால் ஒன்றிய அரசு கொடுத்த பணத்தை உங்கள் மாநில அரசு என்ன செய்கிறது என்று சொல்ல முடியுமா.


vivek
ஆக 15, 2025 12:23

அதை வாங்கியவன் கிட்ட போய் கேளு...கிராமத்தில் போய் பாரு...


ManiMurugan Murugan
ஆக 15, 2025 00:15

ஜனாதிபதி அவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்


Babu reddy R
ஆக 14, 2025 22:13

இந்த மாதிரி பதிவு நிறய மக்களை சென்றுஅடையனும்


ديفيد رافائيل
ஆக 14, 2025 21:55

இந்திய ஜனாதிபதி use பண்ற mobile phone iphone


Ramesh Sargam
ஆக 14, 2025 22:35

அது Made In India போன்


vivek
ஆக 15, 2025 05:49

உனக்கு ஒட்டக மூளையா பாய்


ديفيد رافائيل
ஆக 14, 2025 21:54

மற்ற நாட்டு பொருட்களை இறக்குமதிக்கு தடை விதிக்கலாமே. அந்த தைரியம் இந்திய ஜனாதிபதிக்கு இருக்கா?


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 15, 2025 09:56

மற்ற நாட்டு பொருட்களை இறக்குமதிக்கு தடை விதித்தால் நம் நாட்டு பொருட்களுக்கு அந்த நாடுகள் தடை விதிக்கும். ஏற்றுமதி இறக்குமதி இரண்டும் சம்மந்தப்பட்ட நாடுகளுக்குள் ஓரளவிற்கு சமமாக இருக்க வேண்டும்.


Ramesh Sargam
ஆக 14, 2025 21:42

உண்மையான தேசபக்தியுள்ள இந்தியர்களை மட்டும் இந்தியாவில் தங்க அனுமதிப்போம். தேசதுரோகிகளை நாட்டை விட்டே விரட்டுவோம். ஜெய் ஹிந்த்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை