உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹாலோவின் கொண்டாடலாம்; மகா கும்பமேளா அர்த்தமற்றதா : லாலுவை வறுத்தெடுத்த பா.ஜ.,

ஹாலோவின் கொண்டாடலாம்; மகா கும்பமேளா அர்த்தமற்றதா : லாலுவை வறுத்தெடுத்த பா.ஜ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹார் முன்னாள் முதல்வரும், ஆர்.ஜே.டி., எனப்படும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், தன் பேத்திகளுடன் 'ஹாலோவின்' பண்டிகையை கொண்டாடியது சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது. பீஹார் முன்னாள் முதல்வரும், ஆர்.ஜே.டி., தலைவருமான லாலு, தன் பேரன், பேத்திகளுடன், 'ஹாலோவின்' பண்டிகையைக் கொண்டாடினார். அகால மரணமடைந்தவர்களை மகிழ்விப்பதற்காக, வித்தியாசமான உடை, அலங்காரங் களுடன் மேற்கத்திய நாடுகளில் கொண்டாடப் படுவதே, ஹாலோவின் பண்டிகை ஆகும். இந்நிலையில், தன் மகள் ரோஹினி ஆச்சார்யா, பேரன், பேத்திகளுடன் லாலு கொண்டாடும் வீடியோவை, அவருடைய ம கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து பா.ஜ.,வின் விவசாயப் பிரிவு வெளியிட்ட அறிக்கை: ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பண்டிகையைக் கொண்டாடுவது லாலுவுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், நம் நாட்டின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பண்டிகைகளை கொண்டாடுவதுதான் அவருக்கு பிரச்னை. மகா கும்பமேளா அர்த்தமற்றது என கூறியவர் லாலு. ஹிந்துக்களின் நம்பிக்கை, உணர்வுகளை புண்படுத்துவோரை பீஹார் மக்கள் வரும் சட்டசபை தேர்தலில் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

மணிமுருகன்
நவ 03, 2025 23:28

வளர்ந்த மேலை நாடுகள் என்று கூறுபவர்கள் அவர்கள் திருவிழாக்களை நன்கு கவனித்தால் நமது கலாச்சாரத்தை குறைத்து மதிப்பிட மாட்டார்கள் காசுக்கு ஒப்பாரி வைக்கும் கூட்டங்களுக்கு இதெல்லாம் தெரியாது சும்மா ஒப்பாரி அவ்வளவு தான் அவரிடம் அந்த திருவிழாவைப் பற்றி கேட்டால் ஒன்றும் தெரியாது


ராமகிருஷ்ணன்
நவ 03, 2025 10:04

அதெப்படி இந்திய முழுவதும் இந்து விரோதிகள், ஊழல் என்று ஒரே குணம் கொண்டவர்களாக இருக்காங்க.


ஹேலோகுமார்
நவ 03, 2025 09:23

அவர் என்ன ஹேலோவீனை கங்கையிலா கொண்டாடுனாரு?


S.F. Nadar
நவ 03, 2025 09:16

எதை குடித்தால் பித்தம் தெளியும் என சொல்கிறார்கள்


Senthoora
நவ 03, 2025 05:38

ஹாலோவின் இறந்தவர்களின் ஆவிகளை திருப்திப்படுத்த செய்யும் ஒரு நிகழ்ழுவு கிறிஸ்தவ மக்களிடம் நடக்கும் ஒரு திருவிழா. சாக்லட்டை குழந்தைகள் ஒருவருக்கு ஒருவர் கொடுத்து மகிழ்வது. மொத்தத்தில் ஆவிகளின் திருவிழா, So லாலு இனம் இனத்துக்கு கொண்டாடுது,


A viswanathan
நவ 03, 2025 06:06

உடல் நலம் சரியில்லை என்று கூறி தண்டிக்கப்பட்டு ஒருவர் தேர்தல் பரப்புரையில் பங்கு கொள்கிறார். குடும்பத்தோடு எல்லா பண்டிகையையும் கொண்டாடுகிறார் இது எல்லாம் நீதிமன்றத்திற்கு தெரியாத என்ன.சட்டம் நீதி எல்லாம் நம் நாட்டில் நம்மை போன்ற சாதாரண மக்களுக்க மட்டும்தான்.ு


புதிய வீடியோ