உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேற்றுமைகளை மதிப்போம் இணைந்து வாழ்வோம்: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்

வேற்றுமைகளை மதிப்போம் இணைந்து வாழ்வோம்: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்

மும்பை: ''வேற்றுமையில் ஒற்றுமையே நம் பலம். நமக்குள் உள்ள வேற்றுமைகளை மதிப்போம்; இணைந்து நல்லிணக்கத்துடன் வாழ்வோம்,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் குறிப்பிட்டார்.மஹாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் பிவாண்டில் உள்ள கல்லுாரி ஒன்றில், குடியரசு தினத்தையொட்டி நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார். தேசியக் கொடியை ஏற்றி வைத்து அவர் பேசியதாவது:குடியரசு தினம் என்பது வெறும் கொண்டாட்டம் மட்டும் அல்ல. அது நாட்டுக்கு நம் கடமைகளை நினைவுபடுத்துவதாகும். பல நாடுகளில் பன்முகத்தன்மை உள்ள மக்கள் வாழ்கின்றனர்.ஆனால், அங்கெல்லாம் மோதல் உள்ளன. பாரதத்தில் மட்டும்தான், வேற்றுமையில் ஒற்றுமை என்பதை வாழ்க்கையின் இயற்கையான ஒன்றாக நாம் ஏற்றுள்ளோம்.ஒவ்வொருவருக்கும் என தனிச் சிறப்புகள் இருக்கும். அதே நேரத்தில் மற்றவர்களிடமும் நாம் நல்லவர்களாக இருக்க வேண்டும். நம் அனைவரின் வாழ்க்கையும், மற்றவர்களுடன் இணைந்த ஒன்று. உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அதுபோலவே, நம் சுற்றுப்புறத்தையும், நாட்டையும் பார்க்க வேண்டும்.நம் தேசியக் கொடியில் உள்ள தர்மசக்கரம், சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் போன்றவற்றை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.தனிப்பட்ட ஒவ்வொருவரும் வளர்ச்சியை காண்பதே, நாட்டின் வளர்ச்சி. நாம் வாழ்க்கையில் முன்னேறும்போது, மற்றவர்கள் முன்னேறவும் உதவிட வேண்டும்.நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமல்ல. மற்றவர்களுக்கு எவ்வளவு கொடுக்கிறோம் என்பதே முக்கியம். இதையே நம் தேசியக் கொடி, அதில் உள்ள வண்ணங்கள், அதில் இடம்பெற்றுள்ள தர்மசக்கரம் ஆகியவை நமக்கு உணர்த்துகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

venugopal s
ஜன 27, 2025 22:45

பிள்ளையையும் கிள்ளி விடுவோம், தொட்டிலையும் ஆட்டி விடுவோம்!


nisar ahmad
ஜன 27, 2025 14:17

இவர் பேசுவதென்வோ நல்லாதான் இருக்கிறது


Sundar R
ஜன 27, 2025 11:23

பாலகங்காதர திலகர் அவர்கள், அந்தமான் சிறையில் இருந்த போது, "BHAGAVAT GITA COMMON TO HINDUS, MUSLIMS AND CHRISTIANS". என்ற மிகச் சிறந்த புத்தகத்தை எழுதினார். அந்த புத்தகத்தை படித்தவர்கள் தாங்கள் ஒரு கருத்தைப் பேசும்போது மும்மதத்தவர்களுக்கும் பொருத்தமாக இருக்கும் படியாகத் தான் பேசுகிறார்கள். ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அவ்வாறு தான் பேசுவார்கள். பெரும் மதிப்பிற்குரிய ஐயா திரு மோகன் பாகவத் அவர்களின் இந்த உரை பாலகங்காதர திலகரின் வழிகாட்டுதல்களின்படி தான் இருக்கிறது.


Barakat Ali
ஜன 27, 2025 08:56

ஹிந்துக்களுடன் நல்லிணக்கத்தை விரும்பும் இஸ்லாமியர்கள் மனம் புண்படுகிறது.. ஹிந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதற்காகவே செயல்பட்டு வரும் நவாஸ் கனிக்கு நீங்க சொல்றது புரியவா போகுது ????


Kasimani Baskaran
ஜன 27, 2025 06:54

வேற்றுமைதான் பலம். அதை சரியாக புரிந்துவைத்து இருக்கிறார்.


தாமரை மலர்கிறது
ஜன 27, 2025 02:52

மோகன் பகவத் சரியாக சொல்லி உள்ளார்.


சமீபத்திய செய்தி