உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டப்படியான நடவடிக்கை எடுப்போம்: தேர்தல் ஆணையத்தை எச்சரிக்கும் காங்கிரஸ்

சட்டப்படியான நடவடிக்கை எடுப்போம்: தேர்தல் ஆணையத்தை எச்சரிக்கும் காங்கிரஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேர்தல் ஆணையம் தங்களது தலைவர்களை விமர்சனம் செய்வதாகவும், இது தொடர்ந்தால், அந்த அமைப்பிற்கு எதிராக சட்டப்படியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என காங்கிரஸ் கூறியுள்ளது.ஹரியானா சட்டசபை தேர்தலில் எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் காங்கிரஸ் கட்சி இருந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்திருந்தன.ஆனால், தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இருந்தன. பா.ஜ., மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இதனால் நொந்து போன காங்கிரஸ் தலைவர்கள், ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பினர்.இதை விசாரித்த தேர்தல் ஆணையம், காங்கிரஸ் அளித்த புகாரை நிராகரித்துள்ளது. இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சிக்கு ஆணையம் அனுப்பியுள்ள பதிலில், தன் கடுமையான கண்டனத்தை ஆணையம் பதிவு செய்துள்ளது. ஆணையம் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதை தவிர்க்க வேண்டும். முக்கியத்துவம் வாய்ந்த ஓட்டு எண்ணிக்கை நடைமுறை மீது பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதால், குழப்பமும், பொது அமைதியின்மையும் ஏற்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓராண்டில் நடந்த குறிப்பிட்ட 5 சம்பவங்களை தெரிவித்துள்ள ஆணையம், தேர்தல் நடைமுறைகளின் மீது எந்தவிதமான ஆதாரங்களும் இல்லாமல் தொடர்ந்து புகார்களை கூறுவதை தவிர்க்கும்படியும் காங்கிரஸ் கட்சிக்கு அறிவுறுத்தியுள்ளது.இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. மூத்த தலைவர்களான கே.சி.வேணுகோபால், அசோக் கெலாட், அஜய் மக்கான் உள்ளிட்ட 9 தலைவர்கள் கையெழுத்திட்டுள்ள அந்தக்கடிதத்தில் கூறியுள்ளதாவது: குறிப்பிட்ட பிரச்னைகளுக்கு மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினோம். தேர்தல் ஆணையம் மற்றும் ஆணையர்களை மதிக்கிறோம். ஆனால், தேர்தல் ஆணையம் எங்களுக்கு அளிக்கும் பதில்கள் தாழ்ந்த தொனியில் உள்ளது.தேர்தல் ஆணையம் தனக்கு தானே நற்சான்றிதழ் அளித்தது ஆச்சர்யம் அளிக்கவில்லை. ஆனால் அந்த அமைப்பு அளிக்கும் பதிலில் உள்ள தொனி மற்றும் பயன்படுத்திய மொழி மற்றும் கட்சிக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆகியவை காரணமாக பதிலளிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டு உள்ளோம்.தேர்தல் ஆணையம் அளித்த பதிலில் உள்ள தொனியை எளிதாக எடுத்து கொள்ள மாட்டோம். அது எங்களின் தலைவர்களை விமர்சிப்பதுபோல் உள்ளது. மோசமான தொனியில் உள்ளது. முடிவு எடுக்க வேண்டிய இடத்தில் உள்ளவர்கள். எந்த விமர்சனத்தையும் செய்யக்கூடாது. கட்சியை தாக்கக்கூடாது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் இதுபோன்ற கருத்துகளை நீக்குவதற்கு சட்ட ரீதியிலான நடவடிக்கையை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

பெரிய குத்தூசி
நவ 02, 2024 07:28

இகாஇத்தாலி காங்கிரஸ் ராகுல் அமெரிக்காவின், ஐரோப்பாவின் கைப்பாவையாக செயல்படுகிறது என்பதில் சந்தேகமில்லை


Kasimani Baskaran
நவ 02, 2024 05:38

அதாவது எங்களுக்கு என்று தனியான சட்டம் உண்டு என்று காங்கிரஸ்காரர்கள் தேர்தல் ஆணையத்தை மிரட்டுகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை நீக்கினால் பிரச்சினை தீர வழியுண்டு.


Anantharaman Srinivasan
நவ 01, 2024 22:36

மத்தியரசை அனுசரித்து செவிசாய்த்து நடப்பவர்களே தலைமை நீதிபதியாக தொடரமுடியும்.


narayanansagmailcom
நவ 01, 2024 21:35

கையால் ஆகாத காங்கிரஸ்சால் உருப்படியாக எதுவும் செய்ய முடியாது


Krishna Gurumoorthy
நவ 01, 2024 21:30

அரசியல் சாசனம் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டுபவர்கள் ஆதாரம் சமர்ப்பிக்க தவறினால் கடுமையான தண்டனை வழங்க வழிவகை செய்யப்படவேண்டும்.


கல்யாணராமன்
நவ 01, 2024 21:11

நியாயப்படி பார்த்தால் காங்கிரஸ் கட்சி மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


sankaranarayanan
நவ 01, 2024 20:41

உங்களுடைய தலைமை நீதிபதி காலம் முடியப்போகிறது இனி அவர் மாதிரி உங்களுக்கு சாதகமாக எந்த தலைமை நீதிகளும் இருக்கவே மாட்டார்கள் நீங்கள் அக்கிரமங்களை தட்டி கேட்டால் அது தவறா இனி அந்த பாச்சா செல்லாது


Balasri Bavithra
நவ 01, 2024 21:46

உண்மை ..ஆனால் கபில் சிபல் இருக்கும் வரை நீதி நேர்மை எல்லாம் எதிர் பார்க்க முடியாது


Ramesh Sargam
நவ 01, 2024 20:37

காங்கிரஸ் தலைவர்கள் முதலில் சட்டத்தை முறையாக படிக்கவேண்டும். அதில் வல்லுநர்கள் ஆகவேண்டும். பிறகு நடவடிக்கை எடுக்கட்டும்.


M Ramachandran
நவ 01, 2024 20:34

பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதால், குழப்பமும், பொது அமைதியின்மையும் ஏற்படும். தேர்தல் ஆணயம். அதைய்ய எதிர் பார்த்து அதற்க்கு தானெ இந்த குறுக்கு புத்தி இத்தாலி கும்பலுக்கு கால் பிடிக்கும் அடிமைய்கள் வீர வசனம் எல்லாம் பேசி திரியுது. அண்ணண் செத்தால் திண்னை காலியாகுமென்றும் கனவு. இவர்கள் ஆசை நடக்க என்றென்ன்றும் வாய்பில்லை. நெல்லிக்காய்ய்ய மூட்டை அவிழ்ந்து நெல்லிக்காய்ய்யகளெல்லாம் உருண்டு ஓடி விடும்.


Ramesh Sargam
நவ 01, 2024 20:22

காங்கிரஸ் இதற்கு முன்பு தேர்தலில் தோற்றால் வாக்களிக்கும் இயந்திரத்தின் மீது குற்றம் சுமத்தினார்கள். இப்பொழுது தேர்தல் ஆணையத்தின் மீதே குற்றம் சுமத்துகிறார்கள்.


சமீபத்திய செய்தி