உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுலின் ஆணவத்தை அடக்குவோம்: அமித்ஷா பேச்சு

ராகுலின் ஆணவத்தை அடக்குவோம்: அமித்ஷா பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புனே: ‛‛ வரவிருக்கும் மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஹரியானா மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் ஆணவத்தை அடக்குவோம்'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் நடந்த பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: 2014, 2019ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலை விட வரும் மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணி சிறப்பாக செயல்படும். அதிக தொகுதிகளில் வெற்றி கிடைக்கும். பா.ஜ.,வின் வெற்றிக்காக ஒவ்வொரு தொண்டனும் உழைக்கின்றனர். 1993ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேனனுக்கு கருணை கோரியவர்களுடன் உத்தவ் தாக்கரே அமர்ந்துள்ளார். சரத் பவார் ஊழலை நிறுவனமயப்படுத்தினார். மஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், தேர்தலில் வெற்றி பெற்று, ராகுலின் ஆணவத்தை நாங்கள் அடக்குவோம். லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடிக்கு மக்கள் அங்கீகாரம் அளித்து உள்ளனர். நாம் கடினமாக உழைத்து, நமக்கு நாமே கடினமான இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். மஹாராஷ்டிராவில் மீண்டும் பாஜ., எழுச்சி பெற வேண்டும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

venugopal s
ஜூலை 22, 2024 14:06

எப்படி? மக்கள் உங்கள் ஆணவத்தை கடந்த பாராளுமன்ற தேர்தலில் அடக்கியது போலவா?


முருகன்
ஜூலை 21, 2024 22:47

மெஜாரிட்டி இல்லாத உங்கள் ஆட்சியில் ராகுலை கண்டு பயம் கொள்வது இயல்பு தானே


Karunakaran
ஜூலை 21, 2024 22:06

“சரத் பவார் ஊழலை நிறுவனமயப்படுத்தினார். “ ஆனால் ஊழல் வழக்குகள் போடப்பட்ட மாற்று கட்சியினர் தங்கள் கட்சியில் சேர்ந்தவுடன் , ஊழல் அரசியல்வாதிகளின் வழக்குகள் திரும்ப பெறப்படுகிறது. ஊழல் அற்றவர்களாக மாற்றப்படுகிறார்கள். அதுதான் ஒன்றும் புரியவில்லை.


K.n. Dhasarathan
ஜூலை 21, 2024 21:24

முதலில் சட்டசபை தேர்தலில் வெல்லுங்கள் அப்புறம் பேசுங்கள் நீங்கள் வெல்வதற்கு, மக்களுக்கு என்ன தான் செய்தீர்கள், ஆணவம் என்பது தேவையற்ற வார்த்தை, யார் அப்படி பேசுவது என்பதை வெளியே மக்களிடம் கேட்டு பாருங்கள், சும்மா பக்கத்தில் இருக்கும் ஜலராக்களிடம் கேட்காதீர்கள்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 21, 2024 20:03

ராகுல் திருத்த முடியாத கேஸ் .....


Velan
ஜூலை 21, 2024 20:00

அது எல்லாம் இனி எடுபடாது


ManiK
ஜூலை 21, 2024 19:50

Yes BJP leaders should think more strategically. Raul family has international leftist media support, so please expose them convincingly to the public. Never underestimate.


அரசு
ஜூலை 21, 2024 18:11

பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களை விடவா ஆணவம்?


Dharmavaan
ஜூலை 21, 2024 19:47

பப்பு ராகுல்கான் ஆணவம் அளவில்லை


அப்புசாமி
ஜூலை 21, 2024 17:21

உ.பி ல வாங்குனது மாதிரியே...


Senthoora
ஜூலை 21, 2024 18:11

இவங்க ஆணவம் தேர்தலில் 400 இலிருந்து 220 வந்தது தெரியாமல் புலம்புகிறார்.


vadivelu
ஜூலை 21, 2024 18:37

ஆமாம் உ பி இல் அசெம்பிளி தேர்தலில் வாங்கிய மாதிரியே


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 21, 2024 20:16

செந்தூரம் எத்தனை வருடங்களாக அரசியலைக் கவனித்து வருகிறது ?? துவக்கம் முதலே திமுக தனித்துக் தேர்தல் களம் கண்டதில்லை ...... பல ஆண்டுகளுக்குப்பிறகு அதிமுக சிதறியதால்தான் திமுக ஆட்சிக்கு வந்தது .... வரலாறு முக்கியம் குழந்தாய் ....


மேலும் செய்திகள்