உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள்

கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள்

மஹராஜ்கஞ்ச்:உத்தர பிரதேசத்தில், கொலை வழக்கில் ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மஹாராஜ் கஞ்ச் மாவட்டத்தில், 2012ம் ஆண்டு மே 22ல் ஒருவரை கட்டையால் அடித்தும், கத்தியால் கழுத்தை அறுத்தும் ஒரு கும்பல் கொலை செய்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஒன்பது பேரை கைது செய்தனர்.இந்த வழக்கை விசாரித்த மஹராஜ் கஞ்ச் மாவட்ட நீதிமன்ற நீதிபதி நீரஜ்குமார், ஒன்பது பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா, 50,000 ரூபாய் அபராதம் விதித்தார்.அபராதம் செலுத்த தவறினால், கூடுதலாக ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை