தாயை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
முசாபர்நகர்:செலவுக்குப் பணம் தராத தாயைக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உ.பி., மாநிலம், முசாபர்நகர் மாவட்டம் திண்டாவ்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோகேந்திரா. கடந்த, 2023ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி தன் தாயிடம் செலவுக்குப் பணம் கேட்டார். தாய் மறுத்தார். ஆத்திரம் அடைந்த ஜோகேந்திரா, மண்வெட்டியால் தாயை அடித்துக் கொலை செய்தார். இதுகுறித்து, திதாவி போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜோகேந்திராவை கைது செய்தனர். இந்த வழக்கு, கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணை நடத்திய நீதிபதி ரவிகாந்த், குற்றவாளி ஜோகேந்திராவுக்கு ஆயுள் தண்டனை விதித்தார்.