உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மது விற்பனை புதிய ரிக்கார்டு

மது விற்பனை புதிய ரிக்கார்டு

பெங்களூரு: பெங்களூரில் எம்.ஜி. ரோடு, பிரிகேட் ரோடு, சர்ச் தெரு, இந்திரா நகர், கோரமங்களா உட்பட பல இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலகலமாக நடந்தது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணியர் வந்ததால், மது விற்பனை அமோகமாக நடந்தது.கே.எஸ்.பி.சி.எல்., எனும் கர்நாடகா மாநில பானங்கள் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆங்கில புத்தாண்டு தினத்தில், 250 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய, இலக்கு நிர்ணயித்திருந்தது. எதிர்பார்த்ததை விட, டிசம்பர் 31ல், 308 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆனது. 2023ல் டிச., 31 அன்று, 193 கோடி ரூபாய்க்கு மட்டுமே மது விற்பனை ஆகியிருந்தது.நேற்று முன்தினம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மதுபானம் 4.83 லட்சம் பெட்டிகள் விற்கப்பட்டு உள்ளன. இதனால் கிடைத்த வருவாய் 250.25 கோடி ரூபாய். 2.92 லட்சம் பீர் பெட்டிகள் விற்பனை மூலம் 57.75 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. மொத்தம், 7.76 லட்சம் மதுபான பெட்டிகள் விற்கப்பட்டதில், 308 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.கர்நாடகாவில் புத்தாண்டு தின கொண்டாட்டத்தில், 300 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை