கேரளாவில் ரூ.826 கோடிக்கு மது விற்பனை
திருவனந்தபுரம்: கேரளாவில், ஓணம் பண்டிகையை ஒட்டி கடந்த 10 நாட்களில், 826 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது. கேரளாவில், ஓணம் பண்டிகை நேற்று கொ ண்டாடப்பட்டது. இதையொட்டி, கடந்த 10 நாட்களாகவே கேரளாவில் மது விற்பனை களைகட்டியது. பண்டிகையை ஒட்டி மதுக்கடைகளுக்கு நேற்று விடுமுறை அளி க்கப்பட்டது. இது குறித்து, 'பெவ்கோ' எனப்படும், கேரள மாநில பானங்கள் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஓணம் பண்டிகையையொட்டி ஆகஸ்ட் 25 முதல் நேற்று முன்தினம் வரையிலான 10 நாட்களில், 826 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு, 6.38 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 776.82 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்தது. ஓணத்துக்கு முந்தைய நாளான உத்திராடம் நாளி ல் மட்டும், 137.64 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. இது கடந்தாண்டில், 126.01 கோடி ரூபாயாக இருந்தது. கொல்லத்தின் கருணாகப்பள்ளி மதுக்கடையில் , மாநிலத்திலேயே உச்சபட்சமாக நேற்று முன்தினம் ஒரே நாளில், 1.46 கோடி ரூபாய்க்கு மது விற்ப னை நடந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.