உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவாலை பார்த்தால் மதுபான ஊழல் தான் ஞாபகம் வரும்: அமித்ஷா பேட்டி

கெஜ்ரிவாலை பார்த்தால் மதுபான ஊழல் தான் ஞாபகம் வரும்: அமித்ஷா பேட்டி

புதுடில்லி: ‛‛ டில்லி முதல்வர் கெஜ்ரிவால் எங்கு பிரசாரத்திற்கு சென்றாலும், மதுபான ஊழல் தான் ஞாபகம் வரும்'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது: பஞ்சாப் உட்பட எந்த இடத்திற்கு கெஜ்ரிவால் பிரசாரத்திற்கு சென்றாலும், அவரை பார்க்கும் போது மதுபான ஊழல் தான் ஞாபகம் வரும். மக்கள், கெஜ்ரிவாலை பார்க்கும் போது, அவர் முன்னால் பெரிய 'பாட்டில்'களையும் பார்ப்பார்கள். பிரசாரம் செய்ய கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்ததால், ‛இண்டியா ' கூட்டணி பலன் அடையும் என நான் கருதவில்லை. https://www.youtube.com/embed/gtATYH1C2oMதான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால், நீதிமன்றம் அதனை நிராகரித்துவிட்டது. மனுவை திருத்தி ஜாமின் கேட்டார். அது தள்ளுபடி செய்யப்பட்டது. பிரசாரம் செய்வதற்காக மட்டும் இடைக்கால ஜாமின் வழங்கியது. இது கெஜ்ரிவாலுக்கோ, ஆம் ஆத்மிக்கோ கிடைத்த வெற்றி அல்ல. இவ்வாறு அமித்ஷா கூறினார்.அமித்ஷா மேலும் கூறியதாவது: காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது சரியே. இதற்கான சாட்சி தான் ஓட்டு சதவீதம். அங்கு வெறும் 14 சதவீதம் ஆக இருந்த ஓட்டு சதவீதம் இந்தத் தேர்தலில் 40 சதவீதமாக அதிகரிக்க இந்த நடவடிக்கையே காரணம். பிரிவினைவாத குழுக்களின் தலைவர்கள் கூட ஓட்டுப் போட்டனர். இந்த நாட்டை இனியும் யாராலும் பிரிக்க முடியாது. மூத்த தலைவர் ஒருவர் வட இந்தியா, தென் இந்தியா என்று பிரிக்கலாம் என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி இந்தக் கருத்தை நிராகரிக்கவில்லை. இப்போது நாட்டு மக்கள் காங்கிரசின் கொள்கை என்னவென்று யோசிக்க வேண்டும். யாரேனும் தென் மாநிலங்களை தனி நாடு என்று தொனியில் பேசினால் அது கடும் கண்டனத்துக்கு உரியது. இந்த லோக்சபா தேர்தலில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தனிப்பெங் கட்சியாக பா.ஜ., வாகை சூடும். எனக்கூறினார்.கடந்த வாரம் பிஆர்எஸ் தலைவர் ராமாராவ் அளித்த பேட்டியில் வட இந்தியா என்பது முற்றிலும் வேறொரு தேசம். அது ஒரு தனி உலகம் எனக்கூறியிருந்தார். அதற்கு தான் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

raj rajendiran
மே 18, 2024 15:27

இந்தியாவை கொள்ளை அடிக்கும் தலைவன் போல் உள்ளது


K.n. Dhasarathan
மே 17, 2024 21:39

அமித் ஷா அடுத்தவரை குற்றம் சொல்வதற்கு முன், தன்னுடைய முந்தைய காலத்தை நினைத்து பார்க்க வேண்டும், கொற்ற ரயில் எரிப்பு, கொலைப்பழி, சிறைவாசம், வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றியது, தீர்ப்பை மாற்றியது என்கிற உங்கள் கதை எல்லோருக்கும் ஐயா


Vijay D Ratnam
மே 17, 2024 18:24

ஒங்க வீரத்தை நேத்திக்கு பொறந்த பச்சப்புள்ள கெஜ்ரிவால் மாதிரி தம்மாதோண்டு புள்ளைங்க கிட்டத்தான் காட்டுவீங்க பொழப்புக்கு திருட்டு ரயிலேறி வந்து உலக பணக்கார வரிசையில் இருக்கும் கட்டுமர மாஃபியாவிடம் காட்டினா தடம் தெரியாம பூடுவீங்க


venugopal s
மே 17, 2024 15:28

உங்களைப் பார்த்தால் மதக் கலவரம் ஞாபகத்துக்கு வருவதைப் போலவா?


Kanagaraj M
மே 17, 2024 14:47

உங்களை பார்த்தால் என்னென்னமோ ஞாபகத்துக்கு வருதே


Lion Drsekar
மே 17, 2024 13:01

உங்களுக்கு ஞாபகம் வருது , எங்களுக்கு என்னன்னவோ தோன்றுகிறது மாதா மாதம் மின்சார கட்டண உயர்வு ? பத்திரப்பதிவு உயர்வு ? சொத்து வரி உயர்வு ? குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி உயர்வு ? வெளியே சென்றால் வாகன ஓட்டிகள் கையில் ரூபாய் ஆயிரம் முதல் பத்தாயிரம் வரை கொண்டு செல்லவேண்டிய ஒரு இல்லை , எங்கு வாகனத்தை நிறுததி எதற்க்காக அபராதம் விதிப்பார்களோ என்ற பயம் , ஆகவே எங்களுக்கு அரசியல் யாராலே அடுத்து என்னவெல்லாம் வரி போடப்போகிறார்களோ என்ற பயம்தான் வருகிறது ஞாபகம் வேறு பயம் வேறு வந்தே மாதரம்


V GOPALAN
மே 17, 2024 12:59

Like G manmohansinghNot directly involvingKejriwal Liquor Excise Policy We all know but except court judges


Palanisamy Sekar
மே 17, 2024 12:38

கெஜ்ரிவால் போகுமிடமெல்லாம் காலியான மதுபாட்டில்களை தொங்கவிடனும் கருணாநிதி ஒருசமயம் பூந்தமல்லிக்கு வந்தபோது அந்த பஸ்நிலையம் அருகே மேடைக்கு எதிரே ஐந்து மணல் நிரப்பிய மூட்டைகளில் வீராணம் ஊழல், சர்க்கரை ஊழல், மஞ்சள் பெயிண்ட் ஊழல், மாஸ்டர் ரோல் ஊழல், சாராய ஊழல் என்று கட்டி தொங்கவிட்டிருந்தார்கள் கருணாநிதி மேடை ஏறியதும் அவை கண்ணில்பட்டதுமே கோபத்தில் உடனே இறங்கி போய்விட்டார் அதுபோல கெஜ்ரிவால் போகுமிடமெல்லாம் காலி பாட்டில்களை தொங்கவிடுங்கள் மனுஷன் ஓடிவிடுவார் மக்களுக்கும் சுலபமாக அவரது ஊழல் பற்றி நினைவில் வந்துகொண்டே இருக்கும்


கோகிலா
மே 17, 2024 12:30

இவரைப்.பார்த்தாலே ஜூம்லா ங்கற ஒரே வார்த்தைதான் ஞாபகத்துக்கு வருது.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி