உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எழுத்தறிவு விகிதம் 7% அதிகரிப்பு: அமைச்சர் தர்மேந்திர பிரதான்

எழுத்தறிவு விகிதம் 7% அதிகரிப்பு: அமைச்சர் தர்மேந்திர பிரதான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உலகம் முழுதும் செப்., 8ம் தேதி எழுத்தறிவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நடந்த நிகழ்வில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: நம் நாட்டில் எழுத்தறிவு பெற்றோரின் எண்ணிக்கை கடந்த 13 ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்திருக்கிறது. 2011ல் 74 சதவீதமாக இருந்த எழுத்தறிவு, 2023 - 24 காலக்கட்டத்தில், 81 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனினும், ஒவ்வொரு குடிமகனுக்கும், எழுத்தறிவு கிடைப்பது என்பது நிதர்சனமாக மாறும்போது மட்டுமே, உண்மையான முன்னேற்றம் ஏற்படும். முழு எழுத்தறிவு எட்டிய லடாக், மிசோரம், கோவா, திரிபுரா மற்றும் ஹிமாச்சல் மாநிலங்களுக்கு பாராட்டுகள். அரசு, சமூகம் மற்றும் தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியால் தான் இது சாத்தியமானது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஆரூர் ரங்
செப் 11, 2025 11:10

முழு எழுத்தறிவு பெற்ற கோவா, திரிபுரா, மிசோரம் பிஜெபி ஆளும் மாநிலங்கள்தான். தமிழ்நாடு லிஸ்ட்லேயே இல்லை.


Narayanan Muthu
செப் 11, 2025 09:31

மாநில வாரியாக தரவுகளை வெளியிடுங்கள். பிஜேபி ஆளும் மாநிலங்களின் அவலம் நாடே தெரிந்து கொள்ளட்டும்.


ஆரூர் ரங்
செப் 11, 2025 11:08

விடியல் BA இன்னும் யாரோ எழுதித் தரும் துண்டு சீட்டைப் பார்த்தே தப்பு தப்பாக வாசிக்கிறார். அவரை முதியோர் பள்ளியில் மீண்டும் சேர்க்க வேண்டும்


பிரேம்ஜி
செப் 11, 2025 07:42

நான் 107 % என்று நினைத்து இருந்தேனே!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை