உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வின் வாக்குறுதிகள் என்னாச்சு என மக்கள் கேள்வி: சொல்கிறார் சசிதரூர்

பா.ஜ.,வின் வாக்குறுதிகள் என்னாச்சு என மக்கள் கேள்வி: சொல்கிறார் சசிதரூர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: பா.ஜ.,வினர் கேரளாவுக்கு அளித்த வாக்குறுதிகள் என்னாச்சு என மக்கள் கேட்பார்கள் என காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் கூறியுள்ளார்.காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் லீக்கின் சின்னம் இருப்பதாக பிரதமர் மோடி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து சசிதரூர் அளித்த பதில்: உண்மையை சொல்ல வேண்டுமானால் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் இங்கு எடுபடாது. அதனால் அவர்கள் வேறு ஏதாவது முயற்சிக்கலாம். இங்கு (கேரளா) வந்து முஸ்லிம் லீக், ராமர் கோயில் என பேசினால், மக்கள் எல்லோரும், வேலைவாய்ப்பு, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு போன்று அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் என்னாச்சு என கேட்பார்கள். பா.ஜ., சாதனைகள் மிகவும் மோசமாக உள்ளது. கேரளாவில் எய்ம்ஸ் மருத்துவமனை, ஆயுர்வேதத்திற்கு தேசிய பல்கலைக்கழகம், மாற்றுத்திறனாளிக்காக தேசிய பல்கலைக்கழகம் ஆகிய 3 முக்கிய வாக்குறுதிகளை பா.ஜ., அளித்தது. ஆனால் ஒன்றைக்கூட அவர்கள் நிறைவேற்றவில்லை. கடந்த இரண்டு தேர்தல்களிலும் என் தொகுதியில் பா.ஜ., இரண்டாவது இடத்தையே பிடித்தது. கேரளாவில் கம்யூனிஸ்ட் பிரசாரம் மந்தமாக உள்ளது. பா.ஜ., இந்த தேர்தலை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமானால் திருவனந்தபுரம் பா.ஜ.,வின் வலுவான தொகுதியாக உள்ளது. நாங்களும் சமமான வீரியத்துடனும் நம்பிக்கையுடனும் மோதுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

kannan
ஏப் 13, 2024 09:30

Tharoor has to learn more government has given a link to know the developmental activities that has happened so far in the last ten years district wise. Tharoor can check up that.


R Kay
ஏப் 13, 2024 01:15

இத்தாலி குடும்பத்தின் அறுபதாண்டு கால கரிபி ஹட்டாவோ வாக்குறுதியும் கர்ம வீரர் காமராஜரை தோற்கடிக்க புளுகிய ரூபாய்க்கு மூன்று படி அரிசி வாக்குறுதிகளும் என்ன ஆச்சு என்றுதானே மக்கள் கேட்கிறார்கள்


selvelraj
ஏப் 12, 2024 21:38

அதெல்லாம் சரி உங்கள் சார்பில் பிரதம மந்திரி வேட்பாளர் யார் என்று சொல்ல முடியுமா? உங்கள் கூட்டணி செயல்பாடு சிரிப்பா சிரிக்குது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையா உங்கள் கூட்டணியும் கட்சியும் இருக்கும்போது இந்த பேச்சு தேவைதான் நாட்டை குட்டிச்சுவர் ஆக்கியதில் காங்கிரஸ்க்கு பெரும் பங்கு உண்டு கச்சத்தீவு தாரை வார்த்து கொடுத்தது ஒரு சின்ன உதாரணம்


Ramesh Sargam
ஏப் 12, 2024 19:52

திமுக வாக்குறுதி, காங்கிரஸ் வாக்குறுதி என்னவாச்சு என்றுதான் மக்கள் கேட்கிறார்கள் மக்களை திசை திருப்பி ஏமாற்றவேண்டாம் ஆமாம், உங்கள் மனைவி எப்படி இறந்தார்? கூறமுடியுமா?


பேசும் தமிழன்
ஏப் 12, 2024 19:02

இவர் தொகுதி தான் முதலில் போகும் போல் தெரிகிறது.... முதல் விக்கெட் இவர் தான் போல் தெரிகிறது..... அதனால் தான் இந்த உளறல்.


சுலைமான்
ஏப் 12, 2024 17:51

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு ஞாபகம் இருக்கா தலைவரே?


தத்வமசி
ஏப் 12, 2024 17:24

கேரளத்தில் வென்றால் தானே அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் நீங்கள் வென்று அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர்கள் என்ன லூசா ? இரண்டாம் இடம் முன்பு, இப்போது முதலிடம் வந்துள்ளனர் இப்படிப் பேசி பேசியே சிறுபான்மை பெரும்பான்மையாகவும், பெரும்பான்மை சிறுபான்மையாகவும் மாறிவிட்டது கேரளத்தில் நீங்கள் எல்லாம் உண்மையான நடுநிலைவாதிகள் கிடையாது பெருமான்மை மக்களை நீங்கள் கண்டுகொள்ளவே இல்லை


RAJ
ஏப் 12, 2024 17:21

நீயெல்லாம் எப்பவோ ஜெயிலுக்கு போகவேண்டிய ஆள் இன்னும் வெளில உலவிக்கிட்டு இருக்க பாக்கலாம் சிக்குவ


மேலும் செய்திகள்









புதிய வீடியோ