உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபா தேர்தல் முடிவு: மார்க் ஜுக்கர்பெர்க் கருத்துக்கு மத்திய அரசு மறுப்பு

லோக்சபா தேர்தல் முடிவு: மார்க் ஜுக்கர்பெர்க் கருத்துக்கு மத்திய அரசு மறுப்பு

புதுடில்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்து மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் கூறியது தவறு என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மறுப்பு தெரிவித்துள்ளார்.ஜோ ரோகனுடன் சமீபத்தில் நடத்திய பாட்காஸ்டில், ஜுக்கர்பெர்க், '2024 உலகம் முழுவதும் ஒரு பெரிய தேர்தல் ஆண்டாக இருந்தது. இந்தியாவைப் போல பல நாடுகளிலும் தேர்தல்கள் நடந்தன. இந்தியா உட்பட பல நாடுகளில் ஆட்சியாளர்கள் தோல்வியை தழுவினர்.பணவீக்கம் அல்லது கொரோனா தொற்றை சமாளிப்பதற்கான பொருளாதாரக் கொள்கைகள் அல்லது அரசாங்கங்கள் கொரோனாவை எவ்வாறு கையாண்டன என்பது காரணமாக இருக்கலாம். இது உலகளாவிய விளைவை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது என்று கூறியிருந்தார்.Facebook, instagram, whatsapp உள்ளிட்ட சமூக வலைத்தள நிறுவனங்களை நடத்தும் ஜுக்கர்பெர்க் இவ்வாறு கூறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள பதிவில்கூறியுள்ளதாவது:உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா 2024 தேர்தலை 64 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களுடன் நடத்தியது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான என்.டி.ஏ., மீதான நம்பிக்கையை இந்திய மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். 2024 தேர்தல்களில் இந்தியா உட்பட பெரும்பாலான பதவியில் இருந்த அரசுகள் எல்லாம் கோவிட்-க்குப் பிறகு தோற்றன என்ற ஜுக்கர்பெர்க்கின் கூற்று உண்மையில் தவறானது.2024 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. தொற்றுநோய் காலத்தில் அரசாங்கத்தின் முன்முயற்சிகள் - 80 கோடி மக்களுக்கு இலவச உணவு விநியோகம், 220 கோடி இலவச தடுப்பூசிகளை வழங்குதல் மற்றும் சர்வதேச உதவிகளை வழங்குதல் ஆகியவையே சான்று.மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரியால் தவறான தகவல் பரவியது ஏமாற்றமளிக்கிறது. உண்மைகளையும் நம்பகத்தன்மையையும் நிலைநிறுத்துவோம்.இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 14, 2025 22:14

மார்க் உளறியிருக்கிறார் ..... போலி பெயர்களில் மூரக்ஸ் இங்கே புலம்பல் .....


ஆரூர் ரங்
ஜன 14, 2025 07:44

இந்திரா காந்தி காலத்திலிருந்தே எந்தக் கட்சி அல்லது கூட்டணியும் மூன்று முறை தொடர்ந்து வென்றதில்லை. நேருவுக்கு பிறகு மூன்று முறை தொடர்ந்து பிரதமராக வென்ற ஒரே தலைவர் மோதி. அதிக காலம் சிறப்பாக ஆண்ட பிரதமர் எனும் சாதனையும் செய்யப் போகிறார்.


அப்பாவி
ஜன 14, 2025 05:25

உ.பி லே உதை வாங்குனதே தோல்விதான். இதில் ரெண்டு மாநில கட்சி எம்.பி க்கள் ஆதரவோடு மோடி ஆட்சி நடக்குது. அஸ்வின் எம்.பி.ஏ படிச்சவர். எல்லாம் தெரிஞ்சவர். ரயில்வே விபத்துக்குக்.காரணம் நாலு மிண்ணனுக்கள்னு கண்டுபிடிச்சு சொன்னவர்.


J.V. Iyer
ஜன 14, 2025 05:17

உடனே இந்த மெட்டாவை இந்தியாவிலிருந்து செயல் இழக்க செய்யவேண்டும்.


Jay
ஜன 13, 2025 23:16

பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் பேசுவது ஒவ்வொன்றும் தெரியாமல் பேசப்படுவதில்லை. ஒவ்வொரு வார்த்தையும் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிக்கையாக வெளியிடுகின்றனர். மத்திய அரசு அவர்களுக்கு ஏதேனும் ஒரு கட்டுப்பாடு விதித்தால் இது போன்று அறிக்கைகளை விடுவது வழக்கம்தான். எலான் மஸ்க் சேட்டிலைட் இன்டர்நெட் திட்டத்திற்கு அனுமதி கொடுக்காததால் தேர்தல் இயந்திரம் பற்றி தேவையில்லாத தவறான அறிக்கையை வெளியிட்டார். இங்கு நாம் எந்த கட்சியாக இருந்தாலும் வெளிநாட்டிலிருந்து பேசப்படும் பேச்சுக்களை அங்கீகரிக்கக் கூடாது. எங்கள் நாட்டை பற்றி பேச நீ யார் என்பதுதான் ஒருமித்த குரலாக இருக்க வேண்டும், யார் ஆட்சியில் இருந்தாலும்.


கல்யாணராமன்
ஜன 13, 2025 22:42

இந்தியாவில் முக நூலை தடை செய்யவும்.


Rangarajan Cv
ஜன 13, 2025 21:49

Mr. Ashwini is correct in stating that NDA won the election with clear verdict


Venkataraman Subramania
ஜன 13, 2025 21:33

It is become habit of US people few like Soros / Mark of Meta to give wrong report against India and especially against Modi Government in order support congress and its pappu. As a Indian, we standby Modi Government and I am sure no one can stop Indias Growth under his Leadership. Jai Hind. Jai Bharath. Jai Modi Ji.


Venkataraman Subramania
ஜன 13, 2025 20:53

It is become habit of US people few like Soros / Mark of Meta to give wrong report against India and especially against Modi Government in order support congress and its pappu. As a Indian, we standby Modi Government and I am sure no one can stop Indias Growth under his Leadership. Jai Hind. Jai Bharath. Jai Modi Ji.


PARTHASARATHI J S
ஜன 13, 2025 20:52

ஆளுமை என்றால் என்னவென்றே தெரியாமல் மேற்கத்திய நாடுகள் தங்களது தவறான கருத்துக்களை எக்ஸ்பர்ட் கமெண்டாக பதிவு செய்வது விஷமத்தனமானது.


kantharvan
ஜன 13, 2025 21:30

கீழே விழுந்தாச்சு ? மண் ஒட்டல அவ்ளவுதான் .