உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமராஜ்ஜியம் துவங்கிவிட்டது; யாராலும் தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங்

ராமராஜ்ஜியம் துவங்கிவிட்டது; யாராலும் தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: 'இந்தியாவில் ராம ராஜ்ஜியம் துவங்கிவிட்டது. அதை யாராலும் தடுக்க முடியாது' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்திய நாட்டவர் யாரும் குடியுரிமையை இழக்கப் போவதில்லை. பா.ஜ., அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சி அமைத்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, பெண்களின் கண்ணியம் மற்றும் கவுரவத்தின் மீதான தாக்குதலை நாங்கள் ஏற்க முடியாது.

ராம ராஜ்ஜியம்

இந்தியாவில் ராம ராஜ்ஜியம் துவங்கிவிட்டது. அதை யாராலும் தடுக்க முடியாது. ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் தங்கள் கடமைகளை பொறுப்புடன் செய்யும் போது, அது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் பொது சிவில் சட்டம் செயல்படுத்தப்படும் என்று நாங்கள் உறுதியளித்துள்ளோம். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறி வருகிறது. இதை உலகமே ஒப்புக்கொள்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Azar Mufeen
ஏப் 15, 2024 23:03

மஹாத்மா தன் முன்னால் நிற்பவர் குல்லாவோ சிலுவையோ விபூதியோ அணிந்திருந்தாலும் அவர் கண்களுக்கு மனிதனாக மட்டுமே பார்க்க தெரிந்தவர் இப்போது ஆட்சியில் இருப்பவர்களும் இருந்தவர்களும் அப்படியில்லையே


venugopal s
ஏப் 15, 2024 22:35

அப்படி என்றால் கடந்த பத்து ஆண்டுகளாக நடந்தது ராமராஜ்யம் இல்லையா? ஒரு வேளை ராவண ராஜ்யம் நடந்தது என்கிறாரா?


Anantharaman Srinivasan
ஏப் 15, 2024 21:38

ராமர் எப்பொழுது டாட்டா காட்டி விட்டு காட்டுக்கு போவார் அங்கு தான் நீரவ், லலித் இரண்டு டிகள் வங்கிகளை ஏமாற்றி விட்டு பதுங்கியுள்ளளனர்


thangavel
ஏப் 15, 2024 21:13

sari sari poi bajanai paadunga


கனோஜ் ஆங்ரே
ஏப் 15, 2024 19:01

-////பெண்களின் கண்ணியம் மற்றும் கவுரவத்தின் மீதான தாக்குதலை நாங்கள் ஏற்க முடியாது-/// அய்யா சாமியோவ் மணிப்பூரில் பெண்களுக்கு இழைத்தது என்ன? அது உங்க லிஸ்ட்ல இல்லையா சார்


Sivakumar
ஏப் 15, 2024 18:51

ராமராஜ்யம் யாருக்கும் பிரச்சனையாக இல்லை யாரும் தடுக்கவும் முற்படவில்லை ஆனால் எந்த காரணத்தினாலும் ஓரிரு இந்திய சமூகங்கள் உணவு உடை வழிபாட்டு முறைகளை சிறுமைப்படுத்ததென்றால் அது சரியல்ல


K.Muthuraj
ஏப் 15, 2024 18:32

இவருடைய பேச்சு நிறைய நேரங்களில் உண்டு பண்ணுகின்றது


ஆரூர் ரங்
ஏப் 15, 2024 18:29

காந்தி தன்னை ஒரு சனாதன ஹிந்து என்று அறிவித்தவர்.பசுப்பாதுகாப்பை வலியுறுத்தியவர். கீதோபதேசம் செய்தவர். ராமராஜ்ஜியம் அமைக்க ஆசைப்பட்டவர். நான் குறிப்பிட்டது இட்டாலி காந்திகளையல்ல. மஹாத்மா காந்தியை. இட்டாலி காந்திகளோ சனாதன எதிர்ப்பாளர்களுடன் கூட்டு வைத்துள்ள வழிகேடர்கள்.


கனோஜ் ஆங்ரே
ஏப் 16, 2024 20:09

அந்த காந்தியைத்தான் போட்டுத் தள்ளினானா? ராமராஜ்ஜியம் அமைக்க ஆசைப்பட்டவர ஏன்யா உங்க ஆளுங்க போட்டு தள்ளினாங்க அவர் சாகறப்பகூட ஹேராம்னுதானய்யா செத்தாரு


மேலும் செய்திகள்