உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாஜி முதல்வர்களின் வாரிசுகளுக்கு தாராளம்: காங்., 43 பேர் கொண்ட 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மாஜி முதல்வர்களின் வாரிசுகளுக்கு தாராளம்: காங்., 43 பேர் கொண்ட 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மாஜி முதல்வர்களின் வாரிசுகளுக்கு தாராளம் காட்டும் வகையில் காங்.,43 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டு உள்ளது.லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் கடந்த 8-ம் தேதி வெளியானதை தொடர்ந்து இன்று (மார்ச்.12) இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wr1jxglo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0லோக்சபா தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை, சில நாள்களுக்கு முன்பு பா.ஜ., தலைமை வெளியிட்டது. தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 39 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை, அக்கட்சியின் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் கடந்த 8-ம் தேதி வெளியிட்டார்.இதில், கேரளாவில் வயநாடு தொகுதியில் ராகுல் மீண்டும் போட்டியிடுகிறார்.இதனிடையே காங்கிரஸ் தேர்தல் கமிட்டி கூட்டம் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடந்தது. இதில் சோனியா, கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தின் போது அசாம், ம.பி.,.ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 43 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.முக்கிய வேட்பாளர்கள் விவரம் :1)கமல்நாத் மகன் நகுல்நாத். (சிந்த்வாரா (ம.பி.)2)தருண்கோய் மகன் கவுரவ் கோகெய் (ஜோர்கட் )3)அசோக் கெலாட் மகன் வைபவ் கெலாட் (ஜலோர், அசாம்) ஆகியோர் அடங்கிய 43 வேட்பாளர்கள் பட்டியலை பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டார். .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி