உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தலுக்கு பிறகு பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு: ராகுல்

தேர்தலுக்கு பிறகு பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு: ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேர்தலுக்கு பிறகு, ‛ இண்டியா ' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.டில்லியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு நிருபர்களிடம் ராகுல் கூறியதாவது: அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தை அழிக்க நினைப்பவர்களுக்கும், அதனை பாதுகாக்க முயற்சிப்பவர்களுக்கும் இடையே தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் ஜனநாயகத்தை காப்பதற்கானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கொள்கை ரீதியில் நாம் போராட ‛ இண்டியா' கூட்டணி முடிவு செய்துள்ளது. பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்கு பிறகு முடிவு செய்யப்படும்.

அதானி ஏகபோக உரிமை

பிரதமர் மோடி, பாஜ, ஆர்எஸ்எஸ்.,ன் திட்டங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். துறைமுகம், உள்கட்டமைப்பு, பாதுகாப்புத்துறை ஆகியவற்றின் எப்படி அதானி ஏகபோக உரிமை கொண்டாடி வருகிறாரா, அதேபோல் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை மூலம் பிரதமர் மோடியும் அரசியல் நிதியில் பிரதமர் மோடியும் ஏகபோக உரிமை செலுத்தி வருகிறார்.ஊழல் செய்பவர்கள் பா.ஜ.,வில் இணைவதாக கார்கே கூறினார். இதற்கு, அரசியல் நிதியில் தொடர்ந்து ஏகபோக உரிமை செலுத்த பிரதமர் மோடியும் முயற்சிப்பது காரணம் ஆகும். இந்த தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் உருவாக்கவில்லை. மக்கள் தான் உருவாக்கினர். நாங்கள் அறிக்கையை மட்டும் தான் எழுதினோம். ஆயிரகணக்கான மக்களிடம் கருத்து கேட்ட பிறகு இந்த தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளோம். இவ்வாறு ராகுல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

S.Ganesan
ஏப் 08, 2024 20:31

தமாசு தமாசு தேர்தலுக்கு பிறகு ஏன் ? தாங்கள் எப்படியும் தோற்று விடுவோம் என்று தெரிந்ததால் சும்மா வாய்ச்சவடால்


Indhuindian
ஏப் 08, 2024 15:19

வோட்டு என்ற அன்னிக்கி கூட்டணிக்காரங்கள்லாம் ஸ்ட்ரைட்டா பேங்க்க்காக்கு வந்துடுங்க அங்கே ரூம் போட்டு தேர்தல் கூட்டணி பத்தி பேசுவோம்


Venkatesh
ஏப் 07, 2024 19:56

சில நேரங்களில் பப்பு கரெக்டா யோசிக்கிது எதுக்கு நேரத்தை வீண் பண்ணிகிட்டுன்னு ஜெயிச்சா பாத்துகிடட்டும்????


R.MURALIKRISHNAN
ஏப் 07, 2024 00:10

அது மோடி தாங்கய்யா, அது சரி இத்தாலிக்கு டிக்கட் வாங்கிட்டீங்களா


அருண் பிரகாஷ் மதுரை
ஏப் 05, 2024 22:51

கடந்த இரண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது காங்கிரஸ் பல மாநிலங்களில் ஆட்சியில் இருந்தும் 44,55 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.. இப்போது 3 மாநிலத்தில் மட்டுமே ஆட்சியில் இருக்கிறது.அதிலும் அதிருப்தி நிலவுவது வெட்ட வெளிச்சம்.இந்த தேர்தலில் 100 தொகுதிகள் காங்கிரஸ் தனித்து வெற்றி பெற்றால் அதுவே சாதனை வெற்றிதான்.இதில் பிரதமர் கனவு வேறு. முந்தைய கூட்டணி ஆட்சி போல இந்தியாவைக் கூறு போட்டு கொடுத்து விட்டு கொள்ளை அடிக்கும் கனவு எல்லாம் மறந்து விடுங்கள்.ஜூன் 4 அன்று எந்தெந்த மாநிலங்களில் ஒற்றை இலக்கத்தில் வெற்றி என்று பாருங்கள்.பல இடங்களில் பூஜ்ஜியம் கூட கிடைக்கும் போல. ஜூன் 4 அன்று தெரியும் உங்கள் கட்சியின் எதிர்காலம்.பிரதமர் மோடி என்று அன்று கூறுங்கள்.


Bhakt
ஏப் 05, 2024 22:24

வயநாட்டிலும் தோற்க போறீங்க பப்பூ ஜி


NicoleThomson
ஏப் 05, 2024 21:14

வழக்கம்போல இந்தியாவை ஏலம் போட காங்கிரஸ் ரெடி ?


MARUTHU PANDIAR
ஏப் 05, 2024 20:53

பிரதமர் யாரன்னு சொல்லி வோட்டை கேப்பீங்க ? அதுக்கே அருகதை இல்ல பாஜ மேல மட்டும் அதே பல்லவியை பாடுறார் இவர் பின்னாடி ஒரு சுய நல கும்பல்


தாமரை மலர்கிறது
ஏப் 05, 2024 20:50

முப்பது நாற்பது தொகுதிகளை வென்றெல்லாம் பிரதமர் ஆகமுடியாது கண்ணு பிஜேபி ஐநூறு தொகுதிகளை வெல்லும்


venugopal s
ஏப் 05, 2024 20:13

பாஜகவிடம் பிரதமர் வேட்பாளர் ஒருவர் மட்டுமே உள்ளார், காங்கிரஸ் கூட்டணியில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனரே!


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி