உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை: வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட சமாஜ்வாதி மீது காங்., அதிருப்தி

கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை: வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட சமாஜ்வாதி மீது காங்., அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்ட நிலையில், இதற்கு காங்கிரஸ் கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது. தாங்கள் கேட்ட இடங்களிலும் வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்து உள்ளது எனக் கூறியுள்ளது.லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக ஒருங்கிணைந்த ‛இண்டியா' கூட்டணியில் ஆரம்பம் முதலே குழப்பம் நிலவி வருகிறது. மே.வங்கத்தில் தனித்து போட்டியிடுவோம் என மம்தா அறிவித்தார். அவரை பின்பற்றிய ஆம் ஆத்மி, பஞ்சாபில் தனித்து போட்டியிடுவோம் எனக்கூறியுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் வெளியேறி மீண்டும் பா.ஜ., அணியில் இணைந்துள்ளது. சமீபத்தில் நடந்த ம.பி., சட்டசபை தேர்தல் முதல் காங்கிரசுக்கும், சமாஜ்வாதிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு கட்சிகளும் மாறி மாறி விமர்சனம் செய்தன. இதனால், சமாஜ்வாதியும் கூட்டணியில் இருந்து வெளியேறும் எனக்கூறப்பட்டது. இருப்பினும், உ.பி.,யில் இரு கட்சிகள் இடையே நடந்த தொகுதி பங்கீடு பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டதால், 11 தொகுதிகளை ஒதுக்க சமாஜ்வாதி ஒதுக்கியது.இந்நிலையில் சமாஜ்வாதி கட்சி லோக்சபா தேர்தலுக்கான 16 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இது காங்கிரஸ் கட்சிக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் உ.பி., மாநில தேர்தல் பொறுப்பாளர் அவினாஸ் பாண்டே கூறுகையில், சமாஜ்வாதி கட்சி கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை. கூட்டணி குறித்து ஒரு தலைபட்சமாக அக்கட்சி செயல்படுகிறது. நாங்கள் கேட்ட இடங்களிலும் அக்கட்சி வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது. இது குறித்து எங்களிடம் தகவல் ஏதும் கூறவில்லை. அக்கட்சி ஆபத்தான அரசியல் செய்கிறது. ஆனால், காங்கிரஸ் கூட்டணி தர்மத்தை பின்பற்றி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

K.Ramakrishnan
ஜன 31, 2024 21:48

கூட்டணி தர்மம் பற்றி காங்கிரஸ் பேசக்கூடாது. திருச்சியில் ஜெயித்து விட்டு தி.மு.க.வையே குறை கூறியவர் தான் திருநாவுக்கரசர். சிதம்பரம் மகன் கார்த்தி மட்டும் யோக்கியமா? தி.மு.க.வை சாடியவர் தான்.. இவர்களை எல்லாம் இனி மக்கள் எம்.பி.ஆக்கவே கூடாது.


Ks iyer
ஜன 31, 2024 18:55

காங்கிரஸ் இந்தியா (I.N.D.I.A) கூட்டணியில் இருந்து வெளியேறி 543 லோக்சபா தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபிக்க வேண்டும். மாநில கட்சிகளிடம் தங்கள் கட்சியை அடகு வைப்பதற்கு பதிலாக, தங்கள் கட்சியை வளர்க்க வேண்டும்


இளந்திரையன், வேலந்தாவளம்
ஜன 31, 2024 18:17

கான்கிராஸ் இல்லாத பாரதம் ஒருநாள் இருக்கும் என்று தெரியும்... இவ்வளவு சீக்கிரமாகவா?...


Nagarajan D
ஜன 31, 2024 17:56

காங்கிரஸ் ஒரு செல்லாக்காசாகி பல வருடம் ஆகி விட்டது... நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த பொழுது இருந்தது தான் காங்கிரஸ் பிறகு இருப்பது நேரு காந்தி குடும்ப அடிமைகள்...


Anand
ஜன 31, 2024 17:41

இன்னுமா புரியவில்லை, உங்களை எவரும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை, இந்த லட்சணத்தில் நடைபயணம் அது இதுனு கூறுகெட்டத்தனமா கூத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்


நரேந்திர பாரதி
ஜன 31, 2024 17:16

இருப்பது எட்டும் ஒன்னு ஒண்ணா கழிஞ்சி கடைசியில காங்கி மட்டுமே மிஞ்சும் போல இருக்கு


Kalyan Singapore
ஜன 31, 2024 15:46

தொகுதி பங்கீட்டு செய்ய வேண்டிய நேரத்தில் பாத யாத்திரை போகிறார் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் . எதிர்க்கட்சிகள் இதனாலேயே வெறுத்துப்போய் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்க தொடங்கி விட்டன தலைவர் பாத யாத்திரை முடிந்து பிறகு வெளிநாட்டில் புத்துணர்வும் பெற்று திரும்பி வரும் வரை காத்திருக்குமானால் மூழ்கும் கப்பலில் CAPTAIN வரும் வரை காத்திருந்து மடிந்து போகும் நிலை தான் வரும். கூட்டணி கட்சிகளுக்கு அதுவரை காத்திருக்க விருப்பமில்லை . எனவே அவை தங்கள் வேட்பாளர்களை அறிவிக்க தொடங்கி விட்டன . MARCH மாதத்தில் தேர்தல் பணிகளை அவர்கள் துவக்க வேண்டுமே ?


A1Suresh
ஜன 31, 2024 15:28

சனாதனம் என்ற பொதுவான தர்மமே அறியாதவனுக்கு கூட்டணி தர்மம் மட்டும் எப்படித் தெரியும் ?


Duruvesan
ஜன 31, 2024 15:17

சின்ன விடியல் சனாதான ஒழிப்புனு சொல்லி இண்டி கூட்டணிக்கு சமாதி கட்டியதற்கு நன்றி. அதை கனி பேசலைனா காங்கிரஸ் MP சாட்டிஸ்கர் ஜெயிச்சி இருக்கும். இப்போ எல்லாரும் மூடிட்டு இருந்து இருப்பானுங்க. எலெக்ஷன் முன்னாடியே இண்டி கூட்டணிக்கு சாவு மணி அடித்த விடியல் வாழ்க


SUBBU,MADURAI
ஜன 31, 2024 14:40

முதலில் கூட்டணி தர்மம் என்றால் என்னவென்று காங்கிரஸ் கட்சிக்கு தெரியுமா? நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் சமஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மத்திய பிரதேசத்தில் கார்கேவிடம் ஒரு எட்டு தொகுதிகளையாவது கொடுங்கள் என்று கேட்டார் அதற்கு காங்கிரஸ் அவருக்கு ஒரு தொகுதியை கூட தர மறுத்து விட்டு அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சியே போட்டியிட்டு தோல்வியடைந்தது அந்த கோபத்தில் தான் அகிலேஷ் யாதவ் இப்போது உபியில் காங்கிரஸை வச்சு செய்கிறார் இப்போது மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி தர்மம் ஞாபகத்துக்கு வந்து விடும் மாநிலங்களில் உள்ள தங்கள் கட்சியின் தலைவர்களை வளர விடாமல் அவர்களுக்குள் கோஷ்டிகளை வளர்த்து விட்டு தாங்கள் மட்டுமே அதிகாரத்தை வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டது என இப்படி காங்கிரஸின் செயல்பாடுகளை பிடிக்காத பலதலைவர்கள் அந்தக் கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி துவக்கி இன்று அவர்கள் பெரிய கட்சிகளாக உருவெடுத்து விட்டனர் அப்படி பிரிந்தவர்கள் தான் சரத்பவார், மம்தா பானர்ஜி, YS.ஜெகன்மோகன் ரெட்டி, பி.ஏ.சங்மா, குலாம்நபி ஆஸாத், புதுச்சேரி முதல்வர் N.ரெங்கசாமி,G.k.வாசன், போன்றவர்கள்.ஆகவேதான் அக்கட்சி இன்று மக்களிடமும் கூட்டணி கட்சிகளிடமும் நம்பிக்கை இழந்து அழியும் நிலையில் இருக்கிறது.


Bellie Nanja Gowder
ஜன 31, 2024 16:58

இங்கு குறிப்பிட்டுள்ள தலைவர்கள் சமீப காலமாக விலகியவர்கள். இப்படி நேரு குடும்ப வாரிசு அரசியலை விரும்பாமல் விலகியவர்கள் நேரு காலத்தில் இருந்தே உள்ளர்கல். அவர்கள், ராஜாஜி, காமராஜர், நிஜலிங்கப்பம் சஞ்சீவ ரெட்டி, ஒய் பி சவாண், தேவராஜ் அரஸ், ஜி கே மூப்பனார், ஜெயப்ரகாஷ் நாராயண், சரண் சிங், வி பி சிங், அருண் நேரு, இன்னும் பலர், நேரு குடும்ப ஆதிக்கம் இருக்கும் வரை, காங்கிரசுக்கு அழிவு தான்,


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை