உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புல்வாமாவில் உயிரிழந்த வீரரின் மகள் திருமணம் தாய்மாமனாக பங்கேற்ற லோக்சபா சபாநாயகர்

புல்வாமாவில் உயிரிழந்த வீரரின் மகள் திருமணம் தாய்மாமனாக பங்கேற்ற லோக்சபா சபாநாயகர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோடா:புல்வாமாவில், 2019-ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரரின் மகள் திருமணத்தில், தாய்மாமனாக லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்று சடங்குகளை செய்தார்.ஜம்மு- - காஷ்மீரின் புல்வாமா பகுதியில், 2019 பிப்., 14-ல் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனம் மீது பாக்., பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.இதில், 40 வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களில், ராஜஸ்தான் மாநிலம் கோடா பகுதியைச் சேர்ந்த ஹேம்ராஜ் என்பவரும் ஒருவர். அப்போது அவரது மகள் ரீனா மீனாவுக்கு, 19 வயது. ஹேம்ராஜின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற கோடா லோக்சபா தொகுதி எம்.பி.,யான ஓம் பிர்லா, ஹேம்ராஜின் மனைவி மதுபாலாவுக்கு மூத்த சகோதரனாக இருந்து, அவரது குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.கோடா தொகுதியிலேயே தொடர்ந்து மூன்று முறை வென்று எம்.பி.,யாகவும், கடந்த ஆறு ஆண்டுகளாக சபாநாயகராகவும் ஓம் பிர்லா இருக்கிறார். ஹேம்ராஜ் குடும்பத்துக்கு அளித்த வாக்குறுதியை மறக்காமல், ஆண்டு தோறும் ரக் ஷா பந்தன் தினத்தில் சகோதரனாக, அந்த குடும்பத்துக்கு பரிசுகளை வழங்குவதோடு, தேவையான உதவிகளையும் செய்து வந்தார். இந்நிலையில், ஹேம்ராஜின் மகள் ரீனா மீனா, 25, திருமணம், கோடா-பண்டி அருகே உள்ள சங்கோட் கிராமத்தில் நடந்தது. அதில், ஏற்கனவே உறுதி அளித்தபடி, மணப்பெண்ணுக்கு தாய்மாமன் முறையில் பங்கேற்று, அனைத்து திருமண சடங்குகளையும் ஓம் பிர்லா செய்தார். ராஜஸ்தானில், திருமணத்தின்போது, 'மைரா' என்ற சடங்கில் மணப்பெண்ணின் தாய்க்கு, அவரது சகோதரர் பரிசுகள் வழங்குவது வழக்கம். இதன்படி, மணப்பெண்ணின் தாயும் ஹேம்ராஜின் மனைவியுமான மதுபாலாவுக்கு சகோதரராக புடவை உள்ளிட்ட பரிசுகளை ஓம் பிர்லா வழங்கினார். திருமண நிகழ்வு முழுதும் ஒவ்வொரு சடங்கிலும் ஓம் பிர்லா பங்கேற்றார். முன்னதாக, திருமணத்துக்கு வந்த சபாநாயகருக்கு ஆரத்தி எடுத்து, நெற்றியில் திலகமிட்டு மதுபாலா வரவேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

சக்தி
ஏப் 14, 2025 21:14

இப்படி ஓவ்வொரு அரசியல்வாதியும் இருக்க வேண்டும்


BALAJI RADHAKRISHNAN
ஏப் 14, 2025 19:19

He is great


c.mohanraj raj
ஏப் 14, 2025 12:34

அவர்களின் பாதம் பணிந்து வணங்குகின்றேன்


Karthik
ஏப் 14, 2025 09:37

Om Birla is a GREAT MAN & REAL HERO. SALUTE..


Naga Subramanian
ஏப் 14, 2025 09:23

இன்றளவும் மனிதம் இருக்கிறது என்பதை கட்சிக்கு அப்பால் நின்று தாய் மாமனாய் இருந்து அனைத்து சடங்குகளையும் உடன் நின்று செய்திடும் ஓம் பிர்லா அவர்கள் நிரூபித்திருக்கிறார். கண்கள் பனித்திடும் இவ்வேளையில், எனது மனத்தர்ந்த வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களை போன்றோரே மக்களில் மனதில் என்றும் நிறைந்து நின்றிருப்பர். இவர் போல் அனைவரும் இருந்துவிட்டால், நமக்கென்றும் இன்பமே


krishnamurthy
ஏப் 14, 2025 08:59

great


Varadarajan Nagarajan
ஏப் 14, 2025 07:33

வாழ்த்த வார்த்தைகளிலை. உணர்வுபூர்வமான இந்த செய்தியை படிக்கும்போது கண்கள் ஆனந்தக்கண்ணீரில் பணிக்கின்றது. மற்ற அரசியல் கட்சிகளுக்கும் பிஜேபி கட்சிக்கும் உள்ள மஹா வேறுபாடு இதுதான்


xyzabc
ஏப் 14, 2025 04:57

பெருந்தன்மையமான சபாநாயகர். ஓம் சார் தங்களுக்கு சலாம்


வாய்மையே வெல்லும்
ஏப் 14, 2025 03:47

கேட்கவே அவ்வளவு சந்தோசமாக உள்ளது. இறைவன் புதுமண தம்பதிக்கு எல்லா நன்மைகளும் செய்யட்டும். ஈசன் நல்லதே செய்வான். ஓம் ஓம் ஓம்


Kasimani Baskaran
ஏப் 14, 2025 03:46

தனது தொகுதி மக்களை இப்படித்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு முன் உதாரணமாக இருக்கிறார் ஓம் பிர்லா. பாராட்டுகள்.


முக்கிய வீடியோ