உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபா தேர்தலுக்காகவே இண்டி கூட்டணி : சரத் பவார்

லோக்சபா தேர்தலுக்காகவே இண்டி கூட்டணி : சரத் பவார்

மும்பை : ''லோக்சபா தேர்தலுக்காகவே, 'இண்டி' கூட்டணி உருவாக்கப்பட்டது,'' என, தேசியவாத காங்., சரத் சந்திர பவார் பிரிவு சரத் பவார் குறிப்பிட்டார்.மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., அடங்கிய, 'மஹாயுதி' கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, காங்., - உத்தவ் தாக்கரேயின் சிவசேனா - சரத் பவாரின் தேசியவாத காங்., ஆகியவை, தேசிய அளவில் 'இண்டி' கூட்டணியிலும், மாநிலத்தில், 'மஹா விகாஸ் அகாடி' கூட்டணி என்ற பெயரிலும் செயல்படுகின்றன. கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில், இந்த கூட்டணி படுதோல்வி அடைந்ததில் இருந்து, கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.மஹாராஷ்டிராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தனித்து போட்டியிடப் போவதாக, முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா அறிவித்துள்ளது. மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் இடம் பெற்றுள்ள அவர், காங்., - தேசியவாத காங்கிரசிடம் கலந்து ஆலோசிக்காமல் முடிவை அறிவித்தார். இந்நிலையில், தேசியவாத காங்., சரத் சந்திர பவார் தலைவர் சரத் பவார் கூறுகையில், ''லோக்சபா தேர்தலுக்காகவே இண்டி கூட்டணி உருவாக்கப்பட்டது. சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்து இதுவரை கூட்டணியில் எந்த பேச்சும் நடக்கவில்லை,'' என்றார்.உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக சமீபத்தில் உத்தவ் தாக்கரே அறிவித்த நிலையில், தற்போது அதே பாணியில் சரத் பவாரும் மறைமுகமாக பேசியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Bhaskaran
ஜன 15, 2025 11:02

அதுக்கு வாய்ப்பில்லை


ஆரூர் ரங்
ஜன 15, 2025 10:29

ஆமாம். அந்த லோக்சபா தேர்தலில் கூட கேரளாவின் 20 தொகுதிகளில் தொகுதிக்கு இரண்டு பேர் வீதம் நாற்பது INDI கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் நிறுத்தபட்ட சாதனை நடந்ததே.


பேசும் தமிழன்
ஜன 15, 2025 07:46

இந்தி கூட்டணி என்பதே ஒரு ஏமாற்று வேலை.. ஒவ்வொரு மாநிலத்திலும் வேறு வேறு நிலைப்பாடு எடுப்பார்கள்.. மாறி மாறி .... ஆனால் ஒரே கூட்டணியில் இருக்கிறோம் என்று கதை அளப்பார்களாம்.... மக்களை எல்லாம் கேனயர்கள் என்று நினைத்து விட்டார்கள் போல தெரிகிறது ???


N Srinivasan
ஜன 15, 2025 06:56

அடுத்த லோக்சபா தேர்தலுக்குள் இந்த கூட்டணி இல்லாமல் போய் விடும். காரணம் எல்லோரும் திருடர்கள் யாருக்கும் யார் மேலேயும் நம்பிக்கை இல்லை. அதுதான் இந்த கூட்டணியின் அழிவுக்கு காரணம்


V GUNASEKARAN
ஜன 15, 2025 06:33

சட்டுபுட்டுனு இந்த புள்ளி கூட்டணிக்கு முடிவு கட்டுங்கப்பா கொசுத்தொல்லை தாங்கமுடியலை.


தாமரை மலர்கிறது
ஜன 14, 2025 23:46

பவாருக்கு மாநிலத்திலும் ஆட்சி இல்லை. மத்தியிலும் ஆட்சி இல்லை. ரைடு வரும் முன், பயம் வரும். இண்டியோட கூட்டணி வைச்சா மண்டி போட நேரிடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை