உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நேபாளத்தில் என்ன நடந்தது என்று பாருங்கள்; வழக்கு விசாரணையின் போது மேற்கோள் காட்டிய சுப்ரீம் கோர்ட்

நேபாளத்தில் என்ன நடந்தது என்று பாருங்கள்; வழக்கு விசாரணையின் போது மேற்கோள் காட்டிய சுப்ரீம் கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''நேபாளத்தில் என்ன நடந்தது என்பது தெரியுமல்லவா,'' என்று இளம் சிறார்கள் சமூக வலைதளங்களில் ஆபாச படங்களை பார்க்க தடை கோரிய மனு மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சமூக வலைத்தளங்களில் உள்ள ஆபாச வீடியோக்களை கட்டுப்படுத்த வேண்டும். இளம் சிறார்கள் சமூக வலைதளங்களில் ஆபாச படங்களை பார்க்க, தடை விதிக்க வேண்டும் எனச் சொல்லி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெயின் என்பவர் சுப்ரீம்கோர்ட்டில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9ekikmlo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கு இன்று (நவம்பர் 3) தலைமை நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வருண் தாக்கூர் வாதிடுகையில், ' கோவிட் காலகட்டத்தில் பள்ளிகள் ஆன்லைன் வாயிலாகச் செயல்பட்டது. அப்போது முதல் குழந்தைகள் மிக இளம் வயதிலேயே டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். செல்போன் செயலிகளில் ஆபாச வீடியோக்களை கட்டுப்படுத்த எந்தவிதமான வழிமுறையும் இல்லை. இந்தச் சிக்கலைச் சமாளிக்க எந்தவொரு சட்டமும் இல்லை. குறிப்பாக 13 முதல் 18 வயதுக்குட்பட்டோரை ஆபாச வீடியோக்கள் கடுமையாகப் பாதிக்கின்றன' என தெரிவித்தார்.நேபாளத்தில் நடந்த போராட்டத்தை மேற்கோள் காட்டி, இது போன்ற வழக்குகளை விசாரிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: நேபாளத்தில் சமூக வலைத்தளங்களைத் தடை செய்ய ஒரு முயற்சி நடந்தது. நேபாளத்தில் என்ன நடந்தது என்பது தெரியுமல்லவா? அதன் விளைவு என்னவென்று நீங்கள் பார்த்தீர்கள். இது தொடர்பாக பார்லிமென்ட் மற்றும் அரசு தான் பரிசீலனை செய்ய வேண்டும். எனவே நீங்கள் அவர்களிடம் தான் கோரிக்கை வைப்பது சரியாக இருக்கும். இதை எங்களால் ஏற்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

நேபாளத்தில் நடந்தது என்ன?

நேபாளத்தில் திடீரென வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து அரசை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இதில் 20 பேர் உயிரிழந்தனர். 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.அந்த இளைஞர்கள் போராட்டத்தால் தான் நேபாள அரசு கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Padmasridharan
நவ 05, 2025 15:58

அரசு கவிழாமல் இருக்கணும்னா மதுவுக்கோ, இலவசத்துக்கோ மக்களை அடிமைப்படுத்தியாக வேண்டுமா சாமி. Tic Tok ஐ நிறுத்தவில்லையா இந்நாட்டு அரசு. பொது இடங்களில் பிடிக்காமல் இருக்க 500௹ அபராதம் என்ன ஆச்சு. யாரோ பிடிக்கும் சிகரெட் புகை மத்த மக்களுக்கு நோய்களை பரப்ப வேண்டுமா.


Rajasekar Jayaraman
நவ 04, 2025 18:14

சமூக வலைதளத்தை நிறுத்த சொல்லவில்லை மாறாக ஆபாச வீடியோக்களை மட்டுமே நிறுத்த சொல்வது தவறா சுப்ரீம் கோர்ட் என்ன நினைத்து இந்த தீர்ப்பை சொன்னது.


அப்பாவி
நவ 04, 2025 05:53

ஹையா... இவிஙளும் டி.வி, பத்திரிகையெல்லாம் படிச்சு விஷயங்களை தெரிஞ்சு வெச்சிருக்காங்க. இல்லேன்னா, 1931 லிருந்து ஆரம்பிப்பாங்க.


Varadarajan Nagarajan
நவ 04, 2025 00:02

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டபிறகு தேர்தல் சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கில் அதற்க்கு இன்னும் சரியான சூழல் மேம்பட கால அவகாசம் தேவை என மத்திய அரசு கூறியபோது நீதிமன்றம் அதை கருத்தில்கொண்டதா? ஒருசில வழக்குகளில் மட்டும் அரசின் கொள்கைமுடிவில் தலையிடமுடியாது என நீதிமன்றம் கூறுவது ஏற்புடையதா?


nagendhiran
நவ 04, 2025 06:21

370 நிரந்திரமாக போடபட்டது இல்லை?


மணிமுருகன்
நவ 03, 2025 23:15

நேபாளத்தில் போராட்டம் என்பது சமூக ஊடகத் தடை என்றால் மக்கள் அல்லது போராட்டக்காரர்கள் ஏன் ஊழலை அழியுங்கள் என்று முன்னால் அமைச்சர்கள் ஆளும் அமைச்சர்களை எதிர்த்து ஏன் கோஷமிட்டார்கள் சமுக வலைதளம் என்றப் போர்வரயில் நடந்த ஊழல் எதிர்ப்பு போராட்டம் கொரோனா நேரத்தில் கைப்பேசி தேவைப்பட்டது உண்மை 2 வருட வாழ்க்கை வீனடிக்கக் கூடாது என்பதால் அதன் பொறகு எதற்கு பொள்ளைகள் கையில் கைபேசி கொடுக்கிறார்கள் பெற்றோர் அப்படியே கொடுத்தாலும் வைப்பைவ் இணைப்பில் குழந்தைகள் சேனல் தடை செய்யலாமே எவ்வளவோ வசதிகள் உள்ளது பயனுள்ளவை ஆனால் அதை யாரும் கவனத்தில் கொள்வதில்லை அதனால் பல பிரசனைகள் உருவாகிறது திருச்சியில் ஒரு ஒப்பாரி கூட்டம் உள்ளது தெரொயாத பித்தலாட்டம் கெட்ட வேண்டதாக பயன்பாடுகள் அத்ானையும் அத்துப்படி ஆனால் வாழ்க்கைக்கு தேவையான படிப்பு மண் வருங்கால அரசியல் கொத்தடிமைகள் ஒருத்தன் மதிக்க மாட்டான் அன்று அதை செய்தாபய் என்று பழிச் சைல் வரும் என்பதை மறக்க வேண்டாம்


Keshavan.J
நவ 03, 2025 22:58

Our central Law ministry is toothless. There is no accountability to SC judges who passes stupid opinions. In Nepal there was total removal of social media. That is why students riot happened. Here the petitioner requesting the court to remove adult movie sites. If the youngsters come on street to fight for watching adult movie sites they have to be taken to cleaners by security personnels, These youngsters are not fit to live in this world.


Barakat Ali
நவ 03, 2025 21:27

நேபாளத்தில் போராளிகளை ஒடுக்க அந்த அரசிடம் வழிமுறைகள் இருக்கவில்லை ..... இந்தியாவில் நிலைமை அப்படி இல்லை ......


தமிழ்வேள்
நவ 03, 2025 20:24

கள்ளச்சாராயம் கள்ளத்தொடர்புகள் திருட்டு ஃபிராடு கொலை கொள்ளைகளையும் தடை செய்ய இயலாது.. இவற்றில் ஈடுபடுபவர்கள் உரிமை பாதிப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்தாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை..


நிக்கோல்தாம்சன்
நவ 03, 2025 20:08

அந்த நீதிபதிக்கு புரிந்து தான் நேபாளத்தை பாருங்க என்றாரா ?


தாமரை மலர்கிறது
நவ 03, 2025 19:52

நேபாளம் முதுகெலும்பில்லாத நாடு. இந்தியா அதை பின்பற்றமுடியாது. சீனாவை பாருங்கள். அங்கு இந்த கட்டுப்பாடு உள்ளது. ஆன் லைனில் கேம் கூட இளைஞர்கள் விளையாடமுடியாது. அதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு செயல்படுங்கள்.


சமீபத்திய செய்தி