உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியின் அவலம் பற்றி வீடியோ வெளியிட்ட கவர்னர்; நன்றி சொன்னார் கெஜ்ரிவால்!

டில்லியின் அவலம் பற்றி வீடியோ வெளியிட்ட கவர்னர்; நன்றி சொன்னார் கெஜ்ரிவால்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் சில பகுதிகளில் கழிவுநீர் வெளியேற்றம், முறையற்ற மின்சார விநியோகம், போதுமான குடிநீர் இல்லாமல் மோசமான நிலையில் உள்ளதாக கவர்னர் சக்சேனா வீடியோ வெளியிட்டு உள்ளார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள கெஜ்ரிவால், இப்பிரச்னை விரைவில் சரி செய்யப்படும் என தெரிவித்தார்.டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக அதிஷி உள்ளார். டில்லியில் கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கும், ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில், டில்லியில் சில பகுதிகளில் கவர்னர் வி.கே.சக்சேனா ஆய்வு செய்தார். அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து ' ஆம் ஆத்மி ஆட்சியில் மிக மோசமான நிலை' எனக்கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில், நேற்று மீண்டும் தலைநகரில் லட்சக்கணக்கான மக்களின் ஆதரவற்ற நிலையையும், பரிதாபமான வாழ்க்கையையும் கண்டது ஏமாற்றத்தையும், கவலையையும் அளிக்கிறது. தெருக்களில் நிரம்பி வழியும் சாக்கடை நீரால் துர்நாற்றம் வீசுகிறது. டில்லியைச் சேர்ந்த பெண்கள் தங்களது பிரச்னைகளையும், மனதை கனக்கச் செய்யும் துன்பங்களையும் கூறுகின்றனர். நான் சென்ற பகுதிகளில் முறையான கழிவுநீர் வசதி இல்லை. இதனால், சாலைகளில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. முறையான மின்சாரம் வரவில்லை. கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. 7 - 8 நாட்களுக்கு ஒரு முறை வரும் தண்ணீர் லாரிகளையே நம்பி உள்ளனர். இங்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தூய்மைப்பணிகள் திங்கட்கிழமை முதல் செய்து தரப்படும். இதற்கான பணிகளை நானே நேரடியாக கண்காணிப்பேன். முன்னாள் முதல்வர், தற்போதைய முதல்வர், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், இந்த பகுதிகளுக்கு சென்று, மிக மோசமான அவல நிலையை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். அதனை மாற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் சக்சேனா கூறியுள்ளார்.

நன்றி சொன்ன கெஜ்ரிவால்

இதற்கு நன்றி தெரிவித்து முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: எங்களிடம் உள்ள குறையை சுட்டிக்காட்டிய கவர்னர் சக்சேனாவிற்கு எனது மனதில் இருந்து நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த குறைகளை சரி செய்ய தேவையான நடவடிக்கையை எடுப்போம். முன்னர், அவர் சுட்டிக்காட்டிய பகுதிகளில் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதனை முதல்வர் அதிஷி விரைவில் துவக்கி வைக்க உள்ளார். கவர்னர் தற்போது சுட்டிக்காட்டிய பகுதிகளில் தூய்மைப்பணி விரைவில் துவங்கும். எங்களின் குறைபாடுகளை கவர்னர் தொடர்ந்து சுட்டிக்காட்டினால், அதனை சரி செய்து கொள்வோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அப்பாவி
டிச 23, 2024 07:14

பிரதமரும் மூத்த பா.ஜ தலைகளும் டில்லியில் தங்குவதே இல்லை. மெடல் வாங்க வெளிநாடு போயிடறாங்க.


SVR
டிச 23, 2024 08:35

அதனால் என்ன? பிரதமர் என்ன டெல்லிக்கு மட்டும் தான் பிரதமரா? மற்ற பாஜக தலைவர்கள் சும்மா இருக்கிறார்களா? சக்சேனா எதையெல்லாம் சுட்டி காட்டியதெல்லாம் நாங்கள் செய்வோம் என்று மார் தட்டி ஆட்சிக்கு வந்தவர்கள் தானே இந்த ஆம் ஆத்மி கட்சி? இதற்கு முன்னால் இருந்தவர் நன்றி சொல்கிறாராம். அதை மக்கள் நம்ப வேண்டுமாம். என்னே ஒரு பித்தலாட்டம் சிலர் இவர்களை அர்பன் நக்சல் என்று கூறுகிறார்கள். எவன் அப்பன் வீட்டு சொத்து? அள்ளி விடுகிறார்கள். இந்த திராவிட கும்பல் ஆரம்பித்ததை நாடு முழுதும் பரப்பி மக்களின் மூளையை மழங்கடித்துவிட்டு அவர்களை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விட்டார்கள் இவர்களின் சுய நலத்திற்காக. நாட்டின் மக்கள் தொகை புற்றீசல் போல் ஆகிவிட்டது. இதில் உமக்கு கவலை பிரதமருக்கு விருது வழங்குவது.


Duruvesan
டிச 23, 2024 04:29

தோற்க போகும் கெஜ்ரியை ஜெயிக்க வெக்க போகும் பிஜேபியின் ஆளுநர் வாழ்க


V வைகுண்டேஸ்வரன்
டிச 22, 2024 21:47

கவர்னர் பதவி, அதுவும் ஒரு Union territory யின் கவர்னர் ஜெனரல் பதவி இந்திய அரசாண்மை யின் padhavi, thats a Cobstituitional post. இந்த மாதிரி பதவியில் இருந்து கொண்டு ஒருத்தர் வீடியோ எடுத்து கிட்டிருக்கார்.


vijay
டிச 23, 2024 02:09

அதெல்லாம் நல்லாத்தான் கருத்து போடற. இங்கே ஒருத்தர் போட்டோ ஷூட்டை எடுத்தே, நாடும் நாட்டு மக்களும் நல்லாவே இருக்காங்க, விடியல் கொடுத்துட்டோம் என்று பீலா உட்டுகினு இருக்கறாரே, அதைப்பத்தி கருத்து போடு பார்க்கலாம். மாட்டே இல்லை.


ghee
டிச 23, 2024 08:19

gst officer, gazetted officer அரசியல் பேசக்கூடாது.. நீ பேசலாமா


Rajasekar Jayaraman
டிச 22, 2024 20:39

கவர்னர் சொன்னாதான் செய்வாரா அதுக்கு கவர்னரே பாத்துக்குவார் இவர் ஆட்சி எதற்கு? சாராய ஊழல் செய்யவா...


G Mahalingam
டிச 22, 2024 20:26

அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்.சொன்னால்தான் சரி செய்வோம் என்றால் எதற்கு ஆட்சி.திமுகவின் பொய் பித்தலாட்டம் ஆம் ஆத்மி கட்சிக்கும் ஊறி விட்டது.


என்றும் இந்தியன்
டிச 22, 2024 19:22

ரொம்ப ரொம்ப நல்லவனாக ஒருவன் இருந்தால் உண்மையில் அவன் யார் என்று கண்டு பிடியுங்கள்- ........இவர்களை பாருங்கள் இவர்கள் சொல்லும் வார்த்தைகளை அலசி அதன் உண்மை எப்போதும் உணருங்கள்


nv
டிச 22, 2024 18:40

ஒரு வெட்கம் கெட்ட அரசு ஆம் ஆத்மி கட்சியின் அரசு.. வெறும் நாடகம் நடத்தும் அரசு.. இனியாவது டெல்லி மக்கள் விழித்துக் கொண்டு இவர்களை களைய வேண்டும் அடுத்த தேர்தலில்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை