ரூ. 40 லட்சம் மதிப்பு ஆடம்பர கடிகாரங்கள் திருட்டு
ரங்புரி: தென்மேற்கு டில்லியில் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள ராடோ, டிஸ்ஸாட் உள்ளிட்ட 96 ஆடம்பர கடிகாரங்களைத் திருடிய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.பரிதாபாத் பகுதியில் கைக்கடிகார வியாபாரி சுதான் ஷு குமார். இவர், 20ம் தேதி இரவு 11:00 மணி அளிவில் ரங்புரிக்கு ஒரு ஷோரூமுக்கு 96 விலை உயர்ந்த கைக்கடிகாரங்களை அனுப்பிவைத்தார்.கைக்கடிகாரங்களை டெலிவரி செய்யும் பொறுப்பை, வேன் ஓட்டுநரான காஜியாபாத்தின் முராத்நகரைச் சேர்ந்த பிரதீப், 46, என்பவரிடம் சுதான் ஷு அளித்திருந்தார்.குறிப்பிட்ட நேரத்தை கடந்தும், கைக்கடிகாரங்கள் டெலிவரி செய்யப்படவில்லை. பிரதீப்பை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.இதையடுத்து போலீசில் 21ம் தேதி சுதான் ஷு குமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் கைக்கடிகாரங்களை பிரதீப் திருடியது உறுதி செய்யப்பட்டது.முராத்நகரில் உள்ள ஒரு ஷோரூமில் 24ம் தேதி போலீசார் சோதனை நடத்தி, 96 ஆடம்பர கைக்கடிகாரங்களை மீட்டனர். அங்கிருந்த பிரதீப்பையும் கைது செய்தனர்.