உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய பிரதேசத்தில் சோகம்! நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி மோதி 7 பேர் பரிதாப பலி

மத்திய பிரதேசத்தில் சோகம்! நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி மோதி 7 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: மத்தியப் பிரதேசத்தில் இரண்டு நான்கு சக்கர வாகனங்கள் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மத்திய பிரதேசம் மாநிலம், தார் மாவட்டத்தில் பத்னாவர்- உஜ்ஜைன் நெடுஞ்சாலையில் எதிர் திசையில் வந்த ஒரு கார் மற்றும் ஜீப் மீது டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக ரத்லம் மாவட்டத்தில் உள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. தப்பியோடிய டேங்கர் லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

अप्पावी
மார் 13, 2025 15:12

கதி சக்தி தூள் பறக்குது. ம.பி அதுல டாப். கொத்து கொத்தா தூக்குறாங்கோ.


Jayaraman
மார் 13, 2025 14:58

நெடுஞ்சாலைகளில் , நடுவில், 2 அடி அகலத்திற்கு , வெள்ளை கோடுகளை விட்டு விட்டு போட வேண்டும். எதிரே வாகனங்கள் வரும் போது இந்த வெள்ளைக்கோட்டை தாண்டி வலது பக்கம் வாகனங்கள் போக கூடாது.


ديفيد رافائيل
மார் 13, 2025 20:36

இதையெல்லாம் யாரு இபப follow பண்றா. Speed driving பண்ணி இந்த மாதிரி சாகுறானுங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை