உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இடமாற்றம்; கொலீஜியம் பரிந்துரை

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இடமாற்றம்; கொலீஜியம் பரிந்துரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் 4 பேரை இடமாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது. இடமாற்றம் செய்யப்பட்ட தலைமை நீதிபதிகள் விபரம் பின்வருமாறு:* ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள மணீந்திர மோகனை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.* திரிபுரா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள அப்ரேஷ் குமார் சிங்கை தெலுங்கானா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.* ஜார்க்கண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள ராசந்திர ராவை திரிபுரா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.* சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீராமை, ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது.* ஐகோர்ட் நீதிபதிகள் 21 பேரை இடமாறுதல் செய்ய கொலீஜியம் பரிந்துரைத்த தகவல் நேற்று வெளியானது. இன்று தலைமை நீதிபதிகள் நால்வரை இடமாறுதல் செய்ய பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Raghavan
மே 28, 2025 22:09

கொலிஜியம் முறை ஒழிந்தால்தான் நீதிமன்றங்கள் ஓரளவாவது செயல்படும்.


Tetra
மே 28, 2025 19:31

அவர் இப்போது தானே வநாதார். ஓ கழக கண்மணிகளுக்கு உறுத்தலாய் இருந்திருப்பார். ந்யாயம்தானே. இதுதாண்டா த்ராவிட மாடல்


sankaranarayanan
மே 28, 2025 18:27

கொலிஜியம் முறைப்படி நீதிபதிகள் இட மாற்றம் செய்வததுதான் முக்கிய தொழிலாக கண்ணோட்டமாக உள்ளது நீதி வழங்குவதில் மிக மிக தாமத ஏற்படுகிறது அட்மினிஸ்டரேஷன் தொழிலை முன்னிலைப்படுத்தி அரசாங்கத்தினிடமிருந்து அபகரித்து, நீதி வழங்குவதில் பின்னடைவு ஒன்றுதான் எங்குமே தென்படுகிறது வழக்குகளை முடிப்பதில் கண்ணோட்டமே இல்லை


spr
மே 28, 2025 17:40

ஒரு நிரபராதியான ஞானசேகரனைத் தண்டித்த காரணமோ?


hariharan
மே 28, 2025 13:48

இடமாற்றம் செய்வதற்கான காரணங்களை இவர்கள் சொல்ல மாட்டார்கள். இவர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது. குடியரசுத் தலைவருக்கே இவ்வளவு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு போடுவார்கள், ஆனால் இவர்கள் எல்லா வழக்குகளையும் ஐஸ் பெட்டியில் வைத்துவிடுவார்கள். எவருக்குமே இல்லாத கோடை விடுமுறை, பார்கவுன்சிலில் வேண்டிய வக்கீல்களின் கவனிப்பு என உலகத்திலில்லாத சலுகைகள் எல்லாம் அனுபவிப்பர். ஆனால் இவர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஒருவேளை இப்பொழுது மாற்றலாகிப் போகும் நீதிபதிகள் தங்கள் மனக்குமுறலை பதவி ஓய்வு பெற்றபின் புத்தகம் மூலமாக தெரிவிப்பர்.


Nada Rajan
மே 28, 2025 13:16

இடமாற்றம் செய்யப்பட்டதற்கு காரணம் என்ன


Tc Raman
மே 28, 2025 13:00

நீதிக்காக பாடுபட்டு பணம் சேர்த்த யஸ்வந்த் வர்மாவுக்கு பதவி உயர்வு தரவில்லையே . பரவாயில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை