உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா கும்பமேளா நெரிசல் பலி: பார்லி.,யில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

மஹா கும்பமேளா நெரிசல் பலி: பார்லி.,யில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

புதுடில்லி : உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடக்கும் மஹா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில், 30 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என, அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. முதல் நாளான இன்று, கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதிதிரவுபதி முர்மு உரையாற்றுகிறார். வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்ய உள்ளார்.இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளது. முதற்கட்டம், பிப்., 13ல் முடிகிறது. மார்ச் 10ல் துவங்கும் இரண்டாம் கட்ட கூட்டத்தொடர், ஏப்., 4 வரை நடக்க உள்ளது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக, அனைத்துக் கட்சி கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் உட்பட பல கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடக்கும் மஹா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி, 30 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என்று காங்., தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதுபோல், பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் பட்டியலிட்டன.பட்ஜெட் கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட உள்ளவை தொடர்பாக அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும். அதில் பிரயாக்ராஜ் சம்பவமும் இடம்பெற்றுள்ளது என, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

வக்பு மசோதா அறிக்கை தாக்கல்

வக்பு சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பான, வக்பு மசோதா பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.பா.ஜ.,வைச் சேர்ந்த ஜகதாம்பிகா பால் தலைமையிலான இந்தக் குழு, வக்பு மசோதா தொடர்பான தன் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்தக் குழு, 15:11 என்ற பெரும்பான்மை விகிதத்தில் இந்த அறிக்கையை தயார் செய்துள்ளது.கூட்டுக் குழுவின் அறிக்கை, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நடப்பு கூட்டத் தொடரில் அது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின், தி.மு.க., - எம்.பி., பாலு கூறியதாவது:மாநில அரசுகள் மற்றும் அதனைச் சார்ந்த பல்கலைகளுக்கு உள்ள அதிகாரங்களை குறைத்திடும் வகையில் அமைந்த சட்ட வரைவு கொள்கை அறிக்கையை, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அனுப்பியுள்து. வரம்பு மீறிய வகையில் அமைந்த இந்த நடவடிக்கையை பல மாநிலங்கள் எதிர்த்துள்ளன. தமிழக முதல்வர், இதற்காக டில்லியில் போராட்டம் நடத்தும்படி அறிவுறுத்தி உள்ளார். இதை ஏற்று, வரும் 6ம் தேதி டில்லியில் போராட்டம் நடத்தப்படும். இதில் பிற கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பர். இவ்வாறு அவர் கூறினார்.த.மா.கா., தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வாசன் கூறுகையில், ''டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் நடவடிக்கையை கைவிட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் சமீப காலமாக மேலும் அதிகரித்துள்ளன. இவை கவலை அளிக்கின்றன. வெளியுறவு அமைச்சகம் அளவில் இதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு, தீர்வு காண வேண்டும்,'' என்றார். அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை கூறுகையில், ''தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை எழுந்துள்ளது. சட்டம் - ஒழுங்கும் வெகுவாக சீர்குலைந்துள்ளதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து பார்லிமென்ட்டில் விவாதிக்கப்பட வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

பேசும் தமிழன்
ஜன 31, 2025 19:07

கும்பமேளாவுக்கும் எதிர்கட்சி களுக்கும்..... அதாவது இண்டி கூட்டணிக்கும் என்ன சம்பந்தம்.... அவர்களுக்கு தான் இந்து பண்டிகை என்றாலே ஆகாதே !!!


Mohan
ஜன 31, 2025 09:47

ஓ ரைட் என்னடா பாராளுமன்ற கூட போகுதே ஒன்னத்தையும் காணாமேன்னு நெனெச்சேன் ..அப்போ இவுனுக பண்ணின சதிதான்னு நிரூபணம் ஆகிருச்சு ....இனிமேல் பாராளுமன்ற கூடப்போகுதுன்னா மக்களே உஷாரா இருங்க எதாவது பிரச்சனை எழுப்பிவிடுவாங்க அப்பாவிகள் நாம் பலிகடா ஆயிடக்கூடாது ... கோடிகணக்கான பேர் இதுநாள் வரை எந்த சிரமும் இல்லாம கும்பமேளாவிலே மிக பயங்கர பந்தோபஸ்து, உடன் நடந்துச்சு ...ஆனா பிரச்சனை வேண்டுமென்றே பலபேர் உயிரை பழிவாங்கிரூக்கானுக மக்கள் புரிஞ்சிக்கணும் இந்த தடவ அம்பானி, அதானி, சீனா ஆக்கிரமிப்பு, அப்டினு உருட்ட ஒன்னும் இல்ல ...


Kasimani Baskaran
ஜன 31, 2025 07:55

காஸ் டாங்க் வெடிப்பு, அண்ணா பல்கலை விவகாரம், சார் செய்த கார் லீலைகள் போன்றவற்றையும் விவாதிக்கலாமே. கட்டுக்கடங்காத கூட்டத்தை சிறப்பாகவே ஆதித்யநாத் குழு கையாண்டது. அமாவாசை அன்று கூட்டம் அளவுக்கதிகமாக இருந்தது. விபத்து துரதிஷ்டவசமானது. இனி வரும் நாட்களில் கவனமாக இருப்பது நல்லது.


அப்பாவி
ஜன 31, 2025 07:09

கும்பமேளாவே ஒரு சர்க்கஸ்.


Keshavan.J
ஜன 31, 2025 10:17

Yes every another circus happens in middle east


guna
ஜன 31, 2025 11:26

அங்கிருந்து தப்பிச் வந்த ....


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜன 31, 2025 11:28

மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும் என்று தென்னாட்டு காந்தி என்று ஸ்டிக்கர் ஒட்டி கொண்டவர் சொன்னதை பகுத்தறிவு என்று சொல்லி நம்பிக்கொண்டு திருப்பரங்குன்றம் முதலாம் அறுபடை வீட்டை திருட நினைப்பவர்களுக்கு எல்லாம் கும்பமேளா சர்க்கஸ் ஆகத் தான் தெரியும். திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கட்டப்பட்ட காலத்தில் இஸ்லாம் என்ற ஒரு மதமே கிடையாது.


Nandakumar Naidu.
ஜன 31, 2025 02:51

தமிழகத்தில் கள்ள சாராயம் குடித்து 64 பேர் இறந்த போது ஏன் நவத்துவரங்களையும் மூடிகொண்டிருந்தீர்கள் எதிர்கட்சிகளா? பிஜேபி ஆளும் மாநிலம் என்றால் உங்களுடைய நவத்துவாரங்களும் திறந்துகொண்டு ஊளையிடுகின்றன, ஏன்? நீங்கள் எல்லாம் இந்தியாவின் சாபக்கேடு.


Raj S
ஜன 31, 2025 01:48

இவனுங்களுக்கு ஓட்டு போட்ட முட்டாப்பசங்களை சொல்லணும்... பார்லியில் விசாரிக்க வேண்டிய விஷயமா இது?? கூட நெரிசல்ல இறந்துட்டாங்க, இதுல அங்க விவாதிக்க என்ன இருக்கு?? வெட்டி பசங்களுக்கு ஏதாவது ஒரு விஷயத்தை வெச்சு கூச்சல் போட்டு மக்களின் வரி பணத்தை நாசம் பண்ணனும்...


Keshavan.J
ஜன 31, 2025 10:19

If there will be loss of pay for not attending parliament or creating Ruckus in parliament, this cannot be controlled. The rule should be applicable for Assembly and corporation council too


தாமரை மலர்கிறது
ஜன 30, 2025 23:46

கள்ளச்சாராயம் குடிச்சு தமிழகத்தில் ஐம்பது பேர் செத்தார்கள். அதை பற்றி முதலில் பார்லியில் விவாதிக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை