உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா., தேர்தல் முடிவால் புது நம்பிக்கை: பிரதமர் மோடி உற்சாகம்

மஹா., தேர்தல் முடிவால் புது நம்பிக்கை: பிரதமர் மோடி உற்சாகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: '' மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில தேர்தல் முடிவுகள் நாட்டிற்கு புதிய நம்பிக்கையை தருகிறது, '' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.ஒடிசாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பா.ஜ., குறித்து எதிர்க்கட்சிகள் இரவும் பகலும் பொய்யை பரப்புகின்றன. இது அவர்களின் வழக்கம். ஆனால், மக்கள் பா.ஜ.,வுக்கு ஆசி வழங்குகின்றனர். சில மாதங்களுக்கு முன் இங்கு தேர்தல் நடந்த போது, இம்மாநிலத்தில் பெரிய அரசியல் நிபுணர்கள் பா.ஜ.,வை நிராகரித்தனர். ஆனால், தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. மக்களின் எழுச்சியை என்னால் பார்க்க முடிகிறது. மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா தேர்தல் முடிவுகள் தேசத்திற்கு புதிய நம்பிக்கையை தருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=a0zftkpx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதிகாரம் தங்களது பிறப்புரிமை எனக்கருதியவர்கள், கடந்த சில ஆண்டுகளாக மத்திய ஆட்சி அதிகாரத்தை இழந்துள்ளனர். தங்களுக்கு ஆசி வழங்காமல் மற்றவர்களுக்கு வழங்கியதற்காக மக்கள் மீது அதிக கோபத்தில் உள்ளனர். அவர்கள் நாட்டிற்கு எதிராக சதி செய்கின்றனர். நாட்டை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் நோக்கத்தில் மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். 75 ஆண்டுகளாக பொய் மற்றும் வதந்திக்கான கடையை அவர்கள் திறந்து வைத்தனர். தற்போது, அவர்கள் இதனை இயக்கமாக மாற்றி வேகப்படுத்தி உள்ளனர். அவர்களின் செயல்பாடு, நாட்டை நேசிக்கும் மக்களுக்கு பெரிய சவாலாக மாறி உள்ளது. இதனால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு பொய்யையும் அவிழ்க்க வேண்டி உள்ளது. இந்த அதிகார பசியில் உள்ளவர்கள் மக்களிடம் தொடர்ந்து பொய் சொல்லி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் பெரிய பொய்யை கொண்டு வருகின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

saravanan
நவ 29, 2024 22:07

ஹரியானா மற்றும் மகாராஷ்டிர மாநில தேர்தல் முடிவுகள் நிச்சயமாக பொய்மைக்கும், புரட்டுக்கும் ஒரு முடிவு கட்டியிருக்கிறது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசில் குறை காண முடியாத எதிர்கட்சிகள் பாராளுமன்ற தேர்தலில் பரப்பிய பொய்யுரைகள் கொஞ்ச நஞ்சமா. அனைத்து தரப்பு மக்களையும் அணைத்து செல்லக் கூடியவர் மோடி என்பதை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இவர்களின் புரட்டு எத்தனை நாளைக்கு கை கொடுக்கும் அதைத்தான் தற்போதைய தேர்தல் முடிவுகள் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றன.


Narayanan Muthu
நவ 29, 2024 20:59

இனி தைரியமாக எல்லா தேர்தல்களிலும் தில்லு முல்லு செய்து ஜெயித்து விடலாம் என்கிற புது நம்பிக்கையோ.


Thiagu
நவ 29, 2024 21:09

எப்படி விடியல் ஜெயிச்ச மாதிரியா பாவாடை சார்


hari
நவ 29, 2024 21:22

ஆமாம் ...இங்கே திராவிட கலெக்சன் ஸ்டார்ட் ஆயிடுச்சி


Ramesh Sargam
நவ 29, 2024 20:46

இதே புது நம்பிக்கை தமிழகம் மற்றும் பல பாஜக ஆட்சிபுரியாத மாநிலங்களிலும் அடுத்த தேர்தல் முடிவில் வரவேண்டும். வரும். நம்புவோம்.


Biden
நவ 29, 2024 20:31

இருக்காதா பின்னே


ghee
நவ 29, 2024 20:48

all true indians behind you.jai hind


புதிய வீடியோ