வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஒருவேளை அவர்கள் ஆட்சி அமைத்தால், அவர்கள் செய்யப்போகும் ஊழலில் வொவொருவருக்கும் எவ்வளவு கட் ... அதாவது எவ்வளவு பங்கு. ஆனால் அதையெல்லாம் இப்படி அறிக்கையாக வெளியிடுவார்களா?
காங்கிரஸ் இன்னுமா பப்புவை நம்புது?
பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலுக்கான, 'மஹாகட்பந்தன்' கூட்டணியின் தேர்தல் அறிக்கையை அக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவ் நேற்று வெளியிட்டார்.முக்கிய அம்சங்கள்
* ஆட்சிக்கு வந்த 20 நாட்களுக்குள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை* அரசு துறைகளில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் நிரந்தரமாக்கப்படுவர்* அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் * வக்ப் திருத்த சட்டம் ரத்து செய்யப்படும் * 'கள்ளு' கடைகள் திறக்கப்படும் * மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் * சிறு, குறு விவசாயிகளின் கடன் தள்ளுபடி; பாசனத்திற்கு இலவச மின்சாரம் * பட்டப்படிப்பு வரை இலவச கல்வி; அனைத்து கல்லுாரி மாணவர்களுக்கும் இலவச லேப் - டாப் * குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ காப்பீடு * அரசு வேலைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு; சுயஉதவி குழுக்களுக்கு வட்டி இல்லா கடன்
பாட்னாவில் நேற்று நடந்த தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில், தேஜஸ்வி யாதவ், காங்., மூத்த தலைவர் பவன் கெரா உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பங்கேற்கவில்லை. கடைசியாக, செப்., 1ல் பீஹாருக்கு வந்த அவர், 56 நாட்களாக அந்த மாநிலம் பக்கமே எட்டி பார்க்கவில்லை. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நட்டா என பா.ஜ., நட்சத்திர பட்டாளமே பீஹார் தேர்தல் களத்தில் குதித்துள்ள நிலையில், ராகுல் 'ஆப்சென்ட்' ஆகியுள்ளது காங்., தொண்டர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. இதற்கிடையே அடுத்த சில தினங்களில், பீஹாரில் தேர்தல் பிரசாரத்தை ராகுல் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒருவேளை அவர்கள் ஆட்சி அமைத்தால், அவர்கள் செய்யப்போகும் ஊழலில் வொவொருவருக்கும் எவ்வளவு கட் ... அதாவது எவ்வளவு பங்கு. ஆனால் அதையெல்லாம் இப்படி அறிக்கையாக வெளியிடுவார்களா?
காங்கிரஸ் இன்னுமா பப்புவை நம்புது?