உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / களைகட்டியது மஹா கும்பமேளா; திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய ஒன்றரை கோடி பக்தர்கள்!

களைகட்டியது மஹா கும்பமேளா; திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய ஒன்றரை கோடி பக்தர்கள்!

லக்னோ: பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில் இன்று மகா கும்ப மேளா தொடங்கியது. அதிகாலை முதல் மாலை வரை ஒன்றரை கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். பிரயாக்ராஜ் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில், மஹா கும்பமேளா இன்று முதல் பிப்.,26 (மஹாசிவராத்திரி) வரை நடக்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடத்தப்படுகிறது. அதிலும் சிறப்பாக, 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் கிரகங்கள் நேர்கோட்டில் சேரும்போது மகா கும்பமேளா நடக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த மகா கும்பமேளா இன்று தொடங்கியுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=289rt38g&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மிகப்பெரிய ஆன்மிக கலாசார விழாவான இந்த மஹா கும்பமேளா தொடர்ந்து, 45 நாட்கள் நடைபெற இருக்கிறது. உலகம் முழுவதும் இருந்து பல கோடி பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவுக்கான சிறப்பு ஏற்பாடுகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு தீவிரமாக செய்துள்ளது. கும்பமேளா நடைபெறும் காலங்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை ஹிந்துக்கள் புனிதமாக கருதுகிறார்கள். பல்வேறு ஆன்மீக, கலாசார மற்றும் சுற்றுலா அம்சங்களுடன் ஒரு பெரிய கொண்டாட்டமாக இவ்விழா திகழ்கிறது. தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். திரிவேணி சங்கமத்தில், அதிகாலை முதல் மாலை வரை ஒன்றரை கோடி பக்தர்கள் புனித நீராடி மகிழ்ந்தனர். இதனால் விழாக்கோலம் பூண்டுள்ளது.2025ம் ஆண்டு மஹா கும்பமேளாவிற்கான பிரயாக்ராஜில் ஏற்பாடுகள் பற்றி ஒரு பிரெஞ்சு பத்திரிகையாளர் மிலானி கூறியதாவது: இந்த கும்பமேளா ஆன்மிக நிகழ்ச்சி பற்றி அதிகம் கேள்விப்பட்டேன். நான் இப்போதுதான் முதல்முறையாக வந்துள்ளேன். நிகழ்ச்சி ஏற்பாடுகள் மிகவும் நன்றாக இருக்கிறது. சாதுக்கள் மற்றும் ஆன்மீக குருக்களை சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். பிரெஞ்சு பத்திரிகையாளர் இந்த கும்பமேளாவில் பங்கேற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், மகா கும்பமேளாவின் முதல் நாளான இன்று ஒன்றரை கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த போலீசாருக்கு பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Dharmavaan
ஜன 14, 2025 07:44

இது நுண்ணறிவு சம்பந்தப்பட்ட விஷயம் நான்கு கோயில்களை சங்கமிக்கும் நேரத்தில் எண்ண அலைகள் பூமியில் ஏற்படும் என்று அறிந்து செய்யப்பட்ட விஷயம்..நாத்திக வேடம் போடும் நுனிப்புல் மேய்பனுக்கு புரியாது


Dharmavaan
ஜன 14, 2025 13:44

4 கோள்கள் நேர்கோட்டில் வரும் காலம் பூமியில் ஏற்படும் சக்தி/ஈர்ப்பு அலைகளின் பலனை கங்கை என்னும் புனித நீர் மூலம் பெரும் விழா கேவலம் அமாவாசை, பௌர்ணமி நாட்களின் கடல் அலையின் மாறுதல் சிறிய உதாரணம்


Kasimani Baskaran
ஜன 14, 2025 06:46

பெரும்பான்மை இந்துக்களுக்கு எதிராக ஒரு கருத்தியல் உருவாக்கும் சிறுபான்மை திராவிடர்கள் மற்றும் அவர்களின் கொத்தடிமைகள் திருந்த வாய்ப்பில்லை. பொங்கல் வைத்தால்தான் இதெல்லாம் சரியாகும்.


Mediagoons
ஜன 13, 2025 22:26

ஒட்டுமொத்த அரசு எந்திரங்களும் ஒரு பைசே கூட பிரயோஜனமில்லாத மூடநம்பிக்கையில் முடங்கிக்கிடக்கின்றன . விளம்பரத்திற்காக


N Sasikumar Yadhav
ஜன 14, 2025 06:40

உனக்கு எதற்கு எரிகிறது போய் உங்க எஜமான் கோபாலபுர கொத்தடிமையான நீங்க திமுக ஆதரவாளரான பாலியல் குற்றவாளிக்கு முட்டு எப்போதும்போல முட்டு கொடுங்க


sridhar
ஜன 14, 2025 07:17

தயிர்வடை, முரசொலி எல்லாம் தினமும் வைக்கிறாங்களாம்,


Dharmavaan
ஜன 14, 2025 07:38

அமுக்கு டுமுக்கு அமாள் டுமால் என்ன இது ஏதாவது அர்த்தம் இருக்கா ... கட்டுமரம் சமாதியில்.. மூடங்களுக்கு தயிர்வடை முரசொலி வைப்பது பகுத்தறிவா


vivek
ஜன 13, 2025 15:33

திராவிடம்.பற்றி கழுவி உதினார்.....அங்கு வைகுண்டு எஸ்கேப்....


Mediagoons
ஜன 13, 2025 14:15

இந்து மதவாத அரசின் விளம்பர வியாபார ஸ்டண்டு


Kumar Kumzi
ஜன 13, 2025 15:19

சோத்துக்கு வக்கில்லாம மதம் மரியா கொத்தடிமையே இன்னும் சவுண்டு கதறு


sridhar
ஜன 13, 2025 17:41

ஏன், நீ இ வே ரா விழா எடுத்து பாரேன் , எத்தனை பேர் வரான் என்று.


Duruvesan
ஜன 14, 2025 11:26

மூரக்ஸ் நல்லா எரியூட்டும்


Svs Yaadum oore
ஜன 13, 2025 13:22

நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியேசுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடாசுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்.. - இப்படி சொன்னது சிவவாக்கியர் ....இதற்கு விளக்கம் ... தோற்றுவித்த சிற்பத்தை சுற்றி வலம் வருகிறாயே அந்த சிற்பத்திற்கு மலர்களை அணிவித்து வாயினால் முணுமுணுத்து வேதமந்திரங்கள் சொல்கிறாயே? ஏன் இப்படி? சமைத்த சட்டியில் இருக்கும் உணவின் சுவையினை சட்டியும் கரண்டியும் அறியுமோ? அதனைப்போல் தோற்றுவித்த சிற்பம் பேசுமோ? இறைவன் உனக்குள் இருக்கையில்....இறைவன் உன்னுள் இருக்கிறான் என்று சொன்னது எங்கள் சிவ வாக்கியர் ....படிக்காத விடியல் திராவிடனுங்களுக்கு இது புரியாது ...


Dharmavaan
ஜன 14, 2025 07:40

மடத்தனமான ஒப்பீடு


Svs Yaadum oore
ஜன 13, 2025 13:06

ஹிந்துக்களின் நம்பிக்கை விஷயம்தான் ....ஆனால் விடியல் திராவிடனுங்க அந்த நம்பிக்கையை மதிக்கிறார்களா?? கட்சிக்கு தலைவர் பொங்கல் பானையை வைத்து காலில் செருப்புடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்......அந்த அளவுக்குத்தான் மரியாதை ...ஹிந்து என்றால் திருடன் என்று சொன்னது யாரு ??....


திகழ்ஓவியன்
ஜன 13, 2025 12:57

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உல் இருக்கையில் என்று சித்தர் பாடியது நினைவுக்கு வருது, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை விட கடவுளை வெச்சி பிழைக்கும் கூட்டம் தான் நாட்டில் பரவி இருக்கு


Svs Yaadum oore
ஜன 13, 2025 13:15

உண்மைதான் ...கடவுள் இல்லை இல்லை என்று சொல்லி 70 வருடமாக அந்த கடவுளை வைத்து பிழைக்கும் தற்குறி திராவிட கூட்டம் தமிழ் நாட்டில் உண்டு தான் ....


Kumar Kumzi
ஜன 13, 2025 15:23

சோத்துக்கு மதம் மாறிய கொத்தடிமை கூமுட்ட பைபிளை காட்டி மத விளம்பரம் செய்பவன் யாரு


theruvasagan
ஜன 13, 2025 22:13

கடவுளை வச்சி பிழைக்கிறவனையும் சரி கடவுள் இல்லை என்று சொல்லுபவனையும் சரி வாழ வைப்பது அந்த கடவுள்தான்.


Svs Yaadum oore
ஜன 13, 2025 11:46

திரிவேணி சங்கமத்தில், ஒரே நாளில் 60 லட்சம் பக்தர்கள் .... மொத்தம் 40 கோடி மக்கள் கூடும் மகா கும்பமேளா..முதல்வர் யோகி ...விடியல் திராவிட மதம் மாற்றிகள் மொத்த கூட்டமும் ஒரே பொசுங்கும் வாசனை ...


Bahurudeen Ali Ahamed
ஜன 13, 2025 12:21

சகோ இது ஹிந்துக்களின் நம்பிக்கை விஷயம், அவர்கள் புனிதமாக கருதும் விஷயத்திற்காக கூடுகிறார்கள் இதைப்பார்த்து மற்றவர்கள் ஏன் பொறாமைப்படப் போகிறார்கள், அவரவர் நம்பிக்கை அவரவருக்கு


V வைகுண்டேஸ்வரன்
ஜன 13, 2025 13:33

மடத் தனமாக இருக்கிறது. 60 லட்சம் பேர் ஆற்றில் குளித்தார்கள். சரி, இவர்கள் எல்லோரும் ஆரியர்களா? ஒரு பிரெஞ்சுகாரர் இருந்தாராமே, அவர் என்ன மதம் னு கேட்கவில்லை யா?


Dharmavaan
ஜன 14, 2025 07:45

அதுதான் ஹிந்து மதத்தின் பெருந்தன்மை


Kasimani Baskaran
ஜன 14, 2025 12:26

இந்துவல்லாத மதங்கள் மற்றும் அதை பின்பற்றுவோரின் நம்பிக்கை மீது நாலு கருத்து சொல்ல முடியுமா?