உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தனியார் துறையில் இனி 10 மணி நேரம் வேலை: மஹாராஷ்டிரா அரசு யோசனை

தனியார் துறையில் இனி 10 மணி நேரம் வேலை: மஹாராஷ்டிரா அரசு யோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை; மஹாராஷ்டிராவில் தனியார் துறையில் ஊழியர்களின் பணி நேரத்தை அதிகபட்சமாக 10 மணி நேரமாக உயர்த்த அம்மாநில அரசு ஆலோசித்து வருகிறது. மஹாராஷ்டிராவில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்துக்கு முன்னதாக அம்மாநில தொழிலாளர் துறையின் சார்பில் ஒரு பரிந்துரை அளிக்கப்பட்டு உள்ளது. அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது;தனியார் துறையில் பணிபுரியும் எந்த வயதுடையோரும் அதிகபட்சமாக 10 மணி நேரத்துக்கு மேல் பணியாற்ற வேண்டியது இல்லை. இந்த பணி நேரம் அனைத்து பணி நாட்களுக்கும் பொருந்தும். அவசர அல்லது முக்கியமான வேலை என்னும் பட்சத்தில் இதை 12 மணி நேரமாக உயர்த்தலாம்.பணியாளர் ஒருவர் தொடர்ந்து 6 மணி நேரம் உழைத்தால் அவருக்கு 30 நிமிடங்கள் இடைவேளை அளிக்கலாம். தற்போது இந்த பணிநேரம் என்பது 5 மணிநேரமாகவே உள்ளது.3 மாதங்களுக்கு இருக்கும் 125 மணிநேரம் என்ற கூடுதல் பணிநேரத்தை, 144 ஆக உயர்த்தலாம். இவ்வாறு அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டால், மாநிலத்தில் 20 மற்றும் அதற்கு மேலான ஊழியர்களுடன் இயங்கும் நிறுவனங்களுக்கு பொருந்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

ManiMurugan Murugan
ஆக 28, 2025 00:00

ManiMurugan Murugan தவறு 10 மணி நேரம் பணி என்பது தவறு அதுவும் இரவு வேலை பார்ப்பவர்கள் சி ராப் படி சார் கள் அதற்கு வாரத்தில் ‌ஆறு நாட்கள் வேலை ஆறாம் நாள் வீட்டிலிருந்து வேலை என்று உருவாக்கலாம் ஒரு நாளில் 8 மணி நேர வேலைப் போதும் பணியாளர்களுக்கு நல்ல சந்தான ஜீன் கொடுக்கலாம்


Mannan
ஆக 27, 2025 21:48

ஆமா.முதலாளிகளின் பொருளாதாரம் கண்டிப்பா உயரத்தான் செய்யும் ஆனால் வேலை செய்யும் தொழிலாளிக்கு 12 மணி நேரம் வேலை செய்தால் பைத்தியம் தான் பிடிக்கும்.


தஞ்சை மன்னர்
ஆக 27, 2025 21:37

உனக்கு என்னப்ப நீ சொல்லிவிட்டு ஏசி உட்கார்ந்து இருப்ப வேலை கொடுக்கும் முதலை ஓவர் டைம் கொடுப்பாங்களா இல்ல நீதான் அதிகம் பார்க்கும் வேலைக்கு ஊதியம் கொடுப்பாயா


Sundaran
ஆக 27, 2025 21:30

குறைந்த சம்பளம் வாங்கும் தனியார் தொழிற்சாலை ஊழியர் 10 மணி நேரம் வேலை செய்யவேண்டும் அதிக சம்பளம் பென்ஷன் வாங்கும் அரசு உழையர்கள் 7 மணி நேரம் வேலை செய்தால் போதுமா அரசு ஊழியர்களும் 10 மணி நேரம் வேலை செய்யவேண்டும் என்று சட்டம் இயற்ற முடியுமா உங்களால்


தாமரை மலர்கிறது
ஆக 27, 2025 19:12

சூப்பர். ஆனால் இதை பன்னிரண்டு மணி நேரமாக உயர்த்தினால், பொருளாதாரம் மேலும் உயரும். இனி மகாராஷ்டிராவின் பொருளாதாரம் றெக்கைகட்டி பறக்கும்.இந்த ஒரு உருப்படியான செயலை தான் ஸ்டாலின் செய்ய விரும்பினார். அதையும் கூட இருந்த கம்யூனிஸ்ட்கள் மற்றும் திமுகவின் கூட்டணி கட்சிகள் தடுத்துவிட்டன .


அப்பாவி
ஆக 27, 2025 16:06

எட்டு மணி நேர வேலையை ஆறு மணி நேரம் குறைச்சு, இன்னும் நாலு பேருக்கு வேலை குடுக்கணும். புது மணி நேரம்னா செத்தாண்டா சேகரு தான்.


Rajarajan
ஆக 27, 2025 14:10

தனியாரில் எவ்வளவு நேரம், எப்படி வேலை செய்யவேண்டும் என்று அந்த முதலாளிக்கும் தெரியும், தொழிலாளிக்கு தெரியும். அரசு யார் இதை சொல்ல? மேலும் முக்கிய துறைகளில் உள்ளவர்கள், விடுமுறை / இரவு பகல் பாராமல், உழைப்பது அனைவர்க்கும் தெரியும். இது அரசு ஊழியருக்கு பொருந்தாதா?? விலைவாசி மட்டும் அனைவர்க்கும் பொதுவாக இருக்க, அரசு ஊழியருக்கு மட்டும் ஏன் எல்லாவற்றிலும் விதிவிலக்கு ?? ஒட்டுமொத்த அரசு ஊழியரின் எண்ணிக்கை சுமார் ஐந்து சதவிகிதம் மேல் தாண்டாது. மீதி உள்ளவர் தனியார் ஊழியர்களே. தனியார் ஊழியர் / வியாபாரிகள் செலுத்தும் வரிகளில் தான் அரசே இயங்குகிறது. ஆனால், தேனை எடுப்பவன் ஒருவன், அதை ருசிப்பவன் ஒருவன் என, தனியாரின் வரி வருவாயை, மிக மிக அதிகபட்சமாக சம்பளம் மற்றும் சலுகையாக அனுபவிப்பது அரசு ஊழியர் தான். இதில் அவ்வப்போது பஞ்சபடி வேறு. நாட்டில் பஞ்சம் இல்லை என மார்தட்டுவது. பின்னர் பஞ்சபடியை அவ்வப்போது உயர்த்துவது. ஏன், தனியார் ஊழியர்கள் நாட்டில் பிழைப்பதே இல்லையா? அரசு ஊழியர்களுக்கு எதிராக நாட்டில் ஒரு பொதுநல வழக்கு வந்தால் தான், இந்த கொடுமைகள் அடங்கும்.


முதல் தமிழன்
ஆக 27, 2025 14:02

போயா போய் வேலையே பாரு, சும்மா கருத்து எழுதி நேரம் வீணாகுது.


Vasan
ஆக 27, 2025 13:42

It is high time that working hours be revised to 12 hours a day and 4 days a week, so that they are off from work for 3 full days, which will help in better work-life balancing. This model was tried out already in European country.


Svs Yaadum oore
ஆக 27, 2025 12:59

அது என்ன தனியார் துறை மட்டும் 10 மணி நேரம் ??.....அரசு துறையில் வேலை பார்ப்பவன் சம்பளம் வாங்காமல் ஓசியில் வேலை பார்க்கிறார்களா ??....அவர்களுக்கு மட்டும் 10 மணி நேரம் வேலை என்பது பொருந்தாதா ??....


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 27, 2025 14:20

வேலை நேரம் என்பது நாட்டின் முன்னேற்றத்திற்காக உற்பத்தி செய்பவர்களுக்கு மட்டும்தான். டேபிள் டேபிளாக பைல்களை நகர்த்துபவர்களுக்கு அல்ல.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை