உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளை இருபாலர் பள்ளியாக்கும் மஹாராஷ்டிரா

ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளை இருபாலர் பள்ளியாக்கும் மஹாராஷ்டிரா

மும்பை: மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மும்பை உயர் நீதிமன்றம், 'பெண்கள் மட்டும் உள்ள பள்ளிகள் இனி தனியாக இயங்கக்கூடாது' என, சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி, மாநில பள்ளிக்கல்வி அரசாணைகளில் அரசு திருத்தம் செய்துள்ளது. மஹாராஷ்டிராவில், 1.08 லட்சம் பள்ளிகள் உள்ளன. அதில், 1.54 சதவீதம் பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளிகள். 0.74 சதவீதம் ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளிகள். மீதம் 97.72 சதவீத பள்ளிகள் இருபாலருக்கானவை. இந்நிலையில், அனைத்து பள்ளிகளையும் இருபாலர் பள்ளிகளாக்கும் திட்டம் குறித்து மஹாராஷ்டிரா அரசு வெளியிட்ட அறிக்கையில் 'பாலின அடிப்படையில் மாணவர்களைப் பிரிக்கும் கல்வி அமைப்பு இனி நீக்கப்படும். இருபாலர் கல்வியால் மாணவ, மாணவியர் ஒன்றாக கற்கும் வாய்ப்பு கிடைக்கும். இது இரு தரப்பு இடையே மதிப்புணர்வை வளர்க்கும். பாலின வேறுபாடு உருவாகாமல் தடுக்கும்' என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை