நெலமங்களாவில் பராமரிப்பு பணி; 3 ரயில்கள் ரத்து என அறிவிப்பு
பெங்களூரு; 'பெங்களூரு நெலமங்களாவில் நிடவண்டா யார்டில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், மூன்று ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன' என தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: பெங்களூரு நெலமங்களாவில் நிடவண்டா யார்டில் ரயில்வே பாதுகாப்பு பணிகள் நடக்கின்றன. எனவே, சில ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ரயில் எண் 06512: துமகூரு - பானஸ்வாடி மெமு ரயில், எண் 16239: சிக்கமகளூரு - யஷ்வந்த்பூர் தினசரி விரைவு ரயில் எண் 16240: யஷ்வந்த்பூர் - சிக்கமகளூரு தினசரி விரைவு ரயில், வரும் 23ம் தேதி ரத்து செய்யப்பட்டு உள்ளன. எண் 06571: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - துமகூரு மெமு ரயில், தொட்டபெலே வரை மட்டுமே இயக்கப்படும். அதுபோன்று எண் 06576: துமகூரு - கே.எஸ்.ஆர்., பெங்களூரு மெமு ரயில், தொட்டபெலேயில் இருந்து துமகூருக்கு புறப்படும். இந்த சேவை வரும் 23, 24ம் தேதிகளில் மட்டுமே நடைமுறையில் இருக்கும். எண் 06575: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - துமகூரு மெமு ரயில், வரும் 23ம் தேதி தொட்டபெலேயில் இருந்து புறப்படும். எண் 06572: துமகூரு - கே.எஸ்.ஆர்., பெங்களூரு மெமு ரயில், வரும் 23ம் தேதி தொட்டபெலே வரை மட்டுமே இயக்கப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.