உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடியை கேலி செய்த மாலத்தீவு அமைச்சர்கள் நீக்கம்!

மோடியை கேலி செய்த மாலத்தீவு அமைச்சர்கள் நீக்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்த மாலத்தீவு அமைச்சர்களுக்கு எதிராக இந்தியர்கள் கொந்தளித்ததை தொடர்ந்து, அமைச்சர்களை 'சஸ்பெண்ட்' செய்திருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.இந்திய பெருங்கடலில் உள்ள குட்டி நாடு மாலத்தீவு. நம் மேற்கு கடற்கரையில் இருந்து 555 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இயற்கை அழகு மிகுந்த இடம் என்பதால் சர்வதேச சுற்றுலாபயணியர் மொய்க்கின்றனர். அவர்களில் அதிகம் பேர் இந்தியர்கள்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m3nboubn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் நெருக்கமான உறவு இருந்தது. சில மாதங்களுக்கு முன் நடந்த தேர்தலில் சீன ரசிகரான முகமது முய்சு வெற்றி பெற்று அதிபரானார். பதவிக்கு வந்ததுமே இந்தியாவுடன் இருந்த நட்பு இழைகளை துண்டிக்க துவங்கினார். சீனாவுடன் நெருக்கமானார்.இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி சமீபத்தில் லட்சத்தீவு சென்றார். இது கேரளாவுக்கு மேற்கே இந்திய பெருங்கடலில் உள்ள யூனியன் பிரதேசம். கொச்சிக்கும் லட்சத்தீவுக்கும் இடையே ஆழ்கடலில், 'ஆப்டிக்கல் பைபர் கேபிள்' பதிக்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். லட்சத்தீவு வளர்ச்சிக்கான கட்டமைப்பு திட்டங்களையும் துவக்கினார்.ஆழ்கடலில் நீச்சல் அடித்தும், கடற்கரையில் வாக்கிங் சென்றும் லட்சத்தீவின் அழகை ரசித்தார் மோடி.அந்த படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். 'சாகச சுற்றுலா விரும்புவோருக்கான இடம் இது' என்று வர்ணித்தார். இணையத்தில் மோடியை பல கோடி பேர் பின்பற்றுவதால், லட்சத்தீவுக்கு அட்டகாசமான விளம்பரம் கிடைத்தது. ''அடடா, இந்தியாவிலேயே இவ்வளவு அழகான தீவுகள் இருக்கும்போது, மாலத்தீவு போன்ற வெளிநாடுகளுக்கு ஏன் போக வேண்டும்?” என சிலர் கேட்டனர்.அந்த கருத்து தீயாக பரவியது. இதுவரை நட்புடன் இருந்த மாலத்தீவு அரசு இப்போது சீனாவின் கைத்தடியாக மாறி விட்டதால் “மாலத்தீவை தவிர்ப்போம்” என்ற கோஷம் வலு அடைந்தது. இது மாலத்தீவு அரசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித் என்பவர், பிரதமர் மோடியின் பயணத்தை விமர்சித்தும், தனிப்பட்ட முறையில் அவரை விமர்சித்தும் சமூக வலைதளத்தில் பதிவிடடார். பலத்த எதிர்ப்பு எழுந்ததும் பதிவை நீக்கினார்.மால்ஷா ஷரீப் என்ற அமைச்சர், 'சுற்றுலாவில் எங்களுடன் இந்தியா மோத முடியுமா? நாங்கள் அளிக்கும் சேவையை வழங்க முடியுமா? இந்திய ஓட்டல் அறைகளில் வரும் நாற்றத்தை யாரால் சகிக்க முடியும்?' என பதிவு போட்டார். மரியம் ஷியுனா என்ற பெண் அமைச்சரும் நமது பிரதமரை கேலி செய்திருந்தார். மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் இதை பலமாக கண்டித்தார். “நமது நீண்டகால நண்பனான இந்தியாவை இழிவு படுத்தும் விதமாக அமைச்சர்களே பதிவிடுவது வெட்கக்கேடு. அவர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்” என்று கூறினார். அமைச்சர்களின் கேலியும் கிண்டலும் இந்தியாவில் மக்களின் கோபத்தை கிளறியது. பாலிவுட் நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல டிக்கெட்டும் ஓட்டல் ரூம்களும் பதிவு செய்திருந்த இந்தியர்களில் பலரும் பயணத்தை ரத்து செய்தனர். இதனால் மாலத்தீவு அரசு மிரண்டு போனது. வெறும் ஐந்து லட்சம் மக்கள் வசிக்கும் அண்ட நாடு, முற்றிலும் சுற்றுலாவை நம்பி வாழ்கிறது. அமைச்சர்களின் வாய்க்கொழுப்பால் வாழ்வாதாரம் பள்ளத்தில் விழும் என மக்கள் பயந்தனர். என்ன செய்வது என தெரியாமல் முழித்த அரசு, பின்னர் ஓர் அறிக்கை வெளியிட்டது. ”இந்தியா குறித்து சில தனிநபர்கள் வெளியிட்ட பதிவுகளுக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை. இந்த கருத்துக்களை அரசு ஏற்கவில்லை” என்று அறிக்கையில் கூறியது. சற்று நேரத்தில், இந்த பிரச்னையில் சம்பந்தப்பட்ட மூன்று அமைச்சர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என அறிவிப்பு வெளியானது.

மாலத்தீவு அவுட்! லட்சத்தீவு இன்!

மாலத்தீவு அமைச்சர்கள் மூன்று பேருக்கும் லட்சத்தீவு மக்கள் தேங்ஸ் சொல்ல வேண்டும். மாலத்தீவு பயணத்தை ரத்து செய்துள்ளதாக ஏராளமான இந்தியர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதற்கு மாற்றாக லட்சத்தீவு போகலாமா என்ற யோசனையுடன் அங்குள்ள சுற்றுலா வசதிகள் குறித்து இணையதளத்தில் தேட துவங்கியுள்ளனர். 'மாலத்தீவை புறக்கணிப்போம்' என்ற வாசகம் ட்ரெண்டிங் ஆகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

PRSwamy
ஜன 10, 2024 04:26

ஐய்யயோ நம்ம ஜெகத்ரகசகனோட முதலீடே மாலைதீவுலதான் இருக்கு. என்னய்யா பண்ணுறீங்க?


Bye Pass
ஜன 08, 2024 22:51

மெரினா ஆன்மிக சுற்றுலா தலமாக மாறும் ..


ram
ஜன 10, 2024 14:07

அது சுடுகாடாக மாறி ரொம்ப வருஷம் ஆச்சு


ராஜ்
ஜன 08, 2024 22:49

தென் கொரியாவிலும் racism அதிகம் உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். Youtube பார்த்து தெரிந்து கொள்ளவும்.


Kasimani Baskaran
ஜன 08, 2024 22:09

இந்தியாவில் உள்ள முக்கியமான இடங்களை மையமாக வைத்து சுற்றுலாவை மேம்படுத்துவதில் தவறு ஒன்றும் இல்லையே...


Jai
ஜன 08, 2024 20:29

இன்று முஸ்லிம்களுக்கு மிக எதிராக செயல்படும் நாடு சீனா தான். ரம்ஜான் விரதம் இருக்க கூடாது, தொழுகை நடத்த கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கும் சீனாவுடன் உறவு, இந்தியாவுடன் பகையா? சூடோ முஸ்லிம் கட்சியின்ஆட்சி இதுதான்


Barakat Ali
ஜன 08, 2024 21:31

ஹனி டிராப் கூட செய்கிறது சீனா ...... யாருடைய பலவீனம் எங்கே என்று பார்த்து அங்கே தட்டுகிறது ..... நமது பப்பு நேபாளத்தில் அடித்த லூட்டி நினைவிருக்கிறதா ????


M Ramachandran
ஜன 08, 2024 17:23

திமிர் பிடித்த மத வெரியன் குல்லா நரியின் கைதட்டியாகி பிச்சையடி காசைய்ய வந்கிசொந்த நாட்டிற்க்கென துரோகம் விளைவிக்கும் கூட்டத்தில் சேர்ந்து விட்டான் சீனா வின் அடி வருடி ஆகி சொந்த காசில் சூனியம் வைத்தது கொண்ட கில்லாடி


DVRR
ஜன 08, 2024 17:02

முஸ்லிம்களை குறை சொல்லவேண்டாம். அவர்கள் சிறுவயதில் இருந்து மதர்சா பள்ளிக்கூடத்தில் கேட்ட குரானில் சொன்னது என்ன முஸ்லிம்கள் அல்லாதவர்கள் காஃபிர்கள் அவனை கையை வெட்டு கழுத்தை வெட்டு. அப்போ அவர்கள் மனதில் எப்போதும் முஸ்லீம் அல்லாதவர்கள் மீது ஒரு வெறுப்பு நிச்சயம்


ram
ஜன 08, 2024 16:08

இங்கேயும் சிறுபான்மை என்று சொல்லிக்கொண்டு எல்லா விதமான சலுகைகளையும் ஹிந்துக்கள் பணத்தில் அனுபவித்து கொண்டு பாகிஸ்தானுக்கு கொடுக்கும் நபர்கள் அதிகம் அதிலும் தமிழ்நாட்டைல் மிக அதிகம்.


chennai sivakumar
ஜன 08, 2024 15:52

சனி பயங்கரமாக வேலை செய்கிறார்


T.Senthilsigamani
ஜன 08, 2024 15:04

மாலத்தீவு அமைச்சர் படங்கள் சொல்லுகின்ற அவர்கள் ஏன் பிரதமர் மோடியை கிண்டல்கள் செய்கின்றனர் என்று.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ