உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இண்டியா கூட்டணி தலைவராக்க ஆதரவு: அனைவருக்கும் நன்றி சொன்ன மம்தா!

இண்டியா கூட்டணி தலைவராக்க ஆதரவு: அனைவருக்கும் நன்றி சொன்ன மம்தா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: 'என்னை ஆதரித்ததற்காக, இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு நன்றி'என மேற்குவங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார்.''கூட்டணி என்றால் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். வாய்ப்பு வந்தால், இண்டியா கூட்டணியை வழிநடத்த நான் தயார்,'' என, மம்தா தெரிவித்தார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், 'கூட்டணி தலைவராகும் தகுதி மம்தாவுக்கு உண்டு' என்றார். சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் அதை ஆமோதித்தார்.எதிர்க்கட்சிகளின், 'இண்டியா' கூட்டணிக்கு தலைமை ஏற்க, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு பெருகுகிறது. காங்கிரசின் முக்கியத்துவத்தை குறைக்கும் இந்த முயற்சி, கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து, மித்னாப்பூர் மாவட்டத்தில் நிருபர்களுக்கு மம்தா பானர்ஜி அளித்த பேட்டி: என்னை ஆதரித்ததற்காக, இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என்னை கவுரவித்த அனைவருக்கும் நன்றி. இண்டியா கூட்டணி தலைவர்கள் என் மீது காட்டிய மரியாதைக்கு நான் அனைவருக்கும் கடமைப்பட்டு இருக்கிறேன். அவர்கள் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன். அவர்கள் நலமாக இருக்கட்டும். இண்டியா கூட்டணி நன்றாக இருக்கட்டும். நான் இண்டியா கூட்டணியை வழிநடத்துவேன். இப்போது அதை நான் முன்னின்று நடத்துவேன். அவர்களால் கூட்டணியை வழிநடத்த முடியாவிட்டால் நான் என்ன செய்ய முடியும்? என்னால் அனைவரையும் ஒன்றாக அழைத்து செல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

xyzabc
டிச 15, 2024 14:07

இண்டி கூட்டணி பங்களாதேசிகளால் நிரப்ப படும்.


ராமகிருஷ்ணன்
டிச 12, 2024 21:33

காங்கிரஸின் அழிவில் மம்மு வுக்கும் பங்கு உண்டு. நடத்துங்க!!!


Ramesh Sargam
டிச 12, 2024 19:22

தேர்தலுக்கு பிறகு தெரியும் உண்மையான ஆதரவு. ஒருவேளை, கூட்டணி வெற்றி பெற்றால், யார் பிரதமர் என்பதில் ஆரம்பிக்கும் பிரச்சினை. அப்பொழுது தெரியும் உங்கள் ஆதரவு பொவிஷ .


ram
டிச 12, 2024 14:49

மம்தா இந்தியாவை முஸ்லீம் நாடாக மாத்திவிடுவார் கொல்கத்தா மாதிரி


sundarsvpr
டிச 12, 2024 14:48

இதிகாசத்தில் வனவாசங்கள் உண்டு. தந்தை சொல் தட்டாமல் நேர்மையான அயோத்திராமன் வனவாசம் போனான். சூதாட்டத்தில் தோற்றதால் பாண்டவர்கள் வனவாசம் சென்றனர். ஜவகர் இந்திரா ராஜிவ் வம்சத்தில் வனவாசம் அவசியம் இல்லை. அரசியலை விட்டு விலகுவதுதான் வனவாசம்.


SIVA
டிச 12, 2024 12:25

நடக்கின்ற அரசியலை பார்த்தால் இந்த ஒண்றிர்யா கூட்டணி தான் பிஜேபி இன் பி டீம் போன்று தோன்றுகின்றது ....


saravan
டிச 12, 2024 11:41

இப்பவாவது உங்களுக்கு புரிந்ததே ராகுல் ஒரு பப்பு என்று கேரளாவில் ப்ரியங்கா ராகுல் வெற்றிபெறுவது கேரளா மக்களின் சாபக்கேடு அதை விடுங்கள். அயல்நாட்டில் பொய் தாய் நாட்டை குறை பேசும் ஒரு மனிதரை தமிழகம் ஏற்கலாம் ஆனால் வடமாநிலங்கள் தெளிவுடன் இருக்கிறது அந்த மக்களுக்கு நன்றி


Gopalakrishnan Thiagarajan
டிச 12, 2024 11:32

அப்போ பங்களாதேஷ், ரோகின்யா கும்பலுக்கு ஃப்ரீ பார்டர் திறப்பு தான்


Ramalingam Shanmugam
டிச 12, 2024 11:04

அப்ப லாலி பாப் சில்லுண்டிய கவுத்துடீங்களா? பப்பு மெக்ஸிகோ பாட்டையா போகலாம் வாங்க


RAMAKRISHNAN NATESAN
டிச 12, 2024 10:27

எங்க புலிகேசு மன்னரு ஆதரிக்காமயே முடி சூட்டிக்கிட்டீங்களே... இதனாலதான் ஆரியம் காரியம் ன்னு பேசுறாங்களோ ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை