உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்திற்கு எதிர்ப்பு; மம்தா மீது அமித் ஷா குற்றச்சாட்டு

ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்திற்கு எதிர்ப்பு; மம்தா மீது அமித் ஷா குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: முஸ்லிம் ஓட்டு வங்கியை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக 'ஆபரேஷன் சிந்தூர்' மற்றும் வக்ப் சட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்க்கிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.மேற்கு வங்கத்திற்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என பா.ஜ., திட்டமிட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி அங்கு சென்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.,வின் மூத்த தலைவருமான அமித்ஷா அம்மாநிலத்திற்கு சென்றுள்ளார்.முர்ஷிதாபாத்தில் நடந்த கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: முஸ்லிம் ஓட்டு வங்கியை திருப்திப்படுத்துவதற்காக ஆபரேஷன் சிந்தூர் மற்றும் வக்ப் சட்டத்தை முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்த்து வருகிறார். இதன் மூலம் இந்நாட்டின் தாய்மார்களையும், சகோதரிகளையும் அவர் அவமதித்து உள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை விமர்சித்த மம்தாவுக்கும், அவரின் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கும் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்.வக்ப் சட்டத்திற்கு எதிராக முர்ஷிதாபாத்தில் நடந்த கலவரம் மாநில அரசின் ஆதரவுடன் நடந்தது. அப்போது சிஆர்பிஎப் வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட மத்திய உள்துறை அமைச்சகம் முயற்சித்தது. ஆனால், அதற்கு மம்தா ஆதரவு தரவில்லை. இதனால், கலவரம் தொடர்ந்தது. திருப்திபடுத்தும் அரசியலுக்காக வக்ப் சட்டத்திற்கு மம்தா எதிர்ப்பு தெரிவிக்கிறார்.வங்கதேசத்தவர்கள் எளிதாக ஊடுருவ வேண்டும் என்பதற்காக மேற்கு வங்க மாநில எல்லையை முதல்வர் மம்தா திறந்துவிட்டு உள்ளார். அவரால் ஊடுருவல்காரர்களை தடுத்து நிறுத்த முடியாது. பா.ஜ., வால் மட்டுமே முடியும். எல்லை பாதுகாப்பு படையினருக்கு தேவையான நிலத்தை மம்தா தலைமையிலான அரசு ஒதுக்கவில்லை. அந்த நிலத்தை ஒதுக்கிய பிறகு, ஊடுருவல் தடுத்து நிறுத்தப்படும். அப்படிநடக்கக்கூடாது என்பதற்காக தான் நிலத்தை தர மாநில அரசு மறுக்கிறது.இவ்வாறு அமித்ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

saravanan
ஜூன் 01, 2025 20:50

தான் ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பாம்புகளுக்கு பால் வார்த்து கொண்டிருக்கிறார் மம்தா பானர்ஜி ஏற்கனவே சாரதா சிட்பண்டு ஊழலிருந்து தற்போதைய ஆசிரியர்கள் நியமனம் வரை ஏகப்பட்ட முறைகேடுகள் காலை சுற்றிக் கொண்டிருக்கும் நிலையில், தனது நிர்வாக தோல்வியை மூடி மறைக்கவும் வாக்கு வங்கியை தக்க வைத்து கொள்ளவும் சிறுபான்மையினர் என்ற போர்வையில் ஊடுருவும் சமூக விரோத சக்திகளுக்கு ஆதரவும், அடைக்கலமும் கொடுப்பது நாட்டின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக மாறும் .மேற்கு வங்கத்தில் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டுமானால் பாஜக ஆட்சி அமைந்தே ஆக வேண்டும் தங்கள் மாநில நலனுக்காகவும், எதிர்கால வளர்ச்சிக்காகவும் மேற்கு வங்க மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது...


Ramesh Sargam
ஜூன் 01, 2025 20:21

ஓட்டு வங்கிக்காகதான் இன்று நம் நாட்டில் பல அரசியல் கட்சிகள் அந்த அமைதி மார்கத்தினருக்கு ஆதரவு கொடுத்து நாட்டை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நாடு அழிந்தாலும் பரவாயில்லை, அவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதுதான் ஒரே குறி.


Svs Yaadum oore
ஜூன் 01, 2025 19:40

கொல்கத்தா போலீஸ், ஆயிரம் மைல் கடந்து வந்து 20 வயது பெண்ணை டெல்லி குருகிராமில் கைது செய்து இரவோடு இரவாக கொல்கத்தா அழைத்து சென்றது . அந்த பெண் என்ன பயங்கரவாதியா.? இத்தனைக்கும் அந்த பெண் பதிவை நீக்கி மன்னிப்பும் கேட்டுள்ளார் ..இதே கொல்கத்தா போலீஸ் மேற்கு வங்க எம் பிக்கள் ஹிந்து மதத்தை கேவலமாக பேசிய பொது என்ன நடவடிக்கை எடுத்தது ?


Svs Yaadum oore
ஜூன் 01, 2025 19:21

வங்கதேசத்தவர்கள் எளிதாக ஊடுருவ வேண்டும் என்பதற்காக மேற்கு வங்க மாநில எல்லையை முதல்வர் மம்தா திறந்துவிட்டு உள்ளார்....எல்லை பாதுகாப்பு படையினருக்கு தேவையான நிலத்தை மம்தா தலைமையிலான அரசு ஒதுக்கவில்லை. அந்த நிலத்தை ஒதுக்கிய பிறகு, ஊடுருவல் தடுத்து நிறுத்தப்படும். அப்படிநடக்கக்கூடாது என்பதற்காக தான் நிலத்தை தர மாநில அரசு மறுக்கிறது.....ஆனால் இதை மறைத்து ஊடுருவலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இங்குள்ள விடியல் திராவிட யோக்கியனுங்க பேசுவானுங்க......


Svs Yaadum oore
ஜூன் 01, 2025 19:14

மேற்கு வங்க மேடம் பழிவாங்கும் செயல் ....20 வயது பெண் ஷர்மிஸ்தா சிறுபான்மை க்கு எதிராக பதிவு செய்தார் என்று குற்றச்சாட்டு சுமத்தி சிறையில் அடைப்பு ...மேற்கு வங்க மேடத்தின் காலை கழுவி பிழைக்கும் கொல்கத்தா போலீஸ் ஆயிரம் மைல் கடந்து வந்து 20 வயது பெண்ணை டெல்லி குருகிராமில் கைது செய்து இரவோடு இரவாக கொல்கத்தா அழைத்து சென்றது ..அந்த பெண் என்ன பயங்கரவாதியா.??...இத்தனைக்கும் அந்த பெண் பதிவை நீக்கி மன்னிப்பும் கேட்டுள்ளார் ..இதே கொல்கத்தா போலீஸ் மேற்கு வங்க எம் பிக்கள் ஹிந்து மதத்தை கேவலமாக பேசிய பொது என்ன நடவடிக்கை எடுத்தது ?? ...இந்த பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பவன் கல்யாண் ...


Pandi Muni
ஜூன் 01, 2025 19:14

வந்தேறி ஓட்டு வங்கியை NIA காலி செய்தாக வேண்டியது காலத்தின் கட்டாயம்


சமீபத்திய செய்தி