உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு: மம்தா கோரிக்கை

வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு: மம்தா கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: வங்கதேசத்தில் இருந்து இந்தியா திரும்ப விரும்புபவர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள், ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல், இஸ்கான் அமைப்பின் முன்னாள் நிர்வாகி சின்மோய் கிருஷ்ணதாஸ் கைது, அதைத் தொடர்ந்து ஹிந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த விஷயத்தில் தலையிட்டு, வங்கதேசத்தில் வசிக்கும் ஹிந்துக்களை காப்பாற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை எழுந்தது. சமீபத்தில் வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, டாக்கா சென்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: வங்கதேசத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என விரும்புகிறோம். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதுடன், இந்தியா திரும்ப விரும்புபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.இந்தியா வங்கதேச எல்லை ஒன்று கூட முடப்படவில்லை. அப்படி மூடியிருந்தால் தகவல் வந்து இருக்கும். இந்த விவகாரம் மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும் என விரும்புகிறோம். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

A.Balamurugan
டிச 12, 2024 21:03

மே.வங்க தலைவி தனது மாநிலத்தில் உள்ள ஹிந்துக்களை முதலில் காப்பாற்றினாலே போதும். அவர் வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மை மக்களை காப்பாற்ற வேண்டும் என்பது வேடிக்கை வேஷம் நாளை இதே நிலை மே .வ விரைவில்... வாக்கு வங்கி க்காகவும் நாற்காலிக்காவும் ,நீங்கள் செய்கிற செயலை இறைவன் காண்கிறான். அன்று அவரவருக்கு தனி நாடு கொடுத்த பிறக்கும் இங்கே இருக்க விரும்பினால் இருக்கலாம் என்றுசொன்ன காரணத்திற்காக இன்று இந்தியா தனது பொருளாதாரத்தின் பாதி பங்களிப்பை தேச விரோதிகளிடமிருந்து நாட்டைப்பாதுகாக்க செலவு செய்ய வேண்டிய கட்டாயநிலையில் உள்ளது..


வைகுண்டாஸ்வரன், chennai
டிச 12, 2024 09:27

சாது மிரண்டால் காடு கொள்ளாது. நினைவிருக்கட்டும் இஸ்ரேல்ன் நடவடிக்கை...பூண்டஓடு அழிக்க படும்


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 12, 2024 15:32

அநாகரிகமான வார்த்தைகள் தவிர்க்க தினமலர் அறிவுறுத்த வேண்டும்


Ram
டிச 12, 2024 07:16

இந்த பொம்பளையை முதலில் நாடுகடத்தவேண்டும்


நிக்கோல்தாம்சன்
டிச 12, 2024 06:26

உழைக்காமல் உண்டுகொழிக்கும் மக்கள் எப்போதும் அடுத்தவர்களை அடக்கியாலதான் முயல்கிறார்கள் அப்படியிருப்பவர்கள் தான் எல்லாவகையிலும் மற்றையோருக்கு தொல்லை கொடுத்து அவர்களின் உழைப்பை சுரண்டுகிறார்கள் , இலவசமாய் பெற்று வாழ்கிறார்கள்


Indhuindian
டிச 12, 2024 05:13

ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுததாம்


Indhuindian
டிச 12, 2024 05:12

நீங்களும் உங்க மேற்கு வங்காளத்துலே பெரும்பான்மை இந்துகளுக்கு பாதுகாப்பு குடுங்க ஒரே அராஜகம் இருக்கு


RAJ
டிச 12, 2024 00:59

என்ன அநியாயம்... முதலை கண்ணீர் விடுது ..


G Mahalingam
டிச 11, 2024 23:42

இஸ்லாமிய மதத்தை இஸ்லாமியரே அழித்து வருகிறார்கள்.


Venkatesan Srinivasan
டிச 11, 2024 22:44

ஆடு நனைகின்றதே என்று ஓநாய் அழுத கதை. மேற்கு வங்கத்தின் எல்லையை ஒட்டி ஈஸ்ட் இந்து பெங்கால் என்ற புதிய தேசம் ஒடுக்கப்பட்ட இந்து கிருத்துவ புத்த ஜைன சிறுபான்மையினர் மட்டுமே கொண்ட முற்றிலும் ரோஹிங்யாக்கள் தவிர்த்து உருவாக்கப்பட்டு நம் இந்திய அரசின் நேரடி கண்காணிப்பில் குறிப்பாக மேற்கு வங்கத்தின் தலையீடு இன்றி நிர்வாகம் செய்ய வேண்டும். மேலும் மேற்கு வங்காளம் மற்றும் பாரதத்தின் இன்ன பிற பகுதிகளில் ஊடுருவியுள்ள பங்களாதேஷி மற்றும் ரோஹிங்யாக்களை கண்டுபிடித்து அந்த புதிய தேசத்திற்கு அப்பால் கொண்டு விட வேண்டும்.


Jay
டிச 11, 2024 22:16

கடைசியில் ஒரு ஆதரவு குரல் எழுப்பினாரே? தேச துரோகத்தையும், உள்ளுர் கலாச்சாரத்தை ஒழிக்க நினைக்கும் கட்சிகளை நாம் எப்போது அடையாளம் காண போகிறோம்?