உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மம்தாவுக்கு அடுத்த சிக்கல்: அதிருப்தி எம்எல்ஏக்களுடன் 23 எம்பிக்கள் தொடர்பு

மம்தாவுக்கு அடுத்த சிக்கல்: அதிருப்தி எம்எல்ஏக்களுடன் 23 எம்பிக்கள் தொடர்பு

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் குழுவுடன் அக்கட்சியின் 23 எம்பிக்கள் தொடர்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மேற்கு வங்கத்தில் ஆட்சியை இழந்த பிறகு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி வெடித்துள்ளது. பல தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜ உள்ளிட்ட மற்ற கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர். மம்தாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த 2 எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். 80 எம்எல்ஏக்களில் 60 பேர், நீக்கப்பட்ட தலைவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால், நீக்கப்பட்ட ரிட்பிரடா பானர்ஜி அம்மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால், அக்கட்சித் தலைவர் மம்தாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், அடுத்ததாக எம்பிக்களும் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் தொடர்பில் உள்ளதாக கூறப்படுகிறது.அக்கட்சிக்கு லோக்சபாவில் 21 எம்பிக்களும், ராஜ்யசபாவில் 8 எம்பிக்கள் உள்ளனர். அவர்களில் 23 பேர் அதிருப்தி எம்எல்ஏக்கள் குழுவுடன் தொடர்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களும் மம்தாவின் உறவினரான அபிஷேக் பானர்ஜி செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்துள்ளதால், அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

manian
ஜூன் 06, 2026 12:59

Excellent example of downfall if one practices whimsical dictatorial tempestual way of running a govt.She got paid in the same coin.


தாஜா கூஜா அரசியல், மே வங்கம்
ஜூன் 06, 2026 06:12

தாஜா அரசியல் செய்தார். ஆனால் அவனுக இப்படி ambo ன்னு விட்டுட்டு போய்விட்டார்கள். அவனுக விசுவாசம் அவ்ளோ தான்.


sankaranarayanan
ஜூன் 05, 2026 20:06

விரைவிலேயே தமிழகத்தில் அரசியலில் ஆண்ட கட்சிகளின் எம்.பி.க்கள் எம்.எல் ஏக்கள் விரைவிலேயே பிரிந்து செல்ல திட்டம் வகுத்து பெரும்பான்மையானவர்கள் கட்சிகளைவிட்டு வெளியேறுவார்கள் பிறகு இரண்டு திராவிட கட்சிகளும் இருந்த இடமே தெரியாமல் போய்விடும் இதுதான் காலத்தின் சீற்றம் ஆண்டவனின் செயல் சனாதன தர்மத்தின் விளைவுகள்


சசிக்குமார் திருப்பூர்
ஜூன் 05, 2026 18:54

திமுகவுக்கு எதிராக ஏன் கிளம்பவில்லை என்றால் அங்கு முழு கிழடுகள் தான் உண்மை திமுக. மற்றவர்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள்.


சந்திரன்
ஜூன் 05, 2026 17:53

இன்னும் தோற்ற டீம்கா தலைவர் எதிராக யாரும் கிளம்பாதது ஆச்சரியம்


Hard Disc
ஜூன் 05, 2026 17:19

நிதிஷ் சந்திரபாபுவை நம்பி பிஜேபி இருக்க வேண்டாம் .. வங்கத்திலிருந்தும் தமிழகத்திலிருந்தும் ஆதரவுக்கரம் நீளும்


சமீபத்திய செய்தி