உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்குவங்கத்தில் செயல்படாத விரைவு நீதிமன்றங்கள்: மம்தா கடிதத்திற்கு மத்திய அரசு பதிலடி

மேற்குவங்கத்தில் செயல்படாத விரைவு நீதிமன்றங்கள்: மம்தா கடிதத்திற்கு மத்திய அரசு பதிலடி

புதுடில்லி: மேற்குவங்கத்தில் 123 விரைவு கோர்டுகள் அமைத்தும் செயல்படாமல் உள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசு பதில் அனுப்பியுள்ளது.மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த, 31 வயது பயிற்சி பெண் டாக்டர், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாட்டையே அதிர வைத்தது.இது தொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி , பிரதமர் மோடிக்கு கடந்த 22-ம் தேதி கடிதம் எழுதினார். அதில் புள்ளிவிவர அடிப்படையில் நாடு முழுதும் தினமும் 90 பலாத்கார வழக்குகள் பதியப்படுவது வேதனை அளிக்கிறது. இத்தகைய கொடூரமான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது மத்திய சட்டத்தின் கீழ் விரைவாக விசாரணை நடத்தி, விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, வழக்கினை 15 நாட்களுக்கு முடிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.இவரது கடிதத்திற்கு மத்திய அரசு பதில் அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,பாலியல் பலாத்கார வழக்குகள், பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மத்திய அரசு 2019-ம் ஆண்டே விரைவு நீதிமன்றங்களை அமைத்துள்ளது.கடந்த ஜூலை 01-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட பாரதீய நியாய சன்ஹிதா சட்டத்தின்படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடுமையான தண்டனைகளை வழங்குவது வலியுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக போக்சோ வழக்குகளை விசாரிக்க 20, பாலியல் பலாத்காரம் தொடர்பாக 103 என 123 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் பல இன்று வரை செயல்பாட்டில் இல்லை. இவ்வாறு அந்த பதில் கடிதத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சமூக நல விரும்பி
ஆக 26, 2024 22:59

மம்தா பானர்ஜிகு தீவிரவாத தொடர்பு மற்றும் அந்நிய நாடுகளில் இருந்து வரும் பெரும் தொகை இவைகளை இழக்க தயார் இல்லை. அதனால் தீவிரவாதிகள் மீது வழக்குகள் பதிவது இல்லை. மாகள் பிரச்சினை பற்றி கவலை படுவது இல்லை. அதனால் நாட்டில் என்ன நடக்கிறது என்றே அவருக்கு தெரிவது இல்லை


Dr Govind Thurai
ஆக 26, 2024 22:27

இப்படியே மக்களை குழப்பி ஆட்சி அதிகாரத்தில் திளைக்கும் அரசியலார்....


gmm
ஆக 26, 2024 21:05

கொலை, கொள்ளை, பலாத்காரம், போதை பொருட்கள் விற்பனை, சமூக குற்றங்கள், ஊடுருவல் போன்றவை ஒரு மாநிலத்தில் அதிகரிக்கும் போது, விரைவு நீதிமன்றங்கள் செயல்பட்டால், குற்றவாளிகள் கோபம் அதிகரிக்கும் என்று அஞ்சி தான் நீதிமன்றமங்கள் செயல்பட மம்தா அக்கறை கொள்ளவில்லை. கேள்வி கேட்க முடியாத, சட்டம் ஒழுங்கு மாநில நிர்வாகத்தின் கீழ் மட்டும் இருக்கும் வரை குற்றங்கள் குறையாது.


M Ramachandran
ஆக 26, 2024 20:26

ஓட்டுக்காக வங்காள ஹிந்துக்களை வஞ்சித்து விட்டார். முஸ்லீம்கள் ஒட்டு பெற வங்காள ஹிந்துக்களை வஞ்சித்து விட்டார். நீதிமன்றம் மம்மதாவின் இந்த அடாவடி செயலைய்ய கண்டித்துள்ளது. மம்மத மூக்கறுபட்டு முக்காடு போட்டு உக்காந்திருக்கிறார்


M Ramachandran
ஆக 26, 2024 20:25

ஓட்டுக்காக வங்காள ஹிந்துக்களை வஞ்சித்து விட்டார். முஸ்லீம்கள் ஒட்டு பெற வங்காள ஹிந்துக்களை வஞ்சித்து விட்டார். நீதிமன்றம் மம்மதாவின் இந்த அடாவடி செயலைய்ய கண்டித்துள்ளது.


chennai sivakumar
ஆக 26, 2024 20:22

கடிதம் எழுதி என்ன பயன். ஆட்சியை கலைத்து மிலிட்டரி ரூல் கொண்டுவர முடியாதா??


M Ramachandran
ஆக 26, 2024 20:16

மமமதை மம்தா இப்போ முடிந்த வரை பேசாமல் இருப்பது தான் நலம். டிராமா செய்வதெல்லாம் மக்களிடம் எடுபடாது


முக்கிய வீடியோ