உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடிபோதையில் நண்பரை வெட்டி கொன்றவர் கைது

குடிபோதையில் நண்பரை வெட்டி கொன்றவர் கைது

பாலக்காடு: குடிபோதை தகராறில், நண்பரை அரிவாளால் வெட்டி கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கடம்பழிப்புரம் அழியன்னுாரை சேர்ந்தவர் ராமதாஸ், 54; கூலி வேலை செய்யும் இவரும், ஒற்றைப்பாலம் அம்பலப்பாறை பகுதி சண்முகன், 53, என்பவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் இரவு சண்முகன் வீட்டில், இருவரும் மது அருந்தினர். நேற்று காலை ரத்த வெள்ளத்தில் ராமதாஸ் இறந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள், ஒற்றைப்பாலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார், ராமதாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு போதையில் மயங்கிக் கிடந்த சண்முகனிடம் விசாரித்தனர்.விசாரணையில், போதையில் இருந்த போது, பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சண்முகன், சமையலறைக்கு சென்று அரிவாள் எடுத்து வந்து ராமதாசை வெட்டியதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. போலீசார், சண்முகனை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ