உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  ஆட்சேபனைக்குரிய பொருளை கோவில் வாசலில் வீசியவர் கைது

 ஆட்சேபனைக்குரிய பொருளை கோவில் வாசலில் வீசியவர் கைது

புதுடில்லி: கோவில் வாசலில் ஆட்சேபனைக்குரிய பொருளை வீசியவர் கைது செய்யப்பட்டார். வடகிழக்கு டில்லி தயால்பூரில் அமைந்துள்ள ஒரு கோவில் வாசலில், ஆட்சேபனைக்குரிய பொருள் கிடப்பதாக, போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்றனர். கோவில் வாசலில் கிடந்த ஆட்சேபனைக்குரிய பொருளை கைப்பற்றினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆட்சேபனைக்குரிய பொருளை கோவில் வாசலில் வீசியவரை கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்டவர் யார் என்ற விபரத்தை போலீசார் வெளியிடவில்லை. விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஏப் 19, 2026 19:52

தெய்வம் நின்று கொல்லும் என்று விட்டுவிடக்கூடாது. நம்மால் முடிந்த தண்டனையை அந்த குடிகாரனுக்கு கொடுக்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை