உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., ஆதரவு கோஷம் எழுப்பியவர் அடித்துக்கொலை: கர்நாடகாவில் 15 பேர் கைது

பாக்., ஆதரவு கோஷம் எழுப்பியவர் அடித்துக்கொலை: கர்நாடகாவில் 15 பேர் கைது

மங்களூரு: கர்நாடகாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர் அடித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 15 பேரை போலீசார் கைது செய்தனர்.கர்நாடகாவின் மங்களூரு நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள குடுப்பு கிராமம் உள்ளது. இங்கு இரு தினங்களுக்கு முன் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடந்தது. அப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஒருவர் கோஷமிட்டார். அதனால் 25க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து, கோஷமிட்டவரை தாக்கினர். பலத்த காயமடைந்த அந்த நபர் உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கினர்.சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:இந்த சம்பவம் கடந்த ஏப்.27 ஆம் தேதி பிற்பகல் பத்ரா கல்லுார்டி கோயில் அருகே நடந்தது. இறந்தவர் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை, அவர் தடிகளால் தாக்கப்பட்டதால், அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டன, இதனால் உள் ரத்தப்போக்கு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டனர்.இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Raj S
மே 01, 2025 00:26

இங்க சிறுத்தைனு சொல்லிக்கிட்டு ரெண்டு துர்நாற்றம் புடிச்ச எலிங்க அலையுது... அவங்களையும் கொஞ்சம் கவனிங்க மான ரோஷமுள்ள கர்நாடக மக்களே...


Anand
ஏப் 30, 2025 12:58

உண்ட வீட்டிற்கு ரெண்டகம் நினைப்பவர்களின் முடிவு இதுபோல தான் இருக்கும்.


karthik
ஏப் 30, 2025 11:14

எதற்காக அடித்தவர்களை கைது செய்யணும்? - என்ன வெறித்தனம் இருந்தால் பாக்கிஸ்தான் ஆதரவாக கோஷம் போடுவான்...இந்த மாறி ஆட்களை முதலில் வேரோடு தூக்க வேண்டும்.....


பெரிய ராசு
ஏப் 29, 2025 23:35

தரமான சம்பவம் ,, பரிசு தரவும் , தேசத்தின் மீது பற்று என்பது இனியது வகையில் இருக்கவேண்டும் ...பாக்கித்தான் வாழ்க என்றல் நீ அங்கே செல்லடா மூர்க்கப்பன்றி


krishnamurthy
ஏப் 29, 2025 21:11

இவனெல்லாம் நாட்டுக்கு தேவையா


Keshavan.J
ஏப் 30, 2025 12:49

நீ இருக்கும்போது அவர்களும் தேவை.


நிக்கோல்தாம்சன்
ஏப் 29, 2025 20:48

அடித்தவர்களும் அடிவாங்கியவனும் ஒரே வெளிநாட்டு இனத்தை சேர்ந்தவர்கள் , ஆகையால்


Ramesh Sargam
ஏப் 29, 2025 20:43

சரியான சம்பவம்தான். இந்தியாவில் இருந்து கொண்டு, இந்திய உணவை தின்று, இந்தியாவுக்கு எதிராக, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமா...? ஒருக்காலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. பாக்கிஸ்தான் வேண்டுமென்றால், பாக்கிஸ்தான் சென்றுவிடவும். ஏன் இங்கே இருந்துகொண்டு எங்கள் நிம்மதியை கெடுக்கிறாய்?


Sudha
ஏப் 29, 2025 20:39

இது போல் பல நிகழ்வுகள் வாய்ப்பு, பதிலடி கொடுக்கும் வரை. பாக் கோஷம் எழுப்பியவர் குடும்பம் வேலை போன்ற செய்திகளை வெளியிடவும், ராகுல் காந்தி போல நடந்து கொள்ள வேண்டாமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை